Tata Sky கட்டணம் அதிரடி விலை உயர்வு - கடுப்பில் வாடிக்கையாளர்கள்! இனி அந்த திட்டம் கிடையாது!

|

டாடா ஸ்கை நிறுவனம் தற்போது அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையை அதிரடியாக 150 சதவீதம் உயர்த்தியுள்ளது. ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது மட்டுமில்லாமல் அதை உடனடியாக நடைமுறையும் படுத்தியுள்ளது. இதனால் டாட்டா ஸ்கை வாடிக்கையாளர்கள் செம கடுப்பில் உள்ளனர்.

இனி 'இந்த' திட்டம் உங்களுக்கு கிடையாது

இனி 'இந்த' திட்டம் உங்களுக்கு கிடையாது

டாடா ஸ்கை வாடிக்கையாளர் நீங்கள் என்றால், அதுவும் டாட்டா ஸ்கை நிறுவனத்தின் குறைந்த விலை திட்டமான ரூ.20 திட்டத்தை ரீசார்ஜ் செய்பவர் நீங்கள் என்றால், நிச்சயம் டாட்டா ஸ்கை நிறுவனத்தின் புதிய அறிவிப்பு உங்களை உச்சக்கட்ட கடுப்பிற்கு ஆளாக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் இனி உங்களுக்கு டாட்டா ஸ்கையின் இந்த ரூ.20 திட்டம் கிடைக்கப்போவது இல்லை நேற்று நிறுவனம் அறிவித்துள்ளது.

என்ன காரணம்? ஏன் ரூ.20 திட்டம் இனி கிடைக்காது?

என்ன காரணம்? ஏன் ரூ.20 திட்டம் இனி கிடைக்காது?

என்ன காரணம்? ஏன் ரூ.20 திட்டம் இனி கிடைக்காது? அப்போ அதற்குப் பதிலாக நீங்கள் என்ன செய்வது போன்ற கேள்விகள் உங்கள் உள் எழுந்திருக்கும், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நிறுவனம் சொல்லியுள்ளது. பிப்ரவரி 11ம் தேதி முதல் இனி தனது வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த கட்டண ரீசார்ஜ் விருப்பமாக ரூ.50 திட்டம் மட்டுமே வழங்கப்படும் என்று டாட்டா ஸ்கை நிறுவனம் அறிவித்துள்ளது.

BSNL 4G Plans:இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் 4ஜி: தினசரி 10ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி..!BSNL 4G Plans:இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் 4ஜி: தினசரி 10ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி..!

ரூ.50-க்கு குறைவாக இனி ரீசார்ஜ் இல்லை

ரூ.50-க்கு குறைவாக இனி ரீசார்ஜ் இல்லை

ரூ.50-க்கு குறைவான விலையில் இனி டாட்டா ஸ்கை பயனர்களால் தங்கள் அக்கவுண்ட்டை ரீசார்ஜ் செய்ய முடியாது என்று டாட்டா ஸ்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி 2 எச் போன்ற நிறுவனங்களுடன் டாடா ஸ்கை நிறுவனமும் இணைந்துள்ளது. இப்பொழுது அனைத்து நிறுவனங்களும் குறைந்த விலை திட்டமாக ரூ.50 திட்டத்தை வழங்குகிறது.

பிப்ரவரி 11ம் தேதி முதல் நடைமுறை

பிப்ரவரி 11ம் தேதி முதல் நடைமுறை

இந்த அதிரடி விலை உயர்வு சார்ந்த அதிகாரப்பூர்வ தகவலை டாடா ஸ்கை நிறுவனத்தின் பிரதிநிதியான ஃபிர்டோஸ் பாத்திமா வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது " டாடா ஸ்கை வழங்கி வந்த ரூ.20 திட்டத்தின் விலையை ரூ.50 ஆக நிறுவனம் மாற்றியுள்ளது. பிப்ரவரி 11ம் தேதி 2020 முதல், டாட்டா ஸ்கை வலைத்தளம் அல்லது ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூ.50க்கு கீழ் எந்த திட்டமும் கிடைக்காது, அனுமதிக்கவும் படாது என்று கூறியுள்ளார்.

Google-ல் தேடவே கூடாத 10 விஷயங்கள்! வீனா ஆபத்தில் சிக்காதீர்கள்!Google-ல் தேடவே கூடாத 10 விஷயங்கள்! வீனா ஆபத்தில் சிக்காதீர்கள்!

11ம் தேதிக்கு முன்னாள் ரீசார்ஜ் செய்த பயனர்களின் நிலை என்ன?

11ம் தேதிக்கு முன்னாள் ரீசார்ஜ் செய்த பயனர்களின் நிலை என்ன?

அதேபோல், இந்த புதிய விலை திருத்தத் திட்டம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.20 திட்டத்தை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்திருந்தால், உங்கள் வேலிடிட்டி முடியும் வரை எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், வேலிடிட்டி முடிந்த பின்னர் அந்த பயனர்களுக்கும் ரூ.50 திட்டம் மட்டுமே கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

150% அதிகரித்துள்ள ரீசார்ஜ் மதிப்பு

150% அதிகரித்துள்ள ரீசார்ஜ் மதிப்பு

அதேபோல், இங்குக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டாட்டா ஸ்கை மற்றும் டி 2 எச் நிறுவனங்கள் தங்கள் சேவையை ரூ.50 திட்டத்திலிருந்து துவங்கினாலும், டிஷ் டிவி வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையாக ரூ.10 மட்டுமே வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டாட்டா ஸ்கை, தனது குறைந்தபட்ச ரீசார்ஜ் மதிப்பை 150% அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் அரசாங்கம் இந்தியாவிற்கு கொடுக்கப்போகும் சீறிப்பாயும் அதிநவீன ஆயுதங்கள் இதுதான்.!டிரம்ப் அரசாங்கம் இந்தியாவிற்கு கொடுக்கப்போகும் சீறிப்பாயும் அதிநவீன ஆயுதங்கள் இதுதான்.!

கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்ட வாடிக்கையாளர்கள்

கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்ட வாடிக்கையாளர்கள்

இந்த அதிரடி விலை மாற்றம் குறித்த தகவல்களை டாடா ஸ்கை நிறுவனம், அதன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் தெரிவித்துவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தினால், டாட்டா ஸ்கை பயனர்கள் இனி ரூ.50 செலுத்தினால் மட்டுமே அவர்களின் சேவையைத் தொடர முடியும் என்ற கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

Best Mobiles in India

English summary
Tata Sky DTH Provider Increased It's Rs.20 Minimum Recharge Plan To Rs.50 From Today : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X