Home
News

டாடாவுக்கு கும்பிடு.. மாதம் ரூ.266 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 23 ஓடிடி சந்தா.. TV கனெக்டிவிட்டி!

ஒட்டுமொத்த டெலிகாம் மார்கெட்டே அதிரும்படி மாதம் ரூ 266 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி போன்ற 23 ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷனை டாட்டா நிறுவனம் வழங்குகிறது. டிவி உள்பட 4 டிவைஸ்களில் ஸ்ட்ரீம் செய்யலாம்.

டாட்டாவின் ஓடிடி திட்டங்களின் கீழ் டாட்டா பிளே பிஞ்ச் மெகா திட்டம் (Tata Play Binge Mega Plan) மற்றும் டாட்டா பிளே பிஞ்ச் சூப்பர் திட்டம் (Tata Play Binge Super Plan) என்று வகைகள் இருக்கின்றன. இந்த திட்டங்களின் கீழ் தலா 3 திட்டங்கள் வேலிடிட்டியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

மாதம் ரூ.266 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 23 ஓடிடி சந்தா!

அதாவது, 1 மாதம், 3 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் என்று இருக்கின்றன. ஆகவே, மெகா திட்டத்தின் கீழ் ரூ 399, ரூ 1119 மற்றும் ரூ 4199 ஆகிய விலையில் மூன்று திட்டங்கள் இருக்கின்றன. அதேபோல சூப்பர் திட்டத்தின் கீழ் ரூ 299, ரூ 849 மற்றும் ரூ 3199 ஆகிய விலையில் திட்டங்கள் கிடைக்கின்றன.

மெகா திட்டத்தில் 28 ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனும், சூப்பர் திட்டத்தில் 23 ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனும் கொடுக்கப்படுகிறது. இதில் 12 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை தேர்வு செய்தால், அதற்கான மாதாந்திர செலவு மிகவும் கம்மியாக இருக்கும். அதாவது, சூப்பர் திட்டத்தின் கீழ் வரும் ஒரு மாத வேலிடிட்டி திட்டத்தை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம்.

அதற்கு நீங்கள் ரூ 299 செலுத்த வேண்டும். அதுவே 12 மாதங்கள் வேலிடிட்டியை தேர்வு செய்து, ரூ 3199 செலுத்தினால், அதற்கான மாதாந்திர செலவு ரூ 266 மட்டுமே தேவைப்படுகிறது. இப்போது, இந்த திட்டங்களில் வரும் ஓடிடி ஆப்களின் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

டாட்டா பிளே ரூ 3199 திட்ட விவரங்கள் (Tata Play Rs 3199 Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 12 மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த மாதங்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஜீ5 (ZEE5), எம்எக்ஸ்பிளேயர் (MXPlayer), பிளேஃபிளிக்ஸ் (PlayFlix), கிக்க் (Kikk) மற்றும் ஃபேன்கோட் (Fancode) ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

அதேபோல ஸ்டேஜ் (Stage), சன்நெக்ஸ்ட் (SunNXT), ஆஹா (Aha), ஹங்கமா பிளே (Hungama Play), ஷீமாரூமி (ShemarooMe), எபிக்ஆன் (EpicON), டாக்குபே (Docubay), ஷார்ட்ஸ்டிவி (Shorts TV), டிராவல்எக்ஸ்பி (TravelXP), பிளானட் மராத்தி (Planet Marathi), மனோரமா மேக்ஸ் (Manorama Max), ஐஸ்டீரீம் (iStream), சாவ்பல் (Chaupal), ரீல்டிராமா (Reeldrama), நம்மஃபிளிக்ஸ் (Nammaflix) மற்றும் விஆர் ஓடிடி (VR OTT) உள்ளிட்டவையை பயன்படுத்தலாம்.

மாதம் ரூ.266 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 23 ஓடிடி சந்தா!

முன்பே தெரிவித்தது போல, இதே ஓடிடிகளுடன் 1 மாதம் வேலிடிட்டி போதும் என்றால், ரூ 299 செலுத்த வேண்டும். அதுவே 3 மாதங்கள் வேலிடிட்டி வேண்டுமானால், ரூ 849 செலுத்த வேண்டும். இப்போது, மெகா திட்டத்தின் கீழ் கிடைக்கும் 12 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தின் சலுகைகளை பார்ப்போம்.

டாட்டா பிளே ரூ 4199 திட்ட விவரங்கள் (Tata Play Rs 4199 Plan Details): இந்த திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஆப்பிள் டிவிபிளஸ் (Apple TV+), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, எம்எக்ஸ்பிளேயர், பிளேஃபிளிக்ஸ், கிக்க், ஃபேன்கோட், ஸ்டேஜ், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), சன்நெக்ஸ்ட் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

அதேபோல, ப்யூஸ் (Fuse), ஆஹா, ஹங்கமா பிளே, ஷீமாரூமீ, எபிக்ஆன், டாக்குபே, கியூரியாசிட்டி ஸ்டீரீம், ஷார்ட்ஸ் டிவி, டிராவல் எக்ஸ்பி, பிளானட் மராத்தி, மனோரமா மேக்ஸ், ஐஸ்டீரீம், சாவ்பல், ரீல்டிராமா, நம்மஃபிளிக்ஸ், விஆர் ஓடிடி மற்றும் மூவிஸ் நவ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம்.

இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்தால், ஒரே நேரத்தில் டிவி, மொபைல், லேப்டாப் உள்ளிட்ட 4 டிவைஸ்களில் ஸ்டீரீம் செய்யலாம். அதேபோல தனித்தனியே ஓடிடி ஆப்களை பயன்படுத்த தேவையில்லை. கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் டாட்டா பிளே பிஞ்ச் ஆப்பை டவுன்லோட் செய்தால்போதும், அதிலேயே அனைத்து கன்டென்ட்களும் வந்துவிடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tata Play Rs 3199 Plan With 365 Days Validity 23 OTT Subscription Check Super Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X