Home
News

TATA-வா கொக்கா.. முதலில் ஓசூரில் மட்டும்.. இப்போ இந்தியா முழுவதும்.. iPhone அசெம்பிள்.. ஆரம்பிக்கலாமா!

டாடா குழுமம் (Tata Group) ஆப்பிள் சப்ளையர் ஆன விஸ்ட்ரான் இந்தியாவை (Wistron India) 100% கையகப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஆப்பிளின் ஐபோன் மாடல்களை நாட்டில் அசெம்பிள் செய்யும் முதல் இந்திய நிறுவனமாக (First Indian iPhone Manufacturer) டாடா குழுமம் மாறியுள்ளது.

டாடா க்ரூப் ஆனது விஸ்ட்ரான் இந்தியாவை கையகப்படுத்துதல் (Takeover) தொடர்பான பேச்சுகள் கடந்த ஒரு ஆண்டாகவே அடிபட்டு வந்தது. தற்போது ஒருவழியாக இந்த 'டேக்ஓவர்' நடந்துவிட்டது போல் தெரிகிறது. இதன்மூலம் இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்யும் ஆப்பிளின் சப்ளையர்களான ஃபாக்ஸ்கான் (Foxconn) மற்றும் பெகாட்ரான் (Pegatron) போன்ற நிறுவனங்களின் பட்டியலில் டாடா க்ரூப்பும் சேர்ந்துள்ளது.

TATA-வா கொக்கா.. முதலில் ஓசூரில் மட்டும்.. இப்போ இந்தியா முழுவதும்!

டாடா குழுமம் ஏற்கனவே ஆப்பிளுக்கான சில உதிரிபாகங்களை (Components) தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ளவொரு ஆலையில் (Hosur Plant in Tamil Nadu) உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. விஸ்ட்ரான் இந்தியாவை கையகப்படுத்தியன் மூலம் டாடா குழுமம் முழு அளவிலான ஐபோன் அசெம்பிளராக (Full-fledged iPhone Assembler) மாறியுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 14 (iPhone 14) மற்றும் பிற சமீபத்திய ஐபோன் மாடல்களை அசெம்பிள் செய்யும் ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான் போன்ற பிற சப்ளையர்கள் இந்தியாவில் இருந்தாலும் கூட, இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனம் என்றால்.. அது டாடா மட்டுமே ஆகும்.

TATA-வா கொக்கா.. முதலில் ஓசூரில் மட்டும்.. இப்போ இந்தியா முழுவதும்!

டிஎஃப் செக்யூரிட்டீஸ் இன்டர்நேஷனல் பகுப்பாய்வாளர் (TF Securities International analyst) ஆன மிங்-சி குவோ (Ming-Chi Kuo), ஆப்பிள் நிறுவனமானது அடுத்த ஆண்டு வாக்கில், சீனாவில் உள்ள இரண்டு பிராந்தியங்களில் அதன் உற்பத்தி அளவை கணிசமாக குறைக்கும் என்று கணித்துள்ளார். இதற்கிடையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் யூனிட்கள் உலகளவில் அனுப்பப்படும் சதவீதம் (Shipping) 2024 க்குள் 14 சதவீதத்திலிருந்து 20 முதல் 25 சதவீதமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2024இல் அறிமுகமாகும் ஐபோன் 16 சீரீஸிற்கு (iPhone 16 Series) அடுத்தப்படியாக வரும் ஐபோன் 17 சீரீஸின் (iPhone 17 Series) மேம்பாடுகள், முதல் முறையாக சீனாவிற்கு வெளியே நடக்கவுள்ளது என்றும் மிங்-சி குவோ கூறியுள்ளார். மேலும் அவரது கூற்றுப்படி, ஆப்பிள் நிறுவனமானது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன் 17-க்கான புதிய தயாரிப்பு அறிமுகத்திற்கான செயல்முறையை (New product introduction process) 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும்.

TATA-வா கொக்கா.. முதலில் ஓசூரில் மட்டும்.. இப்போ இந்தியா முழுவதும்!

அதனை தொடர்ந்து, ஆப்பிளின் வருடாந்திர வெளியீட்டு சுழற்சியின் (Annual release cycle) அடிப்படையில், ஐபோன் 16 மற்றும் ஐபோன் 17 சீரீஸ் முறையே 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படும். எதிர்பார்க்கப்பட்ட படியே ஆப்பிளின் லேட்டஸ்ட் மாடல்களாக ஐபோன் 15 சீரீஸ் கடந்த செப்டம்பர் மாதம் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ஐபோன் 15 சீரிஸின் கீழ் மொத்தம் 4 மாடல்கள் - ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus), ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro) மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) - வாங்க கிடைக்கிறது.

ஐபோன் 15 மாடலின் இந்திய விலை நிர்ணயம் ரூ.79,900 (128ஜிபி ஸ்டோரேஜ்) முதல் தொடங்குகிறது. இதேபோல ஐபோன் 15 பிளஸின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் (128ஜிபி) ரூ 89,900 முதல் வாங்க கிடைக்கிறது. அடுத்ததாக உள்ள ஐபோன் 15 ப்ரோவின் பேஸிக் வேரியண்ட் (128ஜிபி) ரூ.1,34,900 க்கும், கடைசியாக உள்ள ஐபோன் 15 ப்ரோ மேக்ஸின் பேஸிக் ஸ்டோரேஜ் (256ஜிபி) ஆப்ஷன் ரூ.1,59,900 க்கும் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tata Takeover Wistron India Become First Indian iPhone Manufacturer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X