TATA ஆட்டத்துக்கு வந்தாச்சு! வெறும் ரூ.149 போதும்.. 31 ஓடிடி சந்தா.. 4 டிவைஸ் ஸ்ட்ரீமிங்.. இனிமேதான் வேற மாறி!
ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களது கட்டணங்களில் மாற்றம் செய்துவரும் நேரத்தில், டாட்டா நிறுவனம் சத்தமே இல்லாமல் மலிவான விலைக்கு ஓடிடி திட்டங்களை கொடுத்து வருகிறது. டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி, சோனிலிவ் உள்ளிட்ட 31 ஓடிடி பண்டில்கள் வெறும் ரூ 149 முதல் கிடைப்பதால் மற்ற நிறுவனங்களின் கஸ்டமர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி இருக்கிறது. இப்படி 3 திட்டங்கள் இருக்கின்றன. இந்த ஓடிடி திட்டங்களின் முழு சலுகைகள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.
டாடா பிளே பிஞ்ச் ரூ 149 திட்ட விவரங்கள் (Tata Play Binge Rs 149 Plan Details): இதுவொரு டாடா பிளே பிஞ்ச் ஃபிளெக்சி லைட் (Tata Play Binge Flexi Lite) திட்டமாகும். இந்த லைட் திட்டத்தில் 32 ஓடிடி ஆப்களின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். இவற்றில் 4 ஓடிடி ஆப்களை கஸ்டமர்கள் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் பயன்படுத்த முடியும்.

ஓடிடி ஆப்களை பார்க்கையில், ஆப்பிள் டிவிபிளஸ் (Apple TV+), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), பிளேஃபிளிக்ஸ் (PlayFlix), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), அனிமேக்ஸ் (Animax), பிடிசிபிளே (PTCPlay), கிளிக் (Kilkk), ஃபேன்கோட் (Fancode), ஸ்டேஜ் (Stage), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) உள்ளிட்ட ஆப்கள் வருகின்றன.
அதேபோல, ஹங்கமா பிளே (Hungama Play), ஷீமாரூமீ (ShemarooMe), எபிக்ஆன் (EpicON), டாகுபே (Docubay), கியூரியாசிட்டிஸ்ட்ரீம் (CuriosityStream), ஷார்ட்ஸ்டிவி (ShortsTV), டிராவல்எக்ஸ்பி (TravelXP), சன்நெக்ஸ்ட் (SunNXT), ப்யூஸ் (Fuse), நம்மபிளிக்ஸ் (NammaFlix), பிளாட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), ரீல்டிராமா (Reeldrama), ஐஸ்ட்ரீம் (istream) ஆகிய ஆப்களையும் இருக்கிறது.
மேலும், மனோரமா மேக்ஸ் (Manorama Max), விஆர் ஓடிடி (VR OTT), ஆஹா (Aha), மூவிஸ் நவ் (Movies Now) ஆப்களும் இருக்கின்றன. இந்த ஓடிடி ஆப்களில் 4 ஆப்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். டிவி, மொபைல், டேப்லெட், லேப்டாப் போன்ற 4 டிவைஸ்களிலும் பயன்படுத்தி கொள்ள முடியும். பிளே பிஞ்ச் ஆப் டவுன்லோட் செய்து அனைத்து ஆப்களையும் பயன்படுத்தலாம்.
டாடா பிளே பிஞ்ச் ரூ 199 திட்ட விவரங்கள் (Tata Play Binge Rs 199 Plan Details): இதுவொரு டாடா பிளே பிஞ்ச் ஃபிளெக்சி பிளஸ் (Tata Play Binge Flexi Plus) திட்டமாகும். இந்த திட்டத்தில் 32 ஓடிடி ஆப்களின் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. இவற்றில் 6 ஓடிடி ஆப்களை தேர்வு செய்து பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல ஒரே நேரத்தில் 6 டிவைஸ்களின் ஸ்ட்ரீம் செய்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் ஓடிடிகளை பார்க்கையில், முந்தைய திட்டத்தில் கொடுக்கப்பட்ட ஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவிபிளஸ், சோனிலிவ், ஜீ5 உள்ளிட்ட அனைத்து ஆப்களும் வருகின்றன. ஆனால், கூடுதலாக அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) ஓடிடி திட்டத்தை இந்த திட்டத்தில் பயன்படுத்தி கொள்ள முடியும். இப்போது, அதிக சலுகை கொண்ட திட்டத்தை பார்க்கலாம்.
டாடா பிளே பிஞ்ச் ரூ 349 திட்ட விவரங்கள் (Tata Play Binge Rs 349 Plan Details): இதுவொரு டாடா பிளே பிஞ்ச் மெகா (Tata Play Binge Mega) திட்டமாகும். இந்த மெகா திட்டத்தில் முதல் திட்டத்தின் 31 ஆப்கள் மட்டுமல்லாமல், அமேசான் பிரைம் வீடியோ, எம்எக்ஸ் பிளேயர் (MXPlayer), டிஸ்ட்ரோடிவி (DistroTV) ஆகிய ஆப்களையும் சேர்த்து 34 ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.
இதற்கு ஆப்ஷன் கிடையாது. ஒட்டுமொத்த ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களில் மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய முடியும். அதேபோல சன்நெக்ஸ்ட் ஆப் சந்தாவும் கிடைக்கிறது. இந்த மூன்று திட்டங்களுக்கும் 1 மாதம் வேலிடிட்டி வருகிறது. அதிகப்படியான ஓடிடி ஆப்கள் வேண்டுமானால், இந்த திட்டத்தை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








