கேபிள் டிவிக்கு ஆப்பு.. புது திட்டம்.. ரூ.199 போதும்.. டிவி சேனல்கள்.. ஓடிடி சந்தா.. டாடாவின் டிடிஎச் திட்டம்!
ஓடிடி வருகைக்கு பின் கேபிள் டிவி மட்டுமல்லாமல் டிடிஎச் சேவைகளும் கவலைக்கிடமாக மாறிவருகின்றன. இப்போது, கேபிள் டிவிக்கு அடுத்த அடி விழுந்துள்ளது. ஏனென்றால், டிடிஎச் சேவைகளில் ஓடிடி சந்தாவும் களமிறங்கிவிட்டது. வெறும் ரூ.199 செலவில் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி கிடைக்கிறது.
டாடா பிளே பிஞ்ச் (Tata Play Binge) மற்றும் டாடா பிளே டிடிஎச் (Tata Play DTH) சந்தாதார்களுக்கு அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தா சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, ரூ.199 செலுத்தினால், டிவி, லேப்டாப் மற்றும் மொபைல்களில் அமேசான் பிரைம் வீடியோ சந்தா மட்டுமல்லாமல், கூடுதலாக 5 ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.

இது, டாடா பிளே பிஞ்ச் சலுகையின் கீழ் வருகிறது. அதுவே, டாடா பிளே டிடிஎச் சலுகையில் கீழ் ரூ.199 செலுத்தினால், அமேசான் பிரைம் வீடியோ லைட் மட்டுமல்லாமல், லைவ் டிவி சேனல்களையும் பார்த்து கொள்ளலாம். ஆகவே, இப்போது பிளே பிஞ்ச் சலுகையில் 3 திட்டங்களும், டிடிஎச் சலுகையில் 1 திட்டமும் இருக்கிறது.
டாடா பிளே ரூ 149 திட்ட விவரங்கள் (Tata Play Rs 149 Plan Details): இந்த டாடா பிளே பிஞ்ச் திட்டத்தில் டிடிஎச் சலுகைகள் கிடையாது. ஆனால், 4 ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படும். இந்த ஆப்களை தேர்ந்தெடுக்கும் ஆப்ஷனும் உள்ளது. அதாவது, 31 ஓடிடி ஆப்களில் 4 ஆப்களை சந்தாதாரர்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
ஆகவே, அமேசான் பிரைம் வீடியோ லைட், ஆப்பிள் டிவி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, டிஸ்கவரி பிளஸ், பிளேஃபிளிக்ஸ், ஏஎன்ஐமேக்ஸ், பிடிசி பிளே, ஃகிளிக், ஃபேன்கோட், ஸ்டேஜ், லயன்ஸ்கேட் பிளே, ஹங்கமா பிளே, ஷீமாரூமி, எபிக் ஆன், டாகுபே, டிராவல் எக்ஸ்பி, சன்நெக்ஸ்ட் போன்ற ஆப்கள் ஆப்ஷனில் இருக்கின்றன.

அதேபோல ஃபியூஸ்பிளஸ், நம்மஃபிளிக்ஸ், சாவ்பால், ரீல்டிராமா, ஐஸ்ட்ரீம், மானோரமா மேக்ஸ் மற்றும் ஆஹா போன்ற ஓடிடி ஆப்களும் ஆப்ஷனில் வருகின்றன. இதில் ஆஹா சந்தாவானது, தெலுங்கு கன்டென்ட்களை மட்டுமே வழங்குகிறது. ஆகவே, மேற்கூறிய ஆப்களில் 4 ஆப்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.
டிவி, மொபைல், லேப்டாப் என்று ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் அந்த ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். ஆகவே, 4 ஓடிடி ஆப்களை மலிவான விலையில் பயன்படுத்த வேண்டுமானால், இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அதுவே 6 ஓடிடி ஆப்கள் வேண்டுமானால், ரூ 199 திட்டத்தை டாடா பிளே பிஞ்ச் சந்தாதாரர்கள் தேர்ந்தெடுக்கலாம்.
டாடா பிளே ரூ 199 திட்ட விவரங்கள் (Tata Play Rs 199 Plan Details): முந்தைய திட்டத்தை போலவே இந்த திட்டத்திலும் டிவி, மொபைல், லேப்டாப் என்று ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். ஆனால், மேற்கூறிய 31 ஆப்களில் 6 ஆப்களை இந்த திட்டத்தில் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
டாடா பிளே ரூ 349 திட்ட விவங்கள் (Tata Play Rs 349 Plan Details): ஒருவேளை மேற்கூறிய 31 ஓடிடி ஆப்களின் மொத்த சந்தாவும் வேண்டுமானால், இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இதிலும் ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். ஒருவேளை டிடிஎச் சந்தாவில் ஓடிடி வேண்டுமானால், பின்வரும் திட்டம் சரியாக இருக்கும்.
டாடா பிளே டிடிஎச் ரூ 199 திட்ட விவரங்கள் (Tata Play DTH Rs 199 Plan Details): இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ லைட் சந்தாவுடன் 13 எஸ்டி சேனல்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஏபிபி நியூஸ், ஏசியன்நெட் நியூஸ், இந்தியா டிவி, நியூஸ் தமிழ் 24x7, ரீபப்ளிக் டிவி உள்ளிட்ட 13 டிவிகளை பார்க்கலாம்.
இதைவிட கூடுதல் டிவி சேனல்கள் வேண்டுமானால், அதற்கு ஏற்ப கட்டணம் செலுத்தி சந்தாவை பெற்று கொள்ளலாம். ஆனால், பிரைம் லைட் சந்தா கூடுதலாக வழங்கப்படுகிறது. ஆகவே, வரும் நாட்களில் ஓடிடி ஆப்கள் டிடிஎச் சேவையில் இணைக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இதனால், கேபிள் டிவிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








