அதிரடி சலுகையை அறிவித்த டாடா ஸ்கை: அதற்கு இதுதான் சரியான நேரம்!

|

டாடாஸ்கை செட் டாப் பாக்ஸ்-க்கு நிறுவனம் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் வலைத்தளத்தின் மூலம் செட் டாப் பாக்ஸ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல் டாடா ஸ்கை எஸ்டி (ஸ்டாண்டர்ட் டெபனிஷன்) செட் டாப் பாக்ஸ்-களுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கவில்லை. டாடா ஸ்கை எச்டி, டாடா ஸ்கை பிங் ப்ளஸ் செட் டாப் பாக்ஸ் (எஸ்டிபி) மற்றும் டாடா ஸ்கை ப்ளஸ் எச்டி செட் டாப் ஆகிய மூன்று செட் டாப் பாக்ஸ்களுக்கும் தள்ளுபடிகள் கிடைக்கிறது.

செட்டாப் பாக்ஸ் தள்ளுபடிகள்

செட்டாப் பாக்ஸ் தள்ளுபடிகள்

செட்டாப் பாக்ஸ் தள்ளுபடிகள் குறித்து பார்க்கையில், இது ரூ.400 தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்த தள்ளுபடி ஆஃப்லைன் கடைகளில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. டாடா ஸ்கை எச்டி எஸ்டிபி வலைதளத்தின் மூலம் வாங்கும்போது பயனர்களுக்கு டிஎஸ்கேஒய் என்ற குறியீட்டை வழங்கும். 150 குறியீட்டை பயன்படுத்தும்போது டாடா ஸ்கை எச்டி செட் டாப் பாக்ஸ் ரூ.1,249-க்கு கிடைக்கிறது. இதன் முந்தைவிலை ரூ.1,499-க்கு கிடைத்தது. ரூ.150 தள்ளுபடி டாடா ஸ்கை வலைதளத்தில் வாங்கினால் மட்டுமே கிடைக்கும். டால்பி டிஜிட்டல் சரவுண்ட் சவுண்ட் மற்றும் எச்டி தர அனுபவத்தை இந்த செட் டாப் பாக்ஸ் வழங்குகிறது. டெலிகாம் டாக் முதலில் இந்த சலுகையை தெரிவித்தது.

டாடா ஸ்கை பிங்+

டாடா ஸ்கை பிங்+ எஸ்டிபி சமீபத்தில் அறிமுகப்படுத்திய டாடா ஸ்கை பிங்+ செட் டாப் பாக்ஸ் தற்போது ரூ.2,299-க்கு கிடைக்கிறது. டாடாஸ்கை வலைதளத்தின் மூலம் இந்த செட் டாப் பாக்ஸை வாங்கும்போது தள்ளுபடி குறியீடு TSKY200 பயன்படுத்த வேண்டும். இதை பயன்படுத்தும் பட்சத்தில் இந்த தள்ளுபடி கிடைக்கிறது.

டாடா ஸ்கை பிங்+ எஸ்டிபி

டாடா ஸ்கை பிங்+ எஸ்டிபி அமேசான் பிரைம் மாதத்திற்கு கூடுதலாக ரூ.129 செலுத்த வேண்டும். இதன் மூலம் பயனர் அனைத்து சலுகைகளுக்கும் மாதம் ரூ.600 செலுத்த வேண்டும். அமேசான் பிரைம் சந்தா முதல் மூன்று மாதங்களுக்கு இலவசம், அதன்பின் பயனர்கள் தொடர்ந்து சேவையை பெற சந்தா செலுத்த வேண்டும்.

உயிரோடு புதைக்கப்பட்ட யூடியூபர்.. 52 மில்லியன் பேர் பார்த்த வீடியோ.. இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?உயிரோடு புதைக்கப்பட்ட யூடியூபர்.. 52 மில்லியன் பேர் பார்த்த வீடியோ.. இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?

ரூ.400-க்கான கூப்பன்

டாடா ஸ்கை+ எச்டி எஸ்டிபி டாப் பாக்ஸ் தள்ளுபடி கூப்பன் ஆன்லைனில் கிடைக்கிறது. அது TS'KY400 ஆகும். டாடா ஸ்கை வலைதளத்தின் மூலம் வாங்கும்போது இந்த தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.400-க்கான கூப்பன் இதுவாகும். இதன் அசல் விலை ரூ.4,999 ஆக இருந்தது. தற்போது செட் டாப் பாக்ஸ் ரூ.4,599 ஆக இருக்கிறது. டாடா ஸ்கை+ எச்டி எஸ்டிபி 625 மணிநேர நேரடி தொலைக்காட்சி உள்ளடக்கத்தை வழங்குகிறது. அதேபோல் செட் டாப் பாக்ஸில் பயனர்கள் ஒரே நேரத்தில் 3 ஷோக்களை பதிவு செய்யலாம்.

OTT பயன்பாட்டு சந்தாக்கள்

டாடா ஸ்கை பிங் சமீபத்திய ஆண்டுகளில் தொடங்கப்பட்ட பிரபலமான சேவைகளில் ஒன்றாகும். மலிவு விலை மற்றும் OTT பயன்பாட்டு சந்தாக்கள் என பல நன்மைகள் கிடைப்பதனால் நிறைய டாடா ஸ்கை பயனர்கள் பிங்கே சேவையைத் தேர்வு செய்கிறார்கள். தெரியாதவர்களுக்கு, டாடா ஸ்கைஸின் பிங்கே சேவை 10 OTT சந்தாக்களுக்கு இலவச அணுகலை வழங்குகிறது.

சந்தாதாரர்கள் இரண்டு விருப்பங்களில் கிடைக்கும்

டாடா ஸ்கை பிங் சேவையை சந்தாதாரர்கள் இரண்டு விருப்பங்களில் பெறலாம்; சில ஆண்டுகளுக்கு முன்பு டாடா ஸ்கை இந்த சேவையை அறிமுகப்படுத்தியபோது, ​​சந்தாதாரர்கள் கூடுதல் செலவு எதுவுமின்றி அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கை டாடா ஸ்கை சேவையுடன் பெற முடிந்தது. இப்போது, ​​முன்னணி டி.டி.எச் நிறுவனத்தில் ஆண்ட்ராய்டு டி.வி-அடிப்படையிலான செட்-டாப் பாக்ஸும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Tata Sky Announced Discount For its Set top box

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X