Tata Sky எச்டி செட்-டாப் பாக்ஸ் மீதான சிறப்பு சலுகை! ஏர்டெல் எச்டி செட்-டாப் பாக்ஸை விட குறைவா?
டாடா ஸ்கை நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், அதன் டாடா ஸ்கை எச்டி செட்-டாப் பாக்ஸ் மீதான அசல் விலையின் மேல் ரூ.100 என்கிற விலைக் குறைவை 'சிறப்புச் சலுகை' என்ற பெயரில் அறிவித்துள்ளது. தற்பொழுது இந்த சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது.

டாடா ஸ்கை செட்-டாப் பாக்ஸ் இன் முந்தைய விலை
சமீபத்தில் டாடா ஸ்கை நிறுவனம் அதன் டாடா ஸ்கை எச்டி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டாடா ஸ்கை எஸ்டி செட்-டாப் பாக்ஸ் மாடல்களின் மீது ரூ.300 விலையை அதிகரித்து புதிய விலையை நிர்ணயம் செய்து விற்பனை செய்தது. டாட்டா ஸ்கையின் புதிய விலைப் பட்டியலின் படி, டாடா ஸ்கை எச்டி செட்-டாப் பாக்ஸை ரூ.1,499 என்ற விலையிலும், எஸ்டி செட்-டாப் பாக்ஸை ரூ.1,399 என்றும் விலையிலும் விற்பனை செய்யப்பட்டது.

சிறப்பு சலுகை விலை என்ன?
தற்பொழுது டாடா ஸ்கை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, புதிய டாடா ஸ்கை எச்டி செட்-டாப் பாக்ஸ் சிறப்பு சலுகையின் கீழ் வெறும் ரூ.1,399 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த விலையில் டாடா ஸ்கை நிறுவனம் முன்பு எஸ்டி செட்-டாப் பாக்ஸை வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் சலுகை எவ்வளவு நாட்கள் நீடிக்கும்?
டாடா ஸ்கை அறிவித்துள்ள இந்த சிறப்புச் சலுகை எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் தற்பொழுது இந்த சலுகையின் கீழ், முந்தைய எஸ்டி செட்-டாப் பாக்ஸ் விலையில் இப்பொழுது புதிய டாடா ஸ்கை எச்டி செட்-டாப் பாக்ஸ் வாங்க முடியும்.

ஏர்டெல் டிஜிட்டல் டிவி எச்டி செட்-டாப் பாக்ஸ் விலை என்ன?
டாடா ஸ்கை நிறுவனத்திற்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் அதன் ஏர்டெல் டிஜிட்டல் டிவி எச்டி செட்-டாப் பாக்ஸை ரூ.1300 என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது.

டிஷ் டிவி எச்டி செட்-டாப் பாக்ஸ் விலை என்ன?
அதேபோல் டிஷ் டிவி நிறுவனம் அதன் எச்டி செட்-டாப் பாக்ஸ் உடன் ஒரு மாத சந்தாவுடன் கூடிய வாழ்நாள் உத்தரவாதம் மற்றும் ரூ.2,000 மதிப்பிலான கூப்பன்கள் என அனைத்தையும் வெறும் ரூ.1,690 என்ற விலையில் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications