மீண்டும் ஹெச்டி, எஸ்டி சேனலுக்கு விலையை குறைத்தது டாடா ஸ்கை.!
வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள டாடா ஸ்கை. ஹெச்டி மற்றும் எஸ்டி செட் -டாப் க்ஸ் திட்டங்களின் விலையை குறைத்து மீண்டும் அதிரவிட்டுள்ளது. தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது 2வத
வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள டாடா ஸ்கை. ஹெச்டி மற்றும் எஸ்டி செட் -டாப் க்ஸ் திட்டங்களின் விலையை குறைத்து மீண்டும் அதிரவிட்டுள்ளது.

தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது 2வது முறையாகும். இந்த விலை குறைப்பு என்பது தற்போது, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டிஷ் டிவி எதிராகவும், சந்தையில் உள்ள மற்ற வாடிக்கையாளர்களையும் இழுக்கவும் திட்டமிட்டுள்ளது.
கேபிள் வழியாக வாடிக்கையாளர்கள் அதிகம் பேர் பார்த்து வருவதால் அவர்களை குறி வைத்து டாடா ஸ்கை நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

டாடா ஸ்கை:
தற்போது முன்னணி டிடிஹெச் சர்வீஸ் இருந்து வருகின்றது டாடா ஸ்கை நிறுவனம். இந்தியாவில் ஏராளமான வாடிக்கையாளர்கயும் கொண்டுள்ளது. இந்த சந்தையில் இருக்கும் வெற்றிடங்களையும் நிரப்பும் நோக்கில் செயல்பட்டு வருகின்றது.
டாடா ஸ்கை நிறுவனம் விலையை குறைத்து அதிக சேனல்களையும் வழங்கி வருகின்றது. இதற்கு முன்பும் விலையை அதிரடியாக குறைத்து அதிரவிட்டது டாடா ஸ்கை. இந்நிலையில் இரண்டாவது முறையாக ஹெச்டி மற்றும் எஸ்டி சேனல் பிளானின்களில் அதிரடியாக விலையை குறைத்துள்ளது.

அதிரடியாக ரூ.300 குறைப்பு:
இந்த அறிவிப்பு குறித்து டாடா ஸ்கை நிறுவனம், ஹெச்டி மற்றும் எஸ்டி திட்டங்களின் விலையை ரூ.300 வரை அதிரடியாக குறைத்துள்ளது.
தற்போது டாடா ஸ்கை செட்டாப் பாக்ஸ் திட்டத்தை மலிவாக்கியுள்ளதால், இந்த திட்டத்திற்கான வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் வாய்ப்பு கூடியுள்ளது.

ஹெச்டி செட் ஆப் பாக்ஸ் விலை குறைவு:
டாடா ஸ்கை புதிய அறிவிப்பின் படி டாடா ஸ்கை ஹெச்டி செட் ஆப் பாக்ஸ் ரூ.1499 விற்பனையாகின்றது.
மேலும், எஸ்டி செட் ஆப் பாக்ஸ் தற்போது ரூ.1399க்கு விற்பனையாகின்றது. விலையைம் குறைக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டிஷ் டிவி விலையை விட குறைவு:
டிஷ் டிவியின் ஹெச்டி டிவி செட் ஆப் பாக்ஸ் விலையை ஒப்படுகிகையில், டாடா ஸ்கை செட் ஆப் பாக்ஸ் விலை மிகவும் மலிவானது. மேலும், டிஷ் டிவியில் செட் ஆப் பாக்ஸ் ரூ.1590க்கு விற்பனையாகின்றது. எஸ்டி செட் ஆப் பாக்ஸ் ரூ.1490 விலையாகவும் இருக்கின்றது.

டாடா ஸ்கையின் விலை குறைப்பு :
முன்னதாக கடந்த மாதம் செய்யப்பட்ட விலை குறைப்பிற்கு பின்னர், டாடா ஸ்கை ஹெச்டி செட் ஆப் பாக்ஸ் திட்டம் 1,800 ரூபாய் என்ற விலையிலும், டாடா ஸ்கை எஸ்டி செட்-ஆப் பாக்ஸ் திட்டம் 1,600 ரூபாய் என்ற விலையிலும் இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விலை குறைப்பின்படி 301 ரூபாயும், ஹெச்டி செட்-டாப் பாக்ஸ் திட்டம் 201 ரூபாயும் விலை குறைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications