தமிழ்நாட்டின் பெஸ்ட் டாடா டோகோமோ திட்டமான ரூ.499/-ன் நன்மைகள்.!
ஏனெனில், அது மொத்த செல்லுபடியாகும் காலத்தின் கீழ் 126 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.
டாடா டொகோமோ, அதன் சந்தாதாரர் தளத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக, ரூ.82/- முதல் ரூ.499/- வரையிலான காம்போ பட்ஜெட் திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த அனைத்து திட்டங்களுமே, அன்றாட டேட்டா நன்மை, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் வரம்பற்ற எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த தனியார் டெலிகாம் நிறுவனத்தின் பட்ஜெட் திட்டங்களில் ரூ.499/- பிளான் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில், அது மொத்த செல்லுபடியாகும் காலத்தின் கீழ் 126 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

குரல் மற்றும் எஸ்எம்எஸ்.!
126 ஜிபி டேட்டா மட்டுமின்றி வரம்பற்ற குரல் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக, 3ஜி நெட்வொர்க்கிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான வட்டங்களில், டாடா டொகோமோ ஆனது, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இன்டரா-சர்க்கிள் ரோமிங் ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. எனவே டோக்கோமாவினால் 3ஜி சேவையை மட்டுமே வழங்க முடியும், 4ஜி சேவையை வழங்காது.

நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி அளவிலான டேட்டா.!
டாடா டொகோமோவிலிருந்து கிடைக்கும் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் முழுமையான நன்மைகளை பொறுத்தவரை, இது நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் மற்றும் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதன் அர்த்தம் 126 ஜிபி கிடைக்கும் என்று அர்த்தம். அந்த 1.4ஜிபி என்கிற வரம்பை அடைந்த பின்னர், 1 எம்பி டேட்டாவிற்கு 10 பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.

அழைப்பு மற்றும் டேட்டா வரம்பிற்க்கு பின்.?
இந்த திட்டத்தை பயன்படுத்தும் அனைத்து பயனர்களும், நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் என்கிற வரம்பில்ன் கீழ் இலவச குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். அதை தாண்டும் பட்சத்தில், நிமிடத்திற்கு 30 பைசா என்கிற விகிதத்தின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படும்.

தமிழ்நாடு உட்பட.!
இறுதியாக, உள்ள எஸ்எம்எஸ் நன்மைகளை பொறுத்தவரை, ரூ.499/-ன் கீழ் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். டிராய் கட்டுப்பாடுகள் காரணமாக பயனர்கள் 100-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ்களுக்கு மேல் அனுப்ப முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, உ.பி., மேற்கு, ஒரிசா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, பீகார், மும்பை, கேரளா மற்றும் லட்சத்தீவு மற்றும் ராஜஸ்தான் போன்ற வட்டாரங்களில் தற்போது இந்த திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.


புதிய பயனாளர்களுக்கு கூடுதல் நன்மைகள்.!
ரூ.499/-ஐ திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் புதிய பயனாளர்களுக்கு, அழைப்பு வரம்பிற்கு பிறகான 30 பைசா கட்டணம் மற்றும் 1க்கு எம்பிஏ 10 பைசா என்கிற கட்டண விகிதமானது ரீசார்ஜ செய்த தேதி முதல் 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications