Home
News

இப்போது வந்து ஆபர்களை குவிக்கும் டோகோமோ; அப்படியென்ன ஆபர்கள்.?

சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தையில் பல்வேறு முன்னணி திட்டங்களை அறிமுகம் செய்த டாடா டொகோமோ, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர் நிலைமை தலைக்கீழ் ஆனது.

By Muthuraj

சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தையில் பல்வேறு முன்னணி திட்டங்களை அறிமுகம் செய்த டாடா டொகோமோ, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர் நிலைமை தலைக்கீழ் ஆனது.

டாடா டோகோமோ தற்போது பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. ரூ.148/-ல் இருந்து ரூ.499/- வரை பல்வேறு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது. இதற்கிடையில் டாடா டொகோமோ அதன் புதிய ரூ.148/-ஐ அறிமுகம் செய்துள்ளது.

"போராடும் நிறுவனமான" டாடா டோகோமா.!

நிறுவனத்தின் பட்ஜெட் திட்டமான ரூ.148/- ஆனது, நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான 3ஜி டேட்டா மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது. இதனுடன் சேர்த்து "போராடும் நிறுவனமான" டாடா டோகோமா ஆனது ரூ.229/- என்கிற கட்டணத் திட்டத்தையும் வழங்கி வருகிறது. இந்த திட்டம் இதர தனியார் டெலிகாம் நிறுவனங்கள் டேட்டா நன்மைகளை விட அதிக நன்மைகளை வழங்குகிறது.

35 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!

35 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!

நன்மைகளைப் பற்றி பேசுகையில், ரூ.229/- ஆனது மொத்தம் 35 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம், ஒரு நாளைக்கு 1.4 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. அதாவது மொத்தம் 49 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் குரல் அழைப்பு நன்மைகள் வரம்பற்றது அல்ல என்பதும், நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் என்கிற வரம்பை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உள்வரும் ரோமிங் அழைப்புகள்.!

உள்வரும் ரோமிங் அழைப்புகள்.!

அந்த வரம்பை மீறும் பட்சத்தில் நிமிடத்திற்கு 30 பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். உடன் எந்தவொரு பிணையத்திற்கும் இலவசமாக 100 எஸ்எம்எஸ்களை தினமும் அனுப்பலாம். இந்த இடத்தில டாடா டோகோமோவின் சொந்த தளங்களில் உள்வரும் ரோமிங் அழைப்புகள் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகள் இலவசமாக இருக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.

வணிக பயன்பாட்டிற்கு பொருந்தாது.!

வணிக பயன்பாட்டிற்கு பொருந்தாது.!

இந்த திட்டம் வணிக பயன்பாட்டிற்கு பொருந்தாது மற்றும் மற்ற ஆபரேட்டர்களின் கட்டணத் திட்டங்களைப் போல இந்த டோகோமோ திட்டம் 4ஜி சேவையை வழங்காது. ஏனெனில் டோகோமோ இன்னும் நாட்டில் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்தவில்லை. ஆக அணுகப்படும் டேட்டா ஆனது 3ஜி நெட்வொர்க்குக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது பார்தி ஏர்டெல்-ன் இண்ட்ரா சர்க்கிள் ரோமிங் ஒப்பந்தத்தின் மூலம் சேவைகளை வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

90 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!

90 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!

ரூ.229/- திட்டத்துடன், டோகோமோ நிறுவனம் ரூ.148/-ல் இருந்து வரம்பற்ற காம்போ திட்டங்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் ஒவ்வொரு திட்டத்தின் டேட்டா நன்மையும் மற்றும் செல்லுபடியாகும் காலமும் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டிற்கு ரூ.499/- திட்டமானது மொத்தம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Tata Docomo Rs 148 Prepaid Plan Takes on Incumbent Operators Aggressive Data Offerings. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X