வா தலைவா- டாடா நியு சூப்பர் ஆப் ஏப்ரல்7 அறிமுகம்: இந்திய தயாரிப்பு பாஸ்.,விமான சேவை முதல் மளிகை பொருட்கள் வரை!
டாடா நியு சால்ட் டு சாஃப்ட்வேர் குழுமத்தின் பிராண்ட்கள் பட்டியலை இணைக்க ஒரு ஒருங்கிணைந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது டாடா நியு சூப்பர் ஆப் ஆகும். இந்த ஆப் ஏப்ரல் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா நியு என்ற செயலி
ஐபிஎல் 2022 போட்டி பரபரப்பாக நடந்துக் கொண்டி இருக்கிறது. இந்த வருட ஐபிஎல் ஆனது டாடா ஐபிஎல் ஆகும். இந்த ஐபிஎல் போட்டியில் டாடா நியு பாக்ஸ், டாடா நியு என்ற சொல் அதிகளவில் ஒலிக்கவும் காண்பிக்கவும் செய்து விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலி ஏப்ரல் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது இந்த செயலி டாடா குழும ஊழியர்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. டாடாவின் பல்வேறு பயன்பாடும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பணம் செலுத்தலாம், நிதி நிர்வகிக்கலாம், விடுமுறை திட்டமிடலாம். மேலும் பல்வேறு தேடல்களுக்கான கண்டறியும் தளமாக டாடா நியு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

நியு காயின்ஸ் வழங்கப்படும்
தாஜ் குழுமத்தின் ஹோட்டல்கள் முன்பதிவு, பிக்பாஸ்கெட் மளிகை பொருட்கள் ஆர்டர், ஏர் ஏசியா, ஏர் இந்தியா விமான டிக்கெட் புக்கிங், மருந்து ஆர்டர், க்ரோமா மூலமான எலெக்ட்ரானிக் பொருட்கள், வெஸ்ட்சைட் மூலமாக ஆடைகள் ஆர்டர் உள்ளிட்ட பல்வேறு ஆர்டர்களை டாடா நியு ஒருங்கிணைக்கிறது. டாடா நியு தளம் மூலமாக பொருட்கள் ஆர்டர் செய்யும் பயனர்களுக்கு நியு காயின்ஸ் வழங்கப்படும். இந்த செயலி பல்வேறு பயன்பாட்டுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து பல்வேறு ஒருங்கிணைத்த பயன்பாடுகளை இது வழங்க இருக்கிறது.

கூகுள் ப்ளே மற்றும் ஆப்பிள் இன்க் ஆப் ஸ்டோர்
டாடா நியு ஒரே தளத்தின் கீழ் ஷாப்பிங் மற்றும் பணம் செலுத்துவதை செயல்படுத்தும் வகையில் டாடா டிஜிட்டலின் ஒரு மொபைல் செயலி ஏப்ரல் 7 அன்று பொது மக்களுக்காக அறிமுகப்படுத்த இருக்கிறது. கூகுள் ப்ளே மற்றும் ஆப்பிள் இன்க் ஆப் ஸ்டோரில் பட்டியல்கள் மூலம் டாடா நியு செயலியின் வெளியீட்டு தேதி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய சலுகையானது "சூப்பர் ஆப்" ஆக செயல்படுவதோடு, வாடிக்கையாளர்களின் தினசரி மளிகை, மின்னணுவியல், நிதி, விமானம் மற்றும் விடுமுறைத் தேவைகளை பூர்த்தி செய்யும் என கூறப்படுகிறது.

டாடா நியு சால்ட் டு சாஃப்ட்வேர் குழுமம்
அமேசான், கூகுள் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் செய்யும் முயற்சி போன்று டாடா நியு சால்ட் டு சாஃப்ட்வேர் குழுமத்தின் பிராண்ட்கள் பட்டியலை இணைக்க ஒருங்கிணைந்த தளமாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நியு காயின்ஸ் எனப்படும் வெகுமதி புள்ளிகளை ஆப்ஸ் வழங்கும். டாடா இணையதளத்தில் கிடைத்த தகவலின்படி, ஏர் ஏசியா இந்தியா, பிக் பாஸ்கெட், க்ரோமா, டாடா க்ளிக் மற்றும் வெஸ்ட்சைட் உள்ளிட்ட பல்வேறு டாடா நிறுவனங்களின் சலுகைகளையும் இது பட்டியலிடும் என கூறப்படுகிறது.

டாடா பே பயன்பாட்டை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்
ஷாப்பிங் செய்வதை அனுமதிப்பதோடு, டாடா நியு பயனர்கள் தங்கள் பயன்பாட்டின் கீழ் பொருட்களை வாங்குபவர்களை டாடா பே பயன்பாட்டை பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கும். டாடா நியு இந்த வாரம் அறிமுகமானதை தொடர்ந்து இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாங்குதல்கள் மற்றும் கட்டணங்களை அனுமதிப்பதோடு, டாடா நியு பயன்பாடானது பயனர்களுக்கு நிதிச் சேவைகளை வழங்க உதவும் என ஆப் ஸ்டோர் பட்டியலில் உள்ள ஸ்க்ரீன்ஷாட்கள் தெரிவிக்கின்றன. டாடா நிறுவனம் கடந்த பல மாதங்களாக டாடா நியு பயன்பாட்டில் வேலை செய்து வருகிறது. இந்த பயன்பாடு உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு தொழில்துறையில் உள்ள பல்வேறு நிபுணர்களிடம் கருத்துக்காக காண்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications