கேபிள் TV எதுக்கு.. 3 மாத வேலிடிட்டி.. 200+ டிவி சேனல்.. 100Mbps டேட்டா.. 4 ஓடிடி சந்தா.. மாசம் ரூ.850 போதும்!
ஒரேவொரு திட்டத்தில் 200+ லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 100 எம்பிபிஎஸ் வேக ஃபைபர் டேட்டா, 4 ஓடிடி ஆப்களின் சந்தா மற்றும் வை-பை ரூட்டர் போன்ற சலுகைகளை டாடா ப்ளோ ஃபைபர் (Tata Play Fiber) திட்டம் கொடுக்கிறது. 22 ஓடிடி ஆப்களுக்கும் மேலாக ஆப்ஷனில் அணுக கிடைக்கிறது. மாதத்துக்கு ரூ.50 விலை குறைப்பில் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. கூடுதலாக 9 ஓடிடி ஆப்கள் இலவமாக கிடைக்கிறது. இந்த டாடா ப்ளோ ஃபைபர் திட்டத்தின் சலுகைகளை பார்க்கலாம்.
100 எம்பிபிஎஸ் வேகத்தில் ஃபைபர் டேட்டாவை கொடுக்கும் திட்டங்களில் ஆரம்ப விலை திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்தில் விலை ரூ.900ஆக இருக்கிறது. இது மாதத்துக்கான விலையாகும். ஆனால், இந்த திட்டத்தை 3 மாதங்களுக்கு மட்டுமே பெற முடியும். ஆகவே, மூன்று மாதங்களுக்கான தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டி இருக்கிறது.

இப்படி செலுத்தும்பட்சத்தில் உங்களுக்கு மாதம் ரூ.50 விலை குறைப்பு கொடுக்கப்படுகிறது. ஆகவே, மாதம் ரூ.850 செலவில் இந்த திட்டத்தை பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.850 கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு கணக்கிட்டால், ரூ.2,550ஆக இருக்கிறது. இந்த விலையை கொடுக்க வேண்டும். இதில் ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும்.
எப்படி பார்த்தாலும், மாதத்துக்கு ரூ.50 வீதம் மூன்று மாதங்களுக்கு ரூ.150 விலை குறைவாக கிடைக்கிறது. இந்த விலைக்கு 200+ லைவ் டிவி சேனல்களுடன் 4 பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவை பெறலாம். இந்த பிரீமியம் ஓடிடி ஆப்களுக்கு 22+ ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகிறது. அதேபோல பிரீமியம் அல்லாத 9 ஓடிடி ஆப்களும் கிடைக்கிறது.
டாடா ப்ளே ஃபைபர் ரூ 900 திட்ட விவரங்கள் (Tata Play Fiber Rs 900 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு ப்ரீ வை-பை ரூட்டர் (Free Wifi Router) மூலம் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படும். இது அன்லிமிடெட் டேட்டா சலுகையாக இருந்தாலும், மாதத்துக்கு அதிகபட்சம் 3.3 டிபி டேட்டாவை மட்டுமே பெற முடியும்.
அதற்கு பிறகு 3 எம்பிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறைக்கப்படும். எப்படி பார்த்தாலும், 3000 ஜிபிக்கும் மேல் டேட்டா கிடைக்கிறது. ஓடிடி ஆப்களை பொறுத்தவரையில், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), ஆப்பிள் டிவிபிளஸ் (Apple TV+), லயன்ஸ்கேட்ஸ் பிளே (Lionsgate Play), சன்நெக்ஸ்ட் (SunNXT), ஆஹா (Aha) மற்றும் ஷீமாரூமீ (ShemarooMe) கிடைக்கிறது.
மேலும், ஃபேன்கோட் (FanCode), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), எபிக்ஆன் (EPICON), ஹங்கமா (Hungama), கிளிக் (KLIKK), சாவ்பால் (Chaupal), ஸ்டேஜ் (Stage), நம்மஃபிளிக்ஸ் (NAMMAFlix), மனோரமாமேக்ஸ் (Manorama Max), ரீல்டிராமா (Reeldrama), பிடிசி பிளே (PTC Play), ஐஸ்ட்ரீம் (iStream), டிஸ்ட்ரோடிவி (DistroTV) மற்றும் பிபிசி பிளேயர் (BBC Player) உள்ளது.
மேற்கண்ட ஓடிடி ஆப்களில் 4 ஓடிடி ஆப்களை ஆப்ஷனில் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல இந்த 4 ஓடிடி ஆப்களில் ஒன்றை கிவ்பேக் கொடுத்துவிட்டு, வேறு ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், இந்த கிவ்பேக் சலுகை மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கிறது. இதுபோக ப்ரீ ஓடிடி ஆப்கள் சில அணுக கிடைக்கின்றன.
இதில் அனிமேக்ஸ் (Animax), டிராவல்எக்ஸ்பி (TravelXP), ஹால்மார்க் (Hallmark), பிளேஃபிளிக்ஸ் (Playflix), ஷார்ட்ஸ்டிவி (ShortsTV), டாகுபே (Docubay) போன்ற ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. இதுபோக கூடுதல் கட்டணம் செலுத்தி டிவி சேனல்களை ஆட்-ஆன் செய்து கொள்ள முடியும். ஃபைபர் டேட்டாவுடன் ஓடிடி மற்றும் டிவி சேனல்கள் வேண்டுமானால், இதை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








