டாடா ஸ்கை அதிரடி அறிவிப்பு .! இனி இந்த சேவை இலவசம்.!

|

டாடா ஸ்கை நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, இந்நிலையில் 21நாட்கள் முழு அடைப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மாற்றும் முயற்சியில் டாடா ஸ்கை களமிறங்கியுள்ளது.

 கூட்டப்பட்ட சேவை

அதன்படி இந்நிறுவனம் தற்சமயம் பிரபலமான டாடா ஸ்கை பிட்னெஸ் மதிப்பு கூட்டப்பட்ட சேவையை (VAS) வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளிக்க முடிவுசெய்துள்ளது. எனவே இந்த சேவை 21நாள் முழு அடைப்பு காலத்தில் இருக்கும் சந்தாதாரர்களுக்கு இலவசமாக கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆபரேட்டர்கள்

மேலும் மக்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடுவதால் டிடிஎச் ஆபரேட்டர்கள் இந்த சேவைகளுக்கு செலவழிக்கும் நேரத்தை அதிகரிப்பதை காண்கின்றனர், மேலும் தங்கள் சந்தாதரர்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதற்காக ஆபரேட்டர்கள் புதிய
சேவைகளை அறிமுகப்படுத்துகின்றனர்.

வீட்டில் இருந்தபடியே 1 மணி நேரத்துக்கு ரூ.1000 வரை சம்பாதிக்கலாம்: இதோ எளிய வழிமுறைகள்!வீட்டில் இருந்தபடியே 1 மணி நேரத்துக்கு ரூ.1000 வரை சம்பாதிக்கலாம்: இதோ எளிய வழிமுறைகள்!

D2H உறுதிப்படுத்தியது

குறிப்பாக இந்த அறிவிப்புக்கு முன்னதாக ஜனதா ஊரடங்கு உத்தரவு நாளில் ஒரு நாள் கட்டணங்கள் நீக்கப்பட்டதை D2H உறுதிப்படுத்தியது. இப்போது, ​​டாடா ஸ்கை தனது உடற்பயிற்சி மையமான VAS இலவசமாக அளிக்க முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

21நாட்கள்

இதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாடு முழுவதும் 21நாட்கள் முழுமையாக அடைக்கப்படும் என அறிவித்தார். மேலும் இந்த கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த உதவுமாறு பிரதமர் மக்களை வலியுறுத்தினார்.
இந்த நிலையில் டாடா ஸ்கை அறிவித்துள்ள புதிய உடற்பயிற்சி மைய தொகுப்பு நிச்சயமாக சந்தாதாரர்கள் வீட்டிற்குள் பூட்டப்படும்போது பொருத்தமாக இருக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பிட்னெஸ் சேனல் 110

டாடா ஸ்கை வழங்கும் இந்த பிட்னெஸ் சேனல் 110-ல் கிடைக்கும் என டெலிகாம் டாக் வலைதளம் தெரிவித்துள்ளது. இத மொபைல் ஆப் பயன்பாட்டில் லைவ் டிவி மற்றும் ஏழுனு-யிலும் கிடைக்கும் எனத் தெரிவக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிட்னஸ் வாஸ் என்பது மேடையில் மிகவும் பிரபலமான மற்றும் நீண்ட காலமாக இயங்கும் சேனல்களில் ஒன்றாகும், பின்பு இப்போது இந்த அறிவிப்புடன் பிட்னஸ் வாஸ் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் சந்தாதாரர்களை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனம் தெரிவித்துள்ளது

வாடிக்கையாளர்கள் ஆரோக்கியமாக இருக்கவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுவதே முதன்மை குறிக்கோள் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது டாடா ஸ்கை நிறுவனம். வீட்டில இருந்து வேலை செய்யும் பயனரகள் தங்கள் பயண நேரம் மிச்சமாவதால் இந்த சேவை அவர்களது ஆரோக்கியத்திற்கு பயன்படுத்திக்கொள்ள சரியான நேரமாக இருக்கும் என நிறுவனம் தெரிவிததுள்ளது.

ரகசியங்கள் ஆகியவற்றிக்காக

இந்த பிட்னஸ் சேனல் ஆனது பெண்களின் உடற்பயிற்சி,மூத்த குடிமக்களுக்கான உடற்பயிற்சி, ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் பிரபல உடற்பயிற்சி ரகசியங்கள் ஆகியவற்றிக்காக அர்ப்பணிக்கப்பட்ட தினசரி ஸ்லாட் அடங்கும் சேவையில்ஊடாடும் அமர்வுகளும் உள்ளன.

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா ஸ்கை பிட்னஸ் பொதுவாக நாள் ஒன்றுக்கு 2ரூபாயக்கு கிடைக்கிறது, இருப்பினும் இந்த முழுஅடைப்பு காலத்தில் இதுஇலவசமாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கண்டிப்பாக இந்த சேனல் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Tata Sky now offers free Fitness Value Added Service for customers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X