ஜீன் 15: டாட்டா ஸ்கை: இனிமேல் இந்த ப்ளான் இல்லை !
டிராய் கொண்டு வந்த புதிய திருத்தம் கேபிள் ஆப்ரேட்டகள், டிடிஎச் நிறுவனங்களுக்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது என்று தான் கூறவேண்டும். பின்பு டிராய் கொண்டுவந்த புதிய திருத்தம் காரணமாக டாட்டா ஸ்கை,
ஏர்டெல் டிஜிட்டல், டிடிஎச் போன்ற நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக புதிய பேக்கேஜ்களை வழங்கி வந்தது.

நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ்
மேலும் சில நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரகளை தக்க வைக்க நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ் எனப்படும் என்எப்சி
கட்டணத்தை தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீன் 15-ம் தேதி
தற்சமயம் டாட்டா ஸ்கை நிறுவனம் புதிய அறிவிப்பை வெளயிட்டுள்ளது, அது என்னவென்றால் வருகின்ற ஜீன் 15-ம் தேதியில் இருந்து மல்டி டிவி பேக்குகளை கைவிடுவதாகவும், ஒவ்வொரு இணைப்பிற்கும் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.

மல்டி டிவி சேனல்
குறிப்பாக மல்டி டிவி சேனல்களை தேர்வு செய்தால் அதற்காக சலுகைகள் அளிக்கின்றோம் என்று கூறி இருந்தபோதிலும் டி.டி.எச் ஆப்ரேட்டர்களுக்கு இந்த செய்தி முறையாக போய் சேராததே காரணம் என்கிறது டாட்டா ஸ்கை நிறுவனம்.

கொடுக்கப்பட்ட சலுகைகள் முற்றிலும் நிறுத்தப்படும்
பின்பு வரும் 15-ம் தேதியில் இருந்து இந்த முறை அமல்படுத்தப்படும் என்பதால், கொடுக்கப்பட்ட சலுகைகள் முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது டாட்டா ஸ்கை நிறுவனம். மேலும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் புதிய திட்டங்களை தேர்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது
டாட்டா ஸ்கை நிறுவனம் இந்த அறிவிப்பை அறிவித்ததை தொடர்ந்து ஏர்டெல், டிஷ் டிவி, போன்ற பல்வேறு சேவை நிறுவனங்கள் புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications