டாடா ஸ்கை பயனர்களுக்கு குட் நியூஸ்.. இனி இந்த சேவை சேனல் எண் 653 இல் இலவசமாக கிடைக்கும்..

|

டாடா ஸ்கை தனது அனைத்து சந்தாதாரர்களுக்கும் 'Classroom' என்ற வகுப்பறை சேவையை இலவசமாக்கியுள்ளது. இந்த சேவை சேனல் எண் 653 இல் இலவசமாகக் கிடைக்கிறது மற்றும் டிவியில் கல்வி உள்ளடக்கத்திற்கான அணுகலை இது வழங்குகிறது. இதை பற்றிய கூடுதல் விபரங்களை இப்பொழுது பார்க்கலாம்.

டாடா ஸ்கை கிளாஸ்ரூம்

டாடா ஸ்கை கிளாஸ்ரூம்

டாடா ஸ்கை வகுப்பறை சேவை முதன்முதலில் 2016 இல் தொடங்கப்பட்டது, மேலும் கணிதம் மற்றும் அறிவியலுக்கான 700 க்கும் மேற்பட்ட அனிமேஷன் கான்செப்ட் வீடியோக்களுடன் வருகிறது. இந்த சேவை விளம்பரங்கள் இல்லாமல் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழியிலும் பயன்படுத்தக் கிடைக்கிறது. இதன் மூலம், டாடா ஸ்கை இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு டிவி மூலம் பாடங்களைக் கற்பிக்க முன்வந்துள்ளது.

மாணவர்களுக்காக இந்த சேவை இலவசம்

மாணவர்களுக்காக இந்த சேவை இலவசம்

பள்ளிகள் இன்னும் திறக்கப்படாதா நிலையில், ஆன்லைன் மூலம் மட்டுமே பாடங்களை மாணவர்கள் கற்று வருகின்றனர் என்பதனால் டாட்டா ஸ்கை இந்த சேவையை மாணவர்களுக்காக இலவசமாக்கியுள்ளது. டாடா ஸ்கை வகுப்பறை சேவை ஏற்கனவே உள்ள பயனர்கள் மற்றும் புதிய சந்தாதாரர்கள் ஆகிய அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும். நாடு முழுவதும் 22 மில்லியனுக்கும் அதிகமான இணைப்புகளைக் கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.

அடடே இது தெரியாம போச்சே.! 'டூ நாட் டிஸ்டர்ப்' மோடில் இவ்வளவு பயன் இருக்கா..?அடடே இது தெரியாம போச்சே.! 'டூ நாட் டிஸ்டர்ப்' மோடில் இவ்வளவு பயன் இருக்கா..?

சேனல் எண் 653

சேனல் எண் 653

மேலும் இந்த இணைப்புகள் அனைத்தும் சேனல் எண் 653 மூலம் அணுக கிடைக்கிறது. இந்த வகுப்பறை சேவை டிவியில் ஈடுபாட்டுடன் கற்பிக்கும் உள்ளடக்கத்தைக் கொண்டுவருகிறது, இதனால் மாணவர்கள் எந்தவொரு வசதியான நேரத்திலும் கல்வி உள்ளடக்கத்தை அணுக முடியும். கணிதம் மற்றும் அறிவியலின் அடிப்படைகளைக் கற்பிக்கும் அதே வேளையில், பாடங்களை அனிமேஷன் செய்யப்பட்ட கருத்து-கற்றல் வீடியோவாக இந்த தளம் வழங்குகிறது.

இலவச கிளாஸ்ரூம் நன்மை

இலவச கிளாஸ்ரூம் நன்மை

டாடா ஸ்கை வகுப்பறை சேவை 5 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பிட்டுள்ளபடி, இது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கிறது. வீடியோ பாடங்களைத் தவிர, கல்வி தொடர்பான கேம்ஸ்களும் இதில் உள்ளது. இவை ஈடுபாட்டுடன் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு அறிவையும் வழங்குகின்றது. இந்த சேனலில் கிடைக்கும் இலவச கிளாஸ்ரூம் நன்மையை நீங்களும் இலவசமாகப் பெற்று மகிழ்ந்திடுங்கள்.

Best Mobiles in India

English summary
Tata Sky Classroom Education Service Is Now Free To All Subscribers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X