Home
News

நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய டாடா ஸ்கையின் புதிய விலை பட்டியல்.!

டிராய் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விலை திட்டத்துடன் இணையும் டாடா ஸ்கை நிறுவனம் இறுதியாக மேம்படுத்தப்பட்ட தனது சேனல் விலை பட்டியலை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

டிராய் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விலை திட்டத்துடன் இணையும் டாடா ஸ்கை நிறுவனம் இறுதியாக மேம்படுத்தப்பட்ட தனது சேனல் விலை பட்டியலை தற்பொழுது வெளியிட்டுள்ளது. புதிய கட்டுப்பாடு படி, டிராய் பயனர்கள் தேர்வு மற்றும் அவர்கள் பார்க்க விரும்பும் அந்தந்த சேனல்களுக்கு மட்டும் தொகை செலுத்தினால் போதும்.

டாடா ஸ்கை

டாடா ஸ்கை

டாடா ஸ்கை நிறுவனம் டிராய்யின் புதிய கட்டுப்பாட்டு கட்டமைப்பை கடைப்பிடிப்பதாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து டாடா ஸ்கை நிறுவனம் தனது சேனல் விலை மற்றும் பேக் விலைகளை ஜனவரி 31 ஆம் தேதி முதல் அமல்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.

 புதிய திட்டங்கள்

புதிய திட்டங்கள்

டாடா ஸ்கை அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டங்கள் சில வாரங்களில் சந்தாதார்களின் பயன்பாட்டிற்கு நடைமுறைப்படுத்தப்படுமென்று அறிவித்துள்ளது. புதிய திட்டங்களின் விலை பட்டியலை உங்களுக்காகத் தொகுத்து ஒரே இடத்தில் வழங்கியுள்ளோம்.

அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது டாட்டா ஸ்கை செயலி

அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது டாட்டா ஸ்கை செயலி

டாடா ஸ்கை பயனராக நீங்கள் இருந்தால், உங்களுக்குத் தேவைப்படும் சரியான பேக்கைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். விலை மற்றும் உள்ளடக்க இரு தரவரிசைகளின் அடிப்படையில் இருக்கும் திட்டங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு சேனல்களை சேர்ப்பது அல்லது அகற்றுவதற்கு அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது டாட்டா ஸ்கை பயன்பாடு செயலியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

எச்.டி சேனல்கள்

எச்.டி சேனல்கள்

உங்களுக்கு தேவையான முழு விபரங்களை அதிகாரப்பூர்வ டாடா ஸ்கை வலைத்தளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். எச்.டி சேனல்கள் மற்றும் அதிகப்படியான சேனல்களை சேர்க்கும் பொழுது விலை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிராய் கூறிய டிடிஹெச், கேபிள் கட்டணம் அமலுக்கு வந்தது.!

டிராய் கூறிய டிடிஹெச், கேபிள் கட்டணம் அமலுக்கு வந்தது.!

டிராய் கூறிய படி பிப்ரவரி 1ம் தேதி முதல் டிடிஹெச் மற்றும் கேபிள் மாதாந்திர கட்டணம் மாறுதல் ஏற்படுகின்றது. இதில் 100 சேனல்கள் இலவசமாக கிடைக்கின்றது.

இதில் கூடுதலாக சேனல்கள் வேண்டும் என்றால், தனிக்கட்டணம் செலுத்த வேண்டும். இதில் ஜிஎஸ்டியும் சேர்த்து கட்டணத் தொகை அதிகரித்து உள்ளது. விருப்பமான சேனல்களுக்கு கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும் என்பதால் பொது மக்கள் சற்று கதிகலங்கி போய் உள்ளனர்.

புதிய கட்டணம் அமல்:

புதிய கட்டணம் அமல்:

தொலைக்காட்சி சேனல்களுக்கான புதிய கட்டண திட்டம் பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின்படி, ஜிஎஸ்டி சேர்த்து 153 ரூபாய் கட்டணத்தில் 100 இலவச சேனல்கள் வழங்கப்படும்.

இலவச சேனல்களின் விபரம்:

இலவச சேனல்களின் விபரம்:

தூர்தர்சனின் 25 சேனல்களும் அதில் அடங்கும். மற்ற 75 சேனல்களை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளலாம். 100க்கு மேற்பட்ட இலவச சேனல்கள் வேண்டும் என்றால், ஒவ்வொரு 25 சேனல்களுக்கும் கூடுதலாக 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

சேனல்கள் தேர்வு செய்ய வேண்டும்:

சேனல்கள் தேர்வு செய்ய வேண்டும்:

இது தவிர கட்டண சேனல்கள் தேவைப்பட்டால் அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும். ஜனவரி 31 ஆம் தேதியான வியாழக்கிழமைக்குள் வாடிக்கையாளர்கள் தங்களுக்குரிய சேனல்களை தேர்வு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே டிராய் அறிவித்திருந்தது. அதன்படி, டிடிஹெச் மற்றும் கேபிள் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் சேனல்களை தேர்வு செய்யுமாறு கூறி வருகின்றன.

பொது மக்களின் கருத்து :

பொது மக்களின் கருத்து :

இந்த புதிய விதிமுறையால் தற்போது இருப்பதை விட கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என ஒரு தரப்பினரும், கட்டணம் குறையும் என மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்:

பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்:

இந்த நிலையில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் புதிய கட்டண விதிமுறை அமல்படுத்தப்படுகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை என டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா திட்டவட்டமாக தெரிவித்தார். வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமமும் இன்றி புதிய மாற்றம் நடைமுறைக்கு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்

மாற்றம் செய்ய வேண்டும்:

மாற்றம் செய்ய வேண்டும்:

ஏற்கனவே நீண்ட கால பேக்கை தேர்வு செய்திருக்கும் வாடிக்கையாளர்கள், அந்த திட்டத்தையே தொடர விரும்பினால் டிடிஎச் நிறுவனங்கள் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். புதிய பேக்கை வாடிக்கையாளர் தேர்வு செய்ய விரும்பினால் அதற்கு ஏற்ப அவர் ஏற்கனவே செலுத்தி இருக்கும் கட்டணத்தில் டிடிஎச் நிறுவனங்கள் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்றும் டிராய் தலைவர் ஆர்எஸ். ஷர்மா தெரிவித்தார்.

டிராய்க்கு உத்தரவு :

டிராய்க்கு உத்தரவு :

இதற்கிடையே, புதிய கட்டண விதிமுறை தொடர்பான டிராயின் உத்தரவுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து, மத்திய அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேபிள் டிவி ஆபரேட்டர்கள் - விநியோகஸ்தர்கள் இடையிலான வருவாய் பங்கீடு குறித்தும் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Best Mobiles in India

English summary
Tata Sky new TV channel price list: All you need to know : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X