Home
News

டிவி சேனல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு: பிரபல டிடிஹெச் நிறுவனம் சூப்பர் அறிவிப்பு.!

டாடா ஸ்கை நிறுவனம் சமீபத்தில் டாடா பிளே என்று பெயரை மாற்றியது. இந்நிலையில் டாடா பிளே நிறுவனம் தனது டிடிஹெச் சேனல் பேக்குகளின் விலையில திடீரென குறைத்துள்ளது. மேலும் இதுப்பற்றிய தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

டாடா பிளே வாடிக்கையாளர்கள்

அதாவது டாடா பிளே வாடிக்கையாளர்கள் இந்தியாவில் 1.9 கோடி பேர் உள்ளனர். இந்த நிலையில் அந்நிறுவனம் தற்போது சேனல்
பேக்குகளின் விலையை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.30 முதல் ரூ.100வரை சேமிக்கலாம்என்று கூறப்படுகிறது.

டாடா பிளே வாடிக்கையாளர்கள்

ஆனால் இந்த விலைகுறைப்பு ஆனது ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் வேறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாடிக்கையாளர்கள்எந்த சேனல்களை அதிகம் பார்க்கின்றர் என்பதை அறிந்து பார்க்காத சேனல்களுக்கு விலை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்கூறப்படுகிறது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள்

எனவே இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பி பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் விலை கொடுத்தால் போதும் என்ற வசதி தரப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹரித் நாக்பால் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

னைத்து பகுதிகளிலும் ஒடிடி

மேலும் தற்போது அனைத்து பகுதிகளிலும் ஒடிடி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். எனவே ஒடிடிநோக்கி செல்லும் டிடிஎச் வாடிக்கையாளர்களை தக்கவைத்துகொள்ள டாடா பிளே விலைகுறைப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் ஒரு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்நிறுவனம் சமீபத்தில் ரூ.329 விலையில் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.

 நிறுவனத்தின் ரூ.329 ஃபைபர்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.329 ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம் ஆனது 1000 ஜிபி டேட்டாவை, 20 Mbps வேகத்தில் வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஃபிக்சட் லைன் வாய்ஸ் அழைப்பு இலவசமாக வழங்கப்படும். இதுதவிர முதல் மாத கட்டண தொகையில் 90 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்பு குறைந்த விலை ஃபைபர்

இதற்கு முன்பு குறைந்த விலை ஃபைபர் பிராட்பேண்ட் திட்டமாக பிஎஸ்என்எல்-லின் ரூ.449 திட்டம் இருந்தது. இந்த திட்டத்தில் 30Mbps வேகத்தில் 3.3டிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் இந்த ரூ.449 திட்டம் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் நாட்டின் சில மாநிலங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் வலைத்தளத்திற்கு சென்று இந்த திட்டம் தங்கள் இடங்களுக்கு அமலில் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் மலிவு விலையில்திட்டங்களை அறிமுகம் செய்வதால் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

News Source: telecomtalk

Best Mobiles in India

English summary
Tata Play Reducing Price of Channel Packs: full details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X