கேபிள் TV கதை முடிஞ்சது.. 200 சேனல், 3.3TB டேட்டா, தேவைக்கு ஏற்ப 4 OTT.. Tata Play-வின் Lite பிளான்.. விலை?
ஏற்கனவே ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்டெல் ஃபைபர் ஆகிய 2 சேவைகளும் சேர்ந்து பல வீடுகளில் இருந்த கேபிள் டிவி கனெக்ஷன்களை 'கட்' செய்து விட்டன. இதற்கிடையில் டாடா பிளே நிறுவனமும் அதன் டாடா பிளே ஃபைபர் (Tata Play Fiber) சேவையின்கீழ் சில தரமான திட்டங்களை தொகுத்து வழங்கி.. தன் பங்கிற்கு சில கேபிள் டிவி இணைப்புகளை துண்டித்து கொண்டிருக்கிறது.
அப்படி என்ன "தரமான" திட்டங்களை வழங்குகிறது? டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் பிராந்திய இன்டர்நெட் சர்வீஸ் வழங்குநரான டாடா ப்ளே ஃபைபர் ஆனது 100 எம்பிபிஎஸ் ஸ்பீட் உடனான ஏராளமான விருப்பங்களை வழங்குகிறது. ஓடிடி நன்மைகள் உடனான 100 எம்பிபிஎஸ் ஸ்பீட் திட்டத்தை பொறுத்தவரை, என்ட்ரி லெவல் பிளான் ஆக ரூ.900 டாடா பிளே ஃபைபர் லைட் பிளான் (Tata Play Fiber Lite Plan) உள்ளது.

இதோடு மாதத்திற்கு ரூ.950 மற்றும் ரூ.1100 செலவாகும் இன்னும் 2 திட்டங்களும் உள்ளன. நீங்கள் நீண்ட காலம் (அதாவது 6 மாதங்கள் அல்லது 1 ஆண்டு) செல்லுபடியாகும் திட்டத்தை தேர்வு செய்தால், அந்த திட்டங்களுக்கான மாதாந்திர செலவு ஆனது குறைவானதாக இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ரூ.900 மதிப்புள்ள மாதாந்திர திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டம் பல வகையான ஓடிடி நன்மைகளுடன் வருகிறது. இந்த திட்டத்துடன் பயனர்கள் பெறும் ஓடிடி நன்மைகளின் அளவை கருத்தில் கொண்டால்.. டாடா பிளே பைபர் சேவையின் கீழ் கிடைக்கும் "பெஸ்ட் பிளான்" என்று இதை கூறலாம்.
ரூ.900 திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்கள் பின்வரும் தளங்களிலிருந்து ஏதேனும் நான்கு ஓடிடி தளங்களை தேர்வு செய்யலாம்: ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar), ஆப்பிள் டிவி பிளஸ் (Apple TV+), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஜீ5 (Z5), சன் நெக்ஸ்ட் (SunNXT), ஆஹா (aha), ஃபேன்கோட் (Fancode), டிஸ்கவரி பிளஸ் (Discovery+) ஆகியைகளில் 4-ஐ தேர்வு செய்யலாம்.
மேலும் இந்த பட்டியலில் எபிக்ஆன் (EPICON), ஷீமாரூமீ (ShemarooMe), ஹாங்காமா ஓடிடி (Hungama OTT), கிளிக் (KLIKK), சௌபால் (Chaupal), ஸ்டேஜ் (Stage), நம்ம பிளிக்ஸ் (NAMMAFlix), மனோரமா மேக்ஸ் (Manorama Max), ரீல் டிராமா (Reeldrama), பிடிசி (PTC), ஐஸ்ட்ரீம் (iStream), டிஸ்ட்ரோ டிவி (DistroTV) மற்றும் பிபிசி பிளேயர் (BBC Playe) ஆகியவைகளில் உள்ளன.
மேலும் ரூ,900திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்கள் பின்வரும் தளங்களுக்கான இலவச அணுகலையும் பெறுவார்கள்: அனிமேக்ஸ் (Animax), டிராவல் எக்ஸ்பி (TravelXP), ஹால்மார்க் (Hallmark), பிளே பிளிக்ஸ் (Playflix), ஷார்ட்ஸடிவி (ShortsTV), டாக்குபே (Docubay), க்யூரியாசிட்டி ஸ்ட்ரீம் CuriosityStream), விஆர் (Vr), மற்றும் பியூஸ் (Fuse).
மேலும் இந்த திட்டத்துடன் 200 க்கும் மேற்பட்ட சேனல்களும் கிடைக்கும். கூடவே இந்த திட்டம் இலவச வைஃபை ரூட்டரையும் தொகுக்கும். டேட்டா நன்மையை பொறுத்தவரை இந்த திட்டம் 3.3டிபி டேட்டாவை வழங்குகிறது. 3300ஜிபி டேட்டாவையும் நீங்கள் பயன்படுத்தி விட்டால், இன்டர்நெட் ஸ்பீட் ஆனது 3எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும்
நீங்கள் மாதாந்திர திட்டத்தை தேர்வு செய்தால் டாடா பிளே நிறுவனத்திற்கு ரூ.500 இன்ஸ்ட்டாலேஷன் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் நீங்கள் ஒரு மாத திட்டம் அல்லது 50எம்பிபிஎஸ் திட்டத்தை தேர்வு செய்தால் ரூ.1,000 என்கிற பாதுகாப்பு வைப்பு தொகையையும் செலுத்த வேண்டி இருக்கும். டாடா பிளே பைபர் சேவையின் கீழ் 500 எம்பிபிஎஸ் 4டிபி திட்டமும் உள்ளது. இந்த மாதாந்திர திட்டத்தின் விலை ரூ.3,200 ஆகும்
இதோடு 1ஜிபிபிஎஸ் ஸ்பீடை வழங்கும் திட்டங்களில் மூன்று வகைகள் உள்ளன. இந்த மூன்று வகைகளும் 4டிபி, 5டிபி மற்றும் 10டிபி மாதாந்திர டேட்டாவுடன் வருகின்றன. இவைகள் ரூ.5,000, ரூ.6,000 மற்றும் ரூ.12,000 க்கு கிடைக்கின்றன. நாம் மேற்கண்ட அனைத்து விலைகளிலுமே வரிகள் சேர்க்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். அதாவது வரிகளுடன் மேற்கண்ட திட்டங்களின் விலைகள் சற்றே உயரும்


Click it and Unblock the Notifications








