Home
News

கேபிள் TV, செட்-டாப் Box க்ளோஸ்.. ரூ.199-க்கு 500+ டிவி சேனல்.. டிஷ் இல்ல, வயர் இல்ல.. இனிமே Tata Play போதும்!

கேபிள் டிவி, டிடிஎச் போன்ற சேவைகள் வழியாக லைவ் டிவி சேனல்களை பார்க்க வேண்டுமானால், டிஷ், வயர் மற்றும் செட்-டாப் பாக்ஸ் போன்ற பெரிய செட்டப்பே இருக்க வேண்டும். ஆனால், இதை அப்படியே தூக்கி சாப்பிடும்படி ஒரேவொரு ஆப் வழியாக லைவ் டிவி சேனல்கள் கொடுக்கப்படுகின்றன. வெறும் ரூ.199 முதல் ஸ்மார்ட் டிவி மட்டுமல்லாமல், ஸ்மார்ட்போன், டேப்லெட் டிவைஸ்களிலும் பார்த்து கொள்ளலாம்.

டாடா பிளே நிறுவனத்தின் டாடா பிளே ஸ்மார்ட் ஆப் (Tata Play Smart App) அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 500+ லைவ் டிவி சேனல்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த ஆப்பை பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதுபோன்று சில நிறுவனங்களும் ஆப் வழியாக லைவ் டிவி சேனல்களை கொடுக்கின்றன. ஆனால், ஸ்மார்ட்போனில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய முடியும்.

கேபிள் TV, செட்-டாப் Box க்ளோஸ்.. ரூ.199-க்கு 500+ டிவி சேனல்கள்!

ஆனால், இந்த டாடா பிளே ஸ்மார்ட் ஆப்பை ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது லேப்டாப் போன்ற எந்த டிஸ்பிளே டிவைஸ்களிலும் ஸ்ட்ரீம் செய்து கொள்ள முடியும். ஆனால், இது இன்டர்நெட் வழியாக லைவ் ஸ்ட்ரீமிங் கொடுக்கிறது. ஆகவே, பிராட்பேண்ட் டேட்டா, வை-பை டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,

இந்த டேட்டா வேகத்துக்கு ஏற்ப டிவி சேனல்களின் குவாலிட்டி இருக்கும். இது வழக்கமாக பயன்படுத்தும் டிவி சேனல்கள் சேவையை போலவே கிடைக்க இருக்கிறது. ஆகவே, சேனல் நம்பர்கள், ப்ரோகிராம் நேரம் உள்ளிட்டவை கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவைகளில் கிடைப்பதை போலவே இருக்கும். ஆகவே, வழக்கமாக டிவியில் பார்க்கும் அனுபவத்தை இந்த ஆப் கொடுக்கும்.

இதற்கு ரிமோட் கன்ட்ரோல் சப்போர்ட் கிடைக்கிறது. ரூ.199 ஆரம்ப விலையில் இருந்து திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த விலைக்கு 500+ டிவி சேனல்கள் கொடுக்கப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் லைவ் டிவி சேனல்கள் கிடைக்கின்றன. கஸ்டமர்களின் விருப்பத்துக்கு ஏற்ப சந்தாவை பெற்று கொள்ளலாம். ரூ.199 திட்டத்துக்கு மாத வேலிடிட்டி கிடைக்கும்.

கேபிள் TV, செட்-டாப் Box க்ளோஸ்.. ரூ.199-க்கு 500+ டிவி சேனல்கள்!

சாம்சங் டிவி, ஆண்ட்ராய்டு டிவி, விடா ஓஎஸ் டிவி, கூகுள் டிவிமற்றும் ஃபயர் டிவி ஆகியவற்றில் இந்த டாடா பிளே ஸ்மார்ட் ஆப் கிடைக்கிறது. ஆகவே, இந்த ஓஎஸ்களை கொண்ட டிவிகள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் உள்ளிட்டவற்றில் இந்த லைவ் டிவி சேனல்கள் கிடைக்கும். ஜியோ நிறுவனமும் இதே போல ரூ.200 விலைக்கு லைவ் டிவி சேனல்களை கொடுக்கிறது.

இது மட்டுமல்லாமல், பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவையும் கொடுக்கிறது. ஆனால், இது ஜியோ கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஏனென்றால், ஜியோ சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆகவே, டாடா பிளே ஸ்மார்ட் ஆப்புடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் கிடைக்கும் சலுகையாக ஜியோ நிறுவனம் கொடுக்கவில்லை.

ஜியோ ரூ.200 விலை கொண்ட திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். 30 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். யூடியூப் பிரீமியம் (YouTube Premium), அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Amazon Prime Video Mobile Edition) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி ஆப்கள் கிடைக்கும்.

மேலும், ஜியோஸ்டார் (JioStar), ஈடிவி நெட்வொர்க் (ETV Network), சோனி (Sony), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network),டிஸ்கவரி (Discovery) மற்றும் வார்னர் ப்ரோஸ் (Warner Bros) ஆகியவற்றின் லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இப்படி ஒட்டுமொத்தமாக 1000+ லைவ் டிவி சேனல்கள் கொடுக்கப்படும். இதை ஜியோ கஸ்டமர்கள் மட்டுமே பெற்று கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Tata Play Smart App With 500 Live TV Channels At Rs 199 Per Month Instead of Cable TV DTH Service
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X