Just In
- 38 min ago
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- 58 min ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 59 min ago
உங்களிடம் Netflix இருக்குதா ஓடியாங்க ஓடியாங்க.. சந்தோஷமான விஷயம்.! மிஸ் பண்ணாதீங்க
- 3 hrs ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
Don't Miss
- Movies
சிம்பு பிறந்தநாளில் வெளியான சிறப்பு போஸ்டர்கள்.. குவியும் வாழ்த்துக்கள்!
- News
ஓபிஎஸ்-க்கு கட்சியே இல்லை- ஓபிஎஸ் ஒரு செல்லாக்காசு.. இப்படி பொளந்து கட்டுறாரே பொன்னையன்!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பொசுக்கென்று கோபப்பட டோகோமோ: ஜியோவை மிஞ்சும் ரூ.82-ஐ அறிவித்துள்ளது.!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர் "ஆள் அடையாளம் தெரியாமல் போன" டெலிகாம் நிறுவனங்களில் டாடா டோகோமோ நிறுவனமும் ஒன்றாகும். நடிகர் வடிவேலுவின் பிரபல நகைச்சுவை வசனமான - "நாம யார் வம்புக்கு போறது இல்ல; நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்குறது" என்பது யாருக்கு பொருந்துமோ இல்லையோ டாடா டோகோமோ நிறுவனத்திற்கு அப்பட்டமாக பொருந்தும்.

அப்படியாக, எந்த விதமான போட்டி நடவடிக்கையையும் எடுக்காத டாடா டொகோமோ நிறுவனமானது, பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் தனது இணைப்பை அறிவித்து, நாடு முழுவதும் ஐசிஆர் (இன்ட்ரா சர்க்கிள் ரோமிங்) சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலைப்பாட்டில், நாட்டில் தனது ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு திட்டமொன்றை அறிவித்துள்ளது.

ஜியோவின் ரூ.98 விட சிறப்பான நன்மை.!
டாடா டோகோமோ அமைதியாக வெளியிட்டுள்ள ரூ.82 திட்டமானது, கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/- ப்ரீபெய்ட் திட்டத்தை விட சிறப்பான நன்மைகளை கொண்டுள்ளதென்பது ஆச்சரியமளிக்கிறது.

மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!
சுருக்கமாக, டாடா டோகோமோவின் ரூ.82/- ரீசார்ஜ் ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகள் உட்பட 2ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவைவும் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளையும் வழங்குகிறது. இது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

மொத்தம் 2800 எஸ்எம்எஸ்.!
இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ரோமிங் வெளிச்செல்லும் அழைப்புகளும் அடங்கும். மேலும், இந்த திட்டம் ஜியோ திட்டத்தை விட சிறந்தது. ஏனென்றால் இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கொடுக்கிறது, ஆக செல்லுபடியாகும் காலத்திற்கு மொத்தம் 2800 எஸ்எம்எஸ்களை வழங்கும்.

2ஜிபி டேட்டா.!
மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ ஆனது அதன் முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் வெறும் 300 எஸ்எம்எஸ்களை மட்டுமே வழங்கி வருகிறது. இருப்பினும், 4ஜி வேகத்திலான 2ஜிபி டேட்டா வழங்கி முன்னிலை வகிக்கிறது.

சிறந்த 3ஜி தரவு வேகங்களை அனுபவித்து வருகின்றனர்.!
இந்த இடத்தில், ஏர்டெல் உடனான ஐசிஆர் உடன்படிக்கைக்கு பின்னர், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த 3ஜி தரவு வேகங்களை டாடா டோகோமோ பயனர்கள் அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு வட்டாரத்தில்.!
இப்போது வரையிலாக இந்த ரூ.82/- திட்டமானது, தமிழ்நாடு வட்டாரத்தில் கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். ஆனால் இது திறந்தவெளி சந்தை திட்டமாக வாய்ப்பு உள்ளதா என்பது பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை.

நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மட்டுமே.!
இந்த திட்டத்தின் குரல் அழைப்பு நன்மைகளானது நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வரம்பிற்கு பின்னர் நிமிடத்திற்கு 30 பைசாக்கள் கட்டணம் விதிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழான வாராந்தர வரம்பை டாடா டோக்கோமோ குறிப்பிடவில்லை.

நாள் ஒன்றிற்கு 1.4 ஜிபி அளவிலான தரவு.!
இந்த ரூ.82/- கட்டணத் திட்டம் தவிர, டாடா டொகோமோ அதன் ரூ.179/- ரீசார்ஜின் கீழும் ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற அழைப்பு நன்மைகள், நாள் ஒன்றிற்கு 1.4 ஜிபி அளவிலான தரவு, மற்றும் செல்லுபடியாகும் 28 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

56 நாட்கள் மற்றும் 90 நாட்களுக்கு வழங்குகின்றன.!
மறுகையில் உள்ள டாடா டோகோமோவின் ரூ.349/- மற்றும் ரூ.499/- ஆகிய ப்ரீபெய்ட் திட்டங்களானது அதன் சந்தாதாரர்களுக்காக நாளொன்றுக்கு 1.4 ஜிபி அளவிலான தரவு, ரோமிங் அழைப்புகள் உள்ளிட்ட வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை முறையே 56 நாட்கள் மற்றும் 90 நாட்களுக்கு வழங்குகின்றன.


டாட்டா டொகோமோ பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து.!
நீங்கள் ஒரு டாட்டா டொகோமோ பயனராக இருந்தால், புதிய ரூ.82/- ப்ரீபெய்ட் கட்டண திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பினால், கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று டாட்டா டொகோமோ பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து, உங்களுக்குக்கான திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470