ரூ.7 முதல் சேனல்களை வழங்கும் டாடா ஸ்கை.!
100 சேனல்களை இலவசமாக டிடிஹெச் ஆப்ரேட்டர்கள் வழங்க வேண்டும் என்று டிராய் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து அனைத்து டிடிஹெச் கேபிள் நிறுவனங்களும் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சேனல்களுக்கு க
100 சேனல்களை இலவசமாக டிடிஹெச் ஆப்ரேட்டர்கள் வழங்க வேண்டும் என்று டிராய் அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து அனைத்து டிடிஹெச் கேபிள் நிறுவனங்களும் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சேனல்களுக்கு கட்டணமாக ரூ.130 என நிர்ணயம் செய்தது. மேலும் ஜிஎஸ்டி உள்ளிட்டவையும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கு ஒரு புறமும் வரவேற்பும் மறுபுறம் எதிர்ப்பும் இருக்கின்றது. இந்நிலையில் டாடா ஸ்கை நிறுவனம் தற்போது, ரூ 7 முதல் ரீஜினல் சேனல்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

டிராய் அறிவிப்பு:
100 சேனல்களை டிடிஹெச், கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் வழங்க வேண்டும் என்று அதிரடியாக டிராய் அறிவித்தது. மேலும், குறைந்தபட்ச கட்டணமாக டிராய் (தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) ரூ.130 என கட்டணம் நிர்ணயம் செய்தது.

ஜிஎஸ்டி அமுல் படுத்தியது:
கேபிள் கட்டணம் ரூ.130 உடன் ஜிஎஸ்டியும் சேர்த்து ஒரு மாதத்திற்கு கட்டணமாக ரூ. 151 நிர்ணயம் செய்தது. மேலும் இதுதவிர நாம் தேர்வு செய்யும் சேனல்களின் தொகுப்புகளுக்கு ஏற்பட கட்டணம் மாறும்.

அமலுக்கு வந்தது:
இந்த மாதம் பிப்ரவரி 1ம் தேதி முதல் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணம் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து டாடா ஸ்கை, சன் டிடிஹெச், ரிலையன்ஸ், ஏர்டெல், டிஸ்டிவி, வீடியோகான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளன.

ரூ.7 முதல் சேனல்கள்:
ரீஜினல் சேனல்களை டாடா ஸ்கை நிறுவனம் ரூ.7 முதல் வழங்குகின்றது. குறைப்பட்சமாக டாடா ஸ்கை நிறுவனம் சேனல்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. மொழிகளுக்கு ஏற்ப கட்டணங்கள் மாறுபட்டுள்ளன.

கட்டண விபரங்கள்:
குறைந்த பட்சமாக டாடா ஸ்கையில் ரூ.7 முதல் ரீஜினல் சேனல் கட்டணம் துவங்கின்றது. குறைந்தபட்சமாக தமிழ் கட்டணம் ரூ.71 ஆக இருக்கின்றது. அதிகபட்சமாக தமிழுக்கு 114 என நிர்ணயித்து உள்ளது.

மற்ற ரீஜினல்களுக்கு கட்டணம்:
இதேபோல மற்ற மொழி ரீஜினல்களுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications