டாடா ஸ்கை நிறுவனம் அறிவித்துள்ள இலவச சேவை.! 6மாதம்.! என்ன தெரியுமா?

|

டெலிகாம் நிறுவனங்கள இந்த கொரோனா காலத்தில் பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த டெலிகாம் நிறுவனங்களுக்கு அடுத்து DTH நிறுவனங்களும் பல்வேறு இலவச சலுகைகள் மற்றும் சிறப்பான திட்டங்களை அறிவித்து வருகிறது.

பிங்கே+ செட்-டாப்

அதன்படி டாடா ஸ்கை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாத காலம் இலவச டாடா ஸகை பிங்கே சேவைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த இலவச சேவையானது ரூ.3999என்கிற (பழைய விலை ரூ.5999 ஆகும்) விலையில் பிங்கே+ செட்-டாப் பாக்ஸ்(எஸ்.டி.பி) வசதியுடன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிங்கே+ வாங்குபவர்களுக்கு

மேலும் இந்த புதிய பிங்கே+ வாங்குபவர்களுக்கு அமேசான் ப்ரைம் வீடியோவிற்கான மூன்று கால இலவச சந்தாவையும் டாடாஸ்கை நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா ஸ்கை பிங்கே சேவையை

சுருக்கமாக இந்த டாடா ஸ்கை பிங்கே சேவையை பற்றி கூறவேண்டும் என்றால், பயனர்களுக்கு என்எக்ஸ்டி,ஹங்காமா ப்ளே, டிஸ்னி +, ஹாட்ஸ்டார், ஈரோஸ் நவ், ஷெமரூ மீ உள்ளிட்ட ஓடிடி தளங்களை மாதம் ரூ.249என்ற விலையில் அணுக உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பறிபோனது 2.2 கோடி பயனர்களின் தனிநபர் தகவல்கள் - ஹேக்கர்கள் கைவரிசை! எங்கு தெரியுமா?பறிபோனது 2.2 கோடி பயனர்களின் தனிநபர் தகவல்கள் - ஹேக்கர்கள் கைவரிசை! எங்கு தெரியுமா?

பிங்கே பிளஸின் இந்த

எனவே டாடா ஸ்கை பிங்கே பிளஸின் இந்த குறைக்கப்பட்ட விலை, தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு தங்களிடம் இருக்கும்எஸ்டிபி-யை மேம்படுத்தவும் அல்லது மல்டி டிவி இணைப்பிற்கான பிங்கே+ சேவையை தேர்ந்தெடுப்பதற்கும் உதவும்.

பிங்கே+ ஆனது பயனர்களின்

இந்த டாடா ஸ்கை பிங்கே+ ஆனது பயனர்களின் ஆண்ட்ராய்டு சாதனத்தில் லைவ் டிவி, OTT உள்ளடக்கத்தை பார்க்கஉதவுகிறது. மேலும் OTT ஆப்ஸ் மற்றும் லைவ் டிவிக்கு இடையில் தங்கு தடையின்றி மாறவும் உதவுகிறது. பின்பு டாடா ஸ்கை பிங்கே+ எஸ்டிபி-யில் கூகுள் அசிஸ்டென்ட் இயக்கப்பட்டிருக்கும், அதே சமயம் க்ரோம் காஸ்ட் வசதியும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பிங்கே+ எஸ்.டி.பி ஆனது

டாடா ஸ்கை நிறுவனத்தின் இந்த பிங்கே+ எஸ்.டி.பி ஆனது கடந்த ஜனவரி மாதம் ரூ.5999-என்கிற விலையில் புதிய
வாடிக்கையாளர்களுக்கும், தற்போதுள்ள வாடிக்கையாளர்களையும் குறிவைத்து அறிமுகமானது. ஏற்கனவே நிறுவனத்தின் கீழ் உள்ள வாடிக்கையாளர்களுக்கு டாடா ஸ்கை பிங்கே+ எஸ்.டி.பி மீது ரூ.1000கேஷ்பேக் கிடைக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்தது. தற்போது ரூ.2000-வரை பொதுவான விலைகுறைப்பை பெற்றுள்ளது.

டிஷ் டிவி

இதேபோன்று ஏர்டெல் டிஜிட்டல், டிஷ் டிவி, டி2ஹெச் போன்ற நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு டிவியில் இயங்கும் டிஸ்டிபி-களைஅதன் பயனர்களுக்கு வழங்குகின்றன. அதில் டிஷ் டிவி தனது டிஷ்எஸ்எம்ஆர்டி ஹப்பை தனது வாடிக்கையாளர்களுக்குரூ.2499என்ற விலையில், ஒரு மாத இலவச சந்தாவுடன் வழங்குகிறது.

2 ஹெச் ஸ்ட்ரீம்

டி 2 ஹெச் நிறுவனமும் டி 2 ஹெச் ஸ்ட்ரீம் எஸ்டிபியை ரூ.2499 க்கு வழங்குகிறது, இந்நிறுவனம் புதிய பயனர்களுக்கு இந்தசேவையை ரூ.3.999-விலையில் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் டிஜிட்டல்

அதேபோல் ஏர்டெல் டிஜிட்டல் தனது க்ஸ்ட்ரீம் பாக்ஸை புதிய பயனர்களுக்கு ரூ.3999 விலையில் வழங்கி வருகிறது, ஆனால்ஏர்டெல் தேங்க்ஸ் உறுப்பினர்கள் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸை ரூ.2249 விலையில் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Tata Sky Binge+ now Offers 6 Months Free Subscription: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X