Home
News

10 பைசாவிற்கு 1எம்பி: அதிரவைத்த டோகோமோ நிறுவனம்.!

டாடா டோகோமா நிறுவனம் தற்சமயம் புதிய ரூ.99/- திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் 1.4ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

தொடர்ந்து ஏர்டெல், ஜியோ, வோடபோன் போன்ற டெலிகாம் நிறுவனம் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது, அந்தவரிசையில் தற்சமயம் டாடா டோகோமா நிறுவனம் புதிய திட்டத்தை மிகவும் மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த திட்டம் பல்வேறு டோகோமா வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10 பைசாவிற்கு 1எம்பி: அதிரவைத்த டோகோமோ நிறுவனம்.!

டாடா டோகோமா நிறுவனம் இப்போது ரூ.99/- திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக பட்ஜெட் திட்டங்களை மட்டுமே டோகோமா நிறுவனம் அறிவித்த வண்ணம் உள்ளது. இதற்கு முன்பு 150எம்பி டேட்டாவை ரூ.39 விலையில் விற்பனை செய்தது டோகோமா நிறுவனம் ஆனால் இப்போது ஜியோ வருகையில் மிகவும் மலிவு விலையில் டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

 10 பைசாவிற்கு 1எம்பி:

10 பைசாவிற்கு 1எம்பி:

10 பைசாவிற்கு 1எம்பி என்ற கணக்கில் புதிய ரூ.99 திட்டத்தை அறிவித்துள்ளது டோகோமோ நிறுவனம், மேலும் இந்த திட்டத்தில் பல்வேறு சலுகைகள் இடம்பெற்றுள்ளது. மேலும் திட்டத்தைப் பற்றி விரவாக பார்ப்போம்.

ரூ.99/- திட்டம்:

ரூ.99/- திட்டம்:

டாடா டோகோமா நிறுவனம் தற்சமயம் புதிய ரூ.99/- திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் 1.4ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த திட்டத்தில் 39.2ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு
கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால் அழைப்புகள்:

கால் அழைப்புகள்:

டாடா டோகோமா ரூ.99 திட்டத்தில் இலவச கால் அழைப்புகள், ரோமிங் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மிகவும் மலிவு விலையில் டேட்டா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிக பயன்பாட்டிற்கு பொருந்தாது:

வணிக பயன்பாட்டிற்கு பொருந்தாது:

இந்த திட்டம் வணிக பயன்பாட்டிற்கு பொருந்தாது மற்றும் மற்ற ஆபரேட்டர்களின் கட்டணத் திட்டங்களைப் போல இந்த டோகோமோ திட்டம் 4ஜி சேவையை வழங்காது. ஏனெனில் டோகோமோ இன்னும் நாட்டில் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்தவில்லை. ஆக அணுகப்படும் டேட்டா ஆனது 3ஜி நெட்வொர்க்குக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்:

90 நாட்களுக்கு செல்லுபடியாகும்:

ரூ.229/- திட்டத்துடன், டோகோமோ நிறுவனம் ரூ.148/-ல் இருந்து வரம்பற்ற காம்போ திட்டங்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் ஒவ்வொரு திட்டத்தின் டேட்டா நன்மையும் மற்றும் செல்லுபடியாகும் காலமும் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டிற்கு ரூ.499/- திட்டமானது மொத்தம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tata Docomo introduces Rs 99 prepaid plan offering 1 4GB per day : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X