மீண்டும் விலைகுறைப்பை அறிவித்துள்ள டாடா ஸ்கை நிறுவனம்.! முழுவிவரம்.!

|

சிறந்த டி.டி.எச் ஆபரேட்டரான டாடா ஸ்கை நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மற்ற நிறுவனங்களை விட இந்நிறுவனம் குறிப்பிட்ட சில சலுகைகளை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

 பிங்கே பிளஸ் செட்-டாப் பாக்ஸின் விலை

அதன்படி டாடா ஸ்கை நிறுவனம் ஆண்ட்ராய்டு டிவியை அடிப்படையாகக் கொண்ட பிங்கே பிளஸ் செட்-டாப் பாக்ஸின் விலையை தற்போது குறைத்துள்ளது. ஆரம்பத்தில் இது ரூ.5,999-என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது, பின்னர் அது ரூ.3,999-ஆக குறைக்கப்பட்டது.

மீண்டும் ஒரு விலைகுறைப்பை பெற்று

தற்போது மீண்டும் ஒரு விலைகுறைப்பை பெற்று ரூ.2,999-க்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலைக் குறைப்பு என்பது புதியவாடிக்கையாளர்களை மேடையில் ஈர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரூ.2,999 என்கிற விலை நிர்ணயம் மிகவும் போட்டித்தன்மை மிகுந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தேசிய தகவல் மையத்தில் சைபர் அட்டாக்! நாச வேலைக்கு பின்னனியில் யார் இருக்கிறார்கள்?தேசிய தகவல் மையத்தில் சைபர் அட்டாக்! நாச வேலைக்கு பின்னனியில் யார் இருக்கிறார்கள்?

பிங்கே பிளஸ் என்பது ஒரு

குறிப்பாக டாடா ஸ்கை பிங்கே பிளஸ் என்பது ஒரு செட்-டாப் பாக்ஸ்(எஸ்.டி.பி) ஆகும். இது ஒரு சாதாரண எஸ்.டி.பி போன்ற அனைத்து நேரடி சேனல்களையும் வழங்குகிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு டிவியையும் உங்களுக்கு வழங்குகிறது. எனவே ஹாட்ஸ்டார், ஜீ 5,அமேசான் ப்ரைம் வீடியோ போன்ற OTT சேவைகளை நீங்கள் பெற முடியும்.

சாதனத்தில் இடம்பெற்றுள்ள கூகுள்

பின்பு இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ள கூகுள் அசிஸ்டென்ட் உள்ளமைக்கப்பட்ட க்ரோம்காஸ்ட் மற்றும பிளே ஸ்டோர் போன்ற சேவைகள் மூலம் பிற ஆப்களின் தொகுப்பினையும் பதிவிறக்கலாம். குறிப்பாக இது 8ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 2ஜிபி ரேம் வசதியும் கொண்டுள்ளது. மேலும் எஸ்டி கார்டின் உதவியுடன் இதன் ஸ்டோரேஜை விரிவாக்கம் செய்ய முடியும்.

விலைகுறைப்பின் ஒரு

இந்த சாதனத்தின் விலைகுறைப்பின் ஒரு பகுதியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார், சன்நெக்ஸ்ட், ஹங்காமா ப்ளே, ஈரோஸ் நவ்போன்ற பரீமியம் ஒடிடி உள்ளடக்கத்திற்கான 6மாத கால இலவச அணுகலையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். பின்பு 3மாத அமேசான் ப்ரைம் சந்தாவையும் இலவசமாக பெறமுடியும். குறிப்பாக 6மாத காலம் முடிந்த பின்பு பயனர் பிங்கே சேவைக்கு மாதத்திற்கு ரூ.299(இதுரூ .249 இலிருந்து ரூ.299 ஆக அதிகரித்துள்ளது) செலுத்த வேண்டும்.

தேசிய தகவல் மையத்தில் சைபர் அட்டாக்! நாச வேலைக்கு பின்னனியில் யார் இருக்கிறார்கள்?தேசிய தகவல் மையத்தில் சைபர் அட்டாக்! நாச வேலைக்கு பின்னனியில் யார் இருக்கிறார்கள்?

எல்இடி,எல்சிடி அல்லது

மேலும் இது 4கே, எச்டி, எல்இடி,எல்சிடி அல்லது பிளாஸ்மா தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து வகையான டிவிகளுடனும்இணக்கமானது. ஏனெனில் எச்டிஎம்ஐ அவுட்புட்டை ஆதரிக்கிறது மற்றும் ஆடியோ மற்றும் வீடியோ கேபிள் பழைய டிவி செட்களுடனும்இணைக்கப்படலாம்.

டாடா ஸ்கை பிங்கே +

குறிப்பாக டாடா ஸ்கை பிங்கே + வழங்கும் ஆறு மாத ஒடிடி உள்ளடக்கத்தின் நன்மையின் கீழ் பயனர்கள் கடந்த 7நாட்களாக தவறவிட்ட நிகழ்ச்சிகளை கூட பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Tata sky Binge Plus Set Top Box Price Slashed in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X