"நானும் ரவுடிதான்" என்பது போல ஏர்டெல் அதிரடிக்கு டோகோமோ பதிலடி.!!

Written By:

ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல ரிலையன்ஸ் ஜியோ 4ஜி எப்போது அறிமுகமானதோ அன்றில் இருந்து இந்திய தொலைத் தொடர்புத் துறையில் நடக்கும் சலுகை போட்டிகளால் வாடிக்கையாளர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

குறிப்பாக மலிவு விலையில் அதிவேக தரவு திட்டங்களை முன்பின் வழங்கியிராத இந்திய தொலைத்தொடர்பு துறை ஜியோவின் வெல்கம் ஆஃபர், அதன் நீட்டிப்பான ஹேப்பி நியூ இயர் சலுகை என இலவசங்களை மலிவான கட்டங்களையும் களமிருக்க வேறு வழியே இன்றி கொள்ளை விலையில் டேட்டா பேக்ஸ் விற்றுக் கொண்டிருந்த நிறுவனங்கள் இப்போது அவர்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள மலிவு விலைக்கு சேவைகளை வழங்க தொடங்கியுள்ளது.

அப்படியான ஒரு போட்டி முனைப்பில் தான் நேற்று ஏர்டெல் நிறுவன, இந்தியா முழுவதிலுமான அதன் இரண்டு புதிய தொகுக்கப்பட்ட ப்ரீபெய்ட் வட்ட சலுகையின்கீழ் நாடு முழுவதுதிலுமான இலவச குரல் அழைப்புகள் மற்றும் தரவு நன்மைகள் ஆகிய இரண்டுமே கிடைக்கும் சலுகையை வழங்கியது.

ஏர்டெல் அதிரடி கட்ட டோகோமோ சும்மா இருக்குமா..? நனையும் போட்டியாளர் (நானும் ரவுடி) தான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் இந்தியாவின் மலிவான திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. அதென்ன திட்டம்..? அதன் நன்மைகள் என்ன.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
புதிய திட்டத்தின் விலை

புதிய திட்டத்தின் விலை

டோகோமோ அறிமுகம் செய்துள்ள1 மாத காலம் செல்லுப்படியாகும் இந்த புதிய திட்டத்தின் விலை ரூ.495/- ஆகும், இது 10ஜிபி அளவிலான ஹை-ஸ்பீட் (அதிவேக) தரவை வழங்கும். இதனை வலைதளம் அல்லது ஆன்லைன் மூலம் ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பாதி விலை

பாதி விலை

அடிப்படையில், மற்ற தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்கள் வழங்கும் அதிவேக தரவு பொதிகளில் பாதி விலை தான் இந்த பேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது பிற நிறுவனங்கள் அனைத்தும் அவர்களுடைய 10 ஜிபி அளவிலான 3ஜி மற்றும் 4ஜி டேட்டாவை சுமார் ரூ 999/-க்கு வழங்குகிறது.

நிகராக பிஎஸ்என்எல்

நிகராக பிஎஸ்என்எல்

இதற்கு நிகராக பிஎஸ்என்எல் ரூ.1000/-க்கு அதன் வரம்பற்ற பயன்பாடு பேக்கையும் மற்றும் ரூ.550/-க்கு 10 ஜிபி டேட்டா போக்கையும் வழங்கி வருகிறது. எனினும், பிஎஸ்என்எல்லின் சலுகை போல், டாடா டொகோமோவின் இந்த புதிய திட்டம், இந்தியா முழுவதும் கிடைப்பதில்லை.

ஒன்பது வட்டங்களில் மட்டுமே

ஒன்பது வட்டங்களில் மட்டுமே

டொகோமோவின் இந்தியாவின் மலிவான வரையறுக்கப்பட்ட 3ஜி திட்டமானது ஒன்பது டோகோமோவின் 3ஜி சேவை செயல்பாட்டில் உள்ள ஒன்பது வட்டங்களில் மட்டுமே கிடைக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

யாரெல்லாம் பெறலாம்.?

யாரெல்லாம் பெறலாம்.?

டாடா டொகோமோ அதன் 3ஜி சேவையை இந்திஜியாவில் ஒன்பது வட்டங்களில் மட்டுமே கொண்டுள்ளது. அதாவது மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா-கோவா, பஞ்சாப், தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் (மேற்கு) ஆகியவைகள் அதில் அடங்கும். மேலும் இந்த வாய்ப்பானது விரைவில் அனைத்து வட்டாரங்களிலும் கிடைக்கப்பெறும்.

ஐடியா

ஐடியா

சபாஷ் சரியான போட்டி : ஐடியாவும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்கியது.!

ஏர்டெல்

ஏர்டெல்

ஜியோ இலவச சலுகைகளை தவிடு பொடியாக்கியது ஏர்டெல்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Tata DoCoMo Introduces India’s Cheapest Limited 3G Plan, Offers 10GB for Rs. 495. Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot