Home
News

இனி தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு சிரமம் இருக்காது.. பல சேவைகளை வழங்கும் புதிய ‘SwaRail’ செயலி..

சமீபத்தில் இந்திய ரயில்வே (Indian Railways) அமைப்பு ரயில் டிக்கெட் பதிவு முதல் ரயில் பயணம் சார்ந்த பல்வேறு சேவைகளை வழங்கும் SwaRail (ஸ்வாரயில்) என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்தது. ஆனாலும் இந்த செயலி ஆனது தற்போது பீட்டா சோதனைக்காக வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் இந்த செயலியானது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யம் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தால் (CRIS) உருவாக்கப்பட்ட இந்த SwaRail ஆனது இந்திய ரயில்வேயின் அனைத்து பொதுப் பயன்பாடுகளையும் ஒருங்கிணைக்கிறது.

இனி தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு சிரமம் இருக்காது.. ‘SwaRail’  செயலி!

அதாவது 'SwaRail' SuperApp ஆனது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட், பிளாட்ஃபாரட் டிக்கெட் முன்பதிவு, பார்சல் மற்றும் சரக்கு விசாரணைகள், ரயில் மற்றும் PNR நிலை விசாரணைகள், ரயில்களில் உணவு ஆர்டர்கள், புகார் மேலாண்மைக்கான ரயில் மடாட் போன்ற பல்வேறு சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இதில் தனிப்பட்ட ஒரு கடவுச் சொல்லை வைத்து உள்நுழைவதன் மூலம் அனைத்து சேவைகளையும் பெற முடியும் என்பது தான் சிறப்பு. தற்போதைய பயன்பாட்டில் உள்ள ஐஆர்சிடிசி (IRCTC ரெயில்கனெக்ட், யுடிஎஸ் மொபைல் ஆப் போன்ற தனித்தனி செயலிகளில் உள்ள எல்லா பயன்பாடுகளும் இந்த ஒரே SwaRail செயலியில் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ரயில் வருகை, புறப்பாடு மற்றும் அட்டவணைகளைச் சரிபார்க்க, பிஎன்ஆர் விசாரணை, தொடர்புடைய ரயில் தகவல்களையும் இந்த புதிய செயலி மூலம் எளிதில் பெற முடியும். மேலும் தற்போதைய பயன்பாட்டில் உள்ள RailConnect அல்லது UTS போன்ற செயலிகள் பயன்படுத்தும் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி இந்த SwaRail-ல் உள்நுழையலாம் என்று கூறப்படுகிறது.

அதேசமயம் m-PIN அல்லது பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தி எளிதாக SwaRail செயலியை பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய IRCTC Rail Connect சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரு இடத்தில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட SwaRail ஆப் இனி ஒரு சிறந்த செயலியாக இருக்கும் என்று கூறுகிறது ரயில்வே துறை.

இனி தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு சிரமம் இருக்காது.. ‘SwaRail’  செயலி!

தற்போது இந்த SwaRail ஆப் ஆனது பீட்டா சோதனையில் இருப்பதால், பயனாளிகள் தமது அனுபவங்களையும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், அதனடிப்படையில் மேலும் செயலியை மேம்படுத்துவதற்கும் இன்னும் அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும் SwaRail ஆப் வசதியில் தட்கல் (Tatkal) டிக்கெட் முன்பதிவு செய்வது எளிது என அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது ஐஆர்சிடிசியில் உள்ளபடியே இதிலும் காலை 10 மணிக்கு ஏ.சி பெட்டிகளுக்கும், காலை 11 மணிக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கும் டிக்கெட் புக் செய்ய முடியும். தற்போது இருக்கும் ஐஆர்சிடிசி ஆப்பை பொறுத்தவரையில் தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது பல நேரங்களில் இணையதள சேவை மிகவும் மெதுவாக இருக்கும். இதனால் பயணிகள் புக்கிங் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தார்கள். ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய SwaRail ஆப்பில் தட்கல் டிக்கெட் மிக எளிதாகவும், விரைவாகவும் புக் செய்ய முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tatkal booking is now easy: How to use Indian Railways swarail app and everything you need to know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X