Tatasky அதிரடி அறிவிப்பு: 2 மாத இலவச சேவை., யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Tatasky வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் 2 மாத இலவச சேவை கிடைக்கும் வரையிலான சலுகையை அந்த நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டாடா ஸ்கை புதிய சலுகை அறிமுகம்
டி.டி.எச் ஆபரேட்டர் இப்போது ஒரு புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சந்தாதாரர்கள் 12 மாதங்கள் பேக்காக ரீசார்ஜ் செய்யும் போது 2 மாத சேவையை இலவசமாக பெறலாம். இருப்பினும், இந்த சலுகையானது சிட்டி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி டாடா ஸ்கை கணக்கை ரீசார்ஜ் செய்யும் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா ஸ்கை கேஷ்பேக் சலுகை
டாடா ஸ்கை கேஷ்பேக் சலுகை அதன் அனைத்து சந்தாதாரர்களுக்கும் கிடைக்கும் என்றாலும், இந்த புதிய சலுகையானது சிட்டி பேங்க் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. டாடா ஸ்கை மொபைல் பயன்பாடு மற்றும் வலைத்தளம் வழியாக இந்த சலுகையைப் பெறலாம்.

சிட்டி வங்கி கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட்
2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து, டாடா ஸ்கை வெறும் ‘கேஷ்பேக்' சலுகையை வழங்கி வந்தது. தற்போது சிட்டி வங்கி கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் பயனர்களுக்கு இந்த சலுகை கிடைக்கிறது. சிட்டி வங்கி கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் பயன்படுத்தி 12 மாதம் அதாவது ஒரு வருட பேக் ரீசார்ஜ் செய்யும் போது 2 மாதத்திற்கான இலவச சேவை அளவிலான கேஷ்பேக் கிடைக்கும். இதுவும் கேஷ்பேக் பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

ஏழு நாட்களுக்குள் இரண்டாவது மாத கேஷ்பேக்
இதன்படி ரீசார்ஜ் செய்யும்போது, 48 மணி நேரத்திற்குள் பயனர்களுக்கு ஒரு மாத கேஷ்பேக் மற்றும் ஏழு நாட்களுக்குள் இரண்டாவது மாத கேஷ்பேக் வழங்கப்படும் என்று டாடா ஸ்கை கூறுகிறது. கேஷ்பேக் தொகையானது ஏழு வேலை நாட்களுக்குள் பயனரின் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த சலுகை ஜூன் 30, 2020 வரை மட்டுமே கிடைக்கிறது, மேலும் மாதத்திற்கு ஒரு சிட்டி வங்கி அட்டை மட்டுமே பயன்படுத்த முடியும்.

பிரபலமான DTH நிறுவனங்களில் ஒன்றான, Tata sky
பிரபலமான DTH நிறுவனங்களில் ஒன்றான, Tata sky நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான பல்வேறு திட்டங்களையும் சேனல்களையும் வழங்கி வருகிறது. தங்களது வாடிக்கையாளர்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு ஏற்ப வசதியை அடிப்படையாகக் கொண்டு டிடிஹெச் திட்டங்கள் உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கி வருகிறது.

கூடுதல் தொகுப்புகளையும் வழங்குகிறது
Tata sky நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை பூர்த்தி செய்வதற்கென கூடுதல் தொகுப்புகளையும் வழங்குகிறது. இந்த திட்டங்களில் பிராந்திய பொதிகள், க்யூரேட்டட் பொதிகள் போன்ற சில சேவைகளை தேர்வு செய்வது அதன் சிறப்புகளில் ஒன்றாக உள்ளது.

மிகவும் பயனுள்ள ஒரு இலவச அறிவிப்பு
அதேபோல் ஊரடங்கு உத்தரவின் காலத்தில், டாடா ஸ்கை நிறுவனம் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவின் போது தனது சிறப்பு சலகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு இலவசத்தை தற்போது அறிவித்துள்ளது டாடா ஸ்கை நிறுவனம்.

emergency free credit facility
இப்போது டாடா ஸ்கை நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அவசர இலவச கடன் வசதியை (emergency free credit facility) வழங்குவதாக அறிவித்துள்ளது.இதற்கு முன்பு டாடா ஸ்கை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதன் தனது ஃபிட்னஸ் சேனலை இலவசமாக வழங்குவதாக அறிவித்த கையோடு இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுன் நேரத்தில் சலுகை
இந்தியாவின் மிகப்பெரிய டி.டி.எச் சேவை வழங்குநரான டாடா ஸ்கை குறிப்பாக இந்த லாக்டவுன் நேரத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக இந்தியாவின் மிகப்பெரிய டி.டி.எச் சேவை வழங்குநரான டாடா ஸ்கை தொழில்நுட்ப ஆர்வலராக இல்லாதவர்களுக்கும், டீலர்களிடம் சென்று ரீசார்ஜ் செய்யும் பழக்கத்தினை கொண்டவர்களுக்கும் இந்த சலுகைளை அறிமுகம் செய்துள்ளது.

மிஸ்டு கால் கொடுத்தால் போதும்
மிஸ்டு கால் கொடுத்தால் போதும் டாடா ஸ்கை நிறுவனத்தின் இந்த இலவச சேவையை பெறும் வாடிக்கையாளர்கள், ஆக்டிவேட் செய்தபின்னர் வரவு வைக்கப்பட்ட தொகையானது கழிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவையைப் பெற பயனர்கள் வெறுமனே 080-61999922 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.

மில்லியன் கணக்கான சந்தாதாரர்கள்
அதேபோல், Tata Sky-க்கு மில்லியன் கணக்கான சந்தாதாரர்கள் கொண்டுள்ளது. அவர்களுக்கு உதவும் விதமாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு சிறந்த ஆதரவு அமைப்பு மற்றும் சுய உதவி விருப்பங்கள் டாடா ஸ்கை நிறுவனங்கள் வழங்குகிறது. இந்த வாடிக்கையாளர் ஆதரவு மையத்தை வாடிக்கையாளர்கள் தங்களது அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணை கொண்டு அனுக முடியும் என தெரவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications