ரூ.93/-க்கு ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி டேட்டா : டாடா டொகோமோ.!
ஆந்திரா மற்றும் தெலுங்கானா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே புதிய முன்னுரிமை திட்டம் உள்ளது, இத்திட்டங்கள் 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
டாடாடொகோமோ ஒரு சிறந்த நிறுவனம். 2008 நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் இந்தியாவின் டாடா டெலி சர்விஸ் நிறுவனம் 74 சதவிகித பங்குகளையும் ஜப்பானின் என்.டி.டி டோகொமோ நிறுவனம் 26 சதவிகித பங்குகளையும் கொண்டுள்ளன. இந்நிறுவனத்தின் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
டாடா டொகோமோ தற்போது பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் இதற்க்கு முக்கிய காரணம் ஜியோ நிறுவனம். ஜியோ இலவசங்கள், சலுகைகள் போன்றவற்றை தந்துள்ளதால், தற்போது ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் டாடா டொகோமோ போன்ற நிறுவனங்கள் இப்போது பல ஆபர்களை அறிவித்துள்ளது.
தற்போது டொகோமோ நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் இவை அதிக மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது.

டாடா டொகோமோ ஆபர்:
டாடா டொகோமோ இப்போது அறிவித்துள்ள புதிய திட்டம் என்னவென்றால் ரூபாய்.93க்கு ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி டேட்டாவை பெறமுடியும் என அறிவித்துள்ளது.

ஆன்லைன்:
டோகோமோ தனது வலைத்தளத்தில் கூறியது என்னவென்றால் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை மிகவும் பயன்படும் வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைனில் ரீசார்ஜ் செய்யமுடியும் என அந்நறுவனம் அறிவித்துள்ளது, மே27,2017க்கு முன்பாகவே ரீசார்ஜ் செய்யவேண்டும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

ரீசார்ஜ் கூப்பன்கள்:
டாடா டொகோமோ நெட்வொர்க்கில் 64 மற்றும் 82 ரூபாய்களில் வரம்பற்ற உள்ளூர் அழைப்புகள் வழங்கும் திட்டம் பொருத்தமாட்டில் சமீபத்தில் இரண்டு ரீசார்ஜ் கூப்பன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆந்திரா :
ஆந்திரா மற்றும் தெலுங்கானா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே புதிய முன்னுரிமை திட்டம் உள்ளது, இத்திட்டங்கள் 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.


Click it and Unblock the Notifications