ஆப்பிள் டீலை அசால்ட்டாக தட்டி தூக்கிய Tata குரூப்ஸ்! கைமாறப்போகும் ரூ.14,800 கோடி iPhone வியாபாரம்!
இந்தியாவின் மிகவும் பழமையான குழுமம் எது? என்ற கேள்வியை யாரிடம் கேட்டாலும், உடனே எல்லோரும் "டாடா (Tata)" என்ற பெயரை உச்சரிப்பார்கள். காரணம், டாடா குழுமம் இந்தியாவில் துவங்கப்பட்டு 150 வருடங்களுக்கு மேல் ஆகிறது. டாடா இப்போது அடுத்த சாதனைக்கு ரெடியாகிவிட்டது.
ஆம், டாடா நிறுவனம் இப்போது உலகை திரும்பி பார்க்க வைக்கும் ஒரு வியக்கத்தகு சாதனையை படைக்கவுள்ளது. 155 ஆண்டுகள் பழமையான டாடா குழுமம் உப்பு முதல் தொழில்நுட்ப சேவைகள் வரை அனைத்தையும் விற்பனை செய்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, டாடா குழுமம் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இ-காமர்ஸ் சேவைகளில் தனது பங்கை கால்பதிக்க துவங்கி முன்னேறி வருகிறது.

அந்த வரிசையில், நிறுவனம் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்துடன் கைகோர்த்து, ஐபோன் சாதனத்தின் முக்கியமான சேஸிஸ் சாதனத்தை தயாரித்து வருகிறது. ஐபோன் சாதனத்தின் உலோக முதுகெலும்பாக இந்த சேசிஸ் செயல்படுகிறது. டாடா நிறுவனம் அதன் தொழிற்சாலையில், தமிழ்நாடு மாநிலத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பரவியுள்ளது.
டாடா நிறுவனமும் சிப் மேக்கிங் லட்சியங்களை வளர்த்து வருகிறது. இந்த வளர்ச்சி பாதையில், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா குழுமம், ஆகஸ்ட் மாதத்தில் ஆப்பிள் சப்ளையர் தொழிற்சாலையை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்றவுள்ளதாக கூறப்படுகிறது. முதல் முறையாக ஒரு உள்ளூர் நிறுவனம், ஐபோன்களின் அசெம்பிளி அமைப்பிற்குள் நுழைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
600 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 4,900 கோடி) மதிப்புள்ள தெற்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள விஸ்ட்ரான் (Wistron) தொழிற்சாலையை கையகப்படுத்தும் முயற்சியில் டாடா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த வசதியில் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் மூலம் ஆப்பிளின் சமீபத்திய ஐபோன் 14 மாடல் அசெம்பிள் செய்யப்படுகிறது.

விஸ்ட்ரான், 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, அரசு ஆதரவுடன் கூடிய நிதிச் சலுகைகளைப் பெறுவதற்காக, குறைந்தபட்சம் $1.8 பில்லியன் (தோராயமாக ரூ. 14,800 கோடி) மதிப்பிலான ஐபோன்களை தொழிற்சாலையிலிருந்து விற்பனைக்காக அனுப்பியுள்ளது என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டுக்குள் ஆலையின் பணியாளர்களை மும்மடங்காக்க அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் விஸ்ட்ரான் ஐபோன் வணிகத்திலிருந்து வெளியேறும் போது, டாடா அந்த கடமைகளை மதிக்கத் தயாராக உள்ளது என்று சமீபத்திய செய்தி அறிக்கை கூறுகிறது. ஆப்பிள் நிறுவனம் இப்போது சீனாவிற்கு அப்பால் அதன் தயாரிப்பு தளத்தை பல்வகைப்படுத்த துவங்கியுள்ளது. இதில் இந்தியா தற்போது முக்கிய பங்கை உருவாக்க துவக்கியுள்ளது.
ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் விஸ்ட்ரான் இந்தியாவில் இருந்து ஐபோன்களில் கிட்டத்தட்ட $500 மில்லியன் (சுமார் ரூ. 4,100 கோடி) ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் Apple இன் மற்ற முக்கிய தைவானிய சப்ளையர்களான ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப் (Foxconn Technology Group) மற்றும் பேகாட்ரான் (Pegatron) போன்றவையும் உள்நாட்டில் அதிகரித்துள்ளன.
உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை விரிவுபடுத்தும் வகையில் லாபகரமான நிதிச் சலுகைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அரசு திட்டங்களை அமைத்ததில் இருந்து, உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. இப்போது டாடா குழுமம் ஆப்பிள் ஐபோனின் முக்கிய தயாரிப்பாளராக இந்தியாவில் களமிறங்க போகிறது என்ற செய்தி வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்களை குஷியடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








