Home
News

35 நாட்கள் செல்லுபடியாகும்; நாள் ஒன்றிற்கு 1.4ஜிபி; விலை என்ன தெரியுமா.?

முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவின் வருகைக்கு பின்னர், காணாமல் போன டெலிகாம் நிறுவனங்களின் பட்டியலில் சேர்ந்த டாடா டோகோமோ நிறுவனம், நீண்ட நாட்கள் கழித்து ஒரு அட்டகாசமான ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது

By Muthuraj

முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவின் வருகைக்கு பின்னர், காணாமல் போன டெலிகாம் நிறுவனங்களின் பட்டியலில் சேர்ந்த டாடா டோகோமோ நிறுவனம், நீண்ட நாட்கள் கழித்து ஒரு அட்டகாசமான ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.

அதென்ன திட்டம்.? அதன் செல்லுபடி காலம் என்ன.? அதன் டேட்டா நன்மைகள் என்ன.? வாய்ஸ் நன்மைகள் எப்படி, ஜியோ மற்றும் ஏர்டெர்ல் போன்று உண்மையான அன்லிமிடெட் அழைப்புகளா.? அல்லது வரம்புகள் உள்ளதா.? என்பதை பற்றி விரிவாக காண்போம்.

49 ஜிபி அளவிலான டேட்டா.!

49 ஜிபி அளவிலான டேட்டா.!

அறிமுகமாகியுள்ள புதிய திட்டத்தின் விலை ரூ.229/-- ஆகும். இதன் செல்லுபடியாகும் காலம் 35 நாட்கள் ஆகும். நன்மைகளை பொறுத்தவரை, இந்த ரூ.229/- ஆனது நாள் ன்ஒன்றிருக்கு 1.4ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். அதாவது செல்லுபடியாகும் மொத காலத்திற்குள் சுமார் 49 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் என்று அர்த்தம்.

உண்மையான வரம்பற்ற குரல் அழைப்புகள்.?

உண்மையான வரம்பற்ற குரல் அழைப்புகள்.?

புதிய ரூ.229/- திட்டத்தின் வாய்ஸ் நன்மைகளை பொறுத்தவரை, உண்மையான வரம்பற்ற குரல் அழைப்புகள் கிடைக்காது. வரம்பிற்கு உட்பட்ட அழைப்புகள் தான் கிடைக்கும். அதாவது, நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் என்கிற விகிதத்தின் கீழ் வாய்ஸ் நன்மைகள் அணுக கிடைக்கும், அந்த வரம்பை மீறினால் நிமிடத்திற்கு 30 பைசா வசூலிக்கப்படும்.

நாள் ஒன்றிற்கு இலவசமாக 100 எஸ்எம்எஸ்.!

நாள் ஒன்றிற்கு இலவசமாக 100 எஸ்எம்எஸ்.!

மேலும் இந்த ரூ.229/- திட்டத்தின் வழியாக, பயனர்கள் எந்தவொரு பிணையத்திற்கும், நாள் ஒன்றிற்கு இலவசமாக 100 எஸ்எம்எஸ்களை அனுப்பலாம். இந்த அனைத்து புதிய ரூ.229/- அனைத்து ரூ.148, ரூ.179, ரூ.348/- மற்றும் ரூ.499/- போன்ற இதர ப்ரீபெய்ட் திட்டங்களுடன் சேர்த்து அறிமுகம் ஆகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
பார்தி ஏர்டெல் மூலம், இண்ட்ரா சர்க்கிள் ரோமிங் ஒப்பந்தத்தின்கீழ் சேவை.!

பார்தி ஏர்டெல் மூலம், இண்ட்ரா சர்க்கிள் ரோமிங் ஒப்பந்தத்தின்கீழ் சேவை.!

மற்ற ஆபரேட்டர்கள் கட்டணத் திட்டங்களைப் போன்றே, இந்த திட்டம் வணிக பயன்பாட்டிற்கு பொருந்தாது. டோகோமோ நாட்டில் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்தாததால், இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் டேட்டா ஆனது 3ஜி என்பதை நினைவில் கொள்ளவும். இந்நிறுவனம் தற்போது பார்தி ஏர்டெல் மூலம், இண்ட்ரா சர்க்கிள் ரோமிங் ஒப்பந்தத்தின்கீழ் சேவைகளை வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.148/- மற்றும் ரூ.499.!

ரூ.148/- மற்றும் ரூ.499.!

ரூ.229/- திட்டத்துடன் சேர்ந்து, ரூ.148/- முதல் வெளியான அனைத்து காம்போ திட்டங்களும், வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் டேட்டா நன்மை மற்றும் செல்லுபடியின் கீழ் வேறுபடுகிறது. ரூ.499/- திட்டமானது ஒரு நாளைக்கு 1.4 ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 90 நாட்கள் வழங்க, ரூ.148/- திட்டம்மானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்தில், மொத்தம் 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Tata Docomo Launches Rs 229 Prepaid Plan With 1.4GB Data Per Day for 35 Days. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X