நீண்ட நாட்களுக்கு பிறகு 5 புதிய திட்டங்களை அறிமுகம் செய்த டாடா டோகோமோ.!
டாடா டோகோமோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ145 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.145 டாக்டைம் வழங்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தையில் பல்வேறு முன்னணி திட்டங்களை அறிமுகம் செய்த டாடா டொகோமோ, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர் நிலைமை தலைக்கீழ் ஆனது.

மேலும் இந்நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு 5 புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த திட்டங்கள் கண்டிப்பாக அனைத்து டாடா டோகோமோ வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான்
கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டள்ளது.

ரூ.35 ப்ரீபெய்ட் திட்டம்:
டாடா டோகோமோ நிறுவனம் இப்போது ரூ.35 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் ரூ.26.6பைசா டாக்டைம், 100எம்பி 3ஜி டேட்டாவை 28நாட்களுக்கு வழங்குகிறது.

ரூ.65 ப்ரீபெய்ட் திட்டம்:
டாடா டோகோமோ நிறுவனம் ரூ.65 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் ரூ.55 டாக்டைம், 200எம்பி 3ஜி டேட்டாவை 28நாட்களுக்கு வழங்குகிறது.

ரூ.95 ப்ரீபெய்ட் திட்டம்:
டாடா டோகோமோ நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள ரூ.95 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.85 டாக்டைம் வழங்கப்படுகிறது, பின்பு 500எம்பி 3ஜி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.145 ப்ரீபெய்ட் திட்டம்:
டாடா டோகோமோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ145 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.145 டாக்டைம் வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் 1ஜிபி 3ஜி டேட்டாவை 42நாட்களுக்கு வழங்குகிறது இந்நிறுவனம்.

ரூ.245 ப்ரீபெய்ட் திட்டம்:
டாடா டோகோமோ நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள ரூ245 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.245 டாக்டைம் வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் 2ஜிபி 3ஜி டேட்டாவை 84நாட்களுக்கு வழங்குகிறது இந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications