தீபாவளி பரிசாக ஆந்திரா வாடிக்கையாளர்களுக்கு முழு டாக்டைமை வழங்கும் டாட்டா டொக்கோமோ

Posted By: Karthikeyan
தீபாவளி பரிசாக ஆந்திரா வாடிக்கையாளர்களுக்கு முழு டாக்டைமை வழங்கும் டாட்டா டொக்கோமோ

தீபாவளி விழாவை அமர்க்களைப்படுத்தும் வகையில் டாட்டா டொக்கோமோ நிறுவனம் தனது ஆந்திரா வாடிக்கையாளர்களுக்கு முழு டாக்டைமை பரிசாக வழங்குகிறது. இந்த முழு டாக்டைம் திட்டங்களுக்கு ஆர்சிவி222 மற்றும் ஆர்சிவி 250 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது. இந்த திட்டங்களை அந்திரா டாட்டா டொக்கோமோ பிரிபெய்ட் ஜிஎஸ்எம் வாடிக்கையளர்களுக்கு வழங்குகிறது

ஆர்சிவி222 என்ற திட்டத்தில் டொக்கோமோ ஜிஎஸ்எம் பிரிபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.222க்கு ரிசார்ஜ் செய்தால் ரூ.222 முழு டாக்டைமைப் பெறலாம். மேலும் இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு 2 வினாடிகளுக்கு 1 பைசா வசூலிக்கப்படும்.

இந்த முழு டாக்டைமை வழங்குவதன் மூலம் ஆந்திர டொக்கோமோ பிரிபெய்ட் வாடிக்கையாளர்கள் இந்த தீபாவளி சமயத்தில் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பேசி மகிழ முடியும் என்று டொக்கோமோவின் தலைவர் ராமகிருஷ்ணா கூறுகிறார்.

இந்த ரூ.222 திட்டத்தை ஆக்டிவேட் செய்ய *141*651# டயல் செய்தால் போது. இந்த திட்டத்தைப் பெறலாம். ஆனால் ஆர்சிவி 250 திட்டத்தில் தனது ஜிஎஸ்எம் வாடிக்கையாளர்களுக்கு டொக்கோமோ முழு டாக்டைமையும் அதே நேரத்தில் 2ஜிபி இன்டர்நெட் வசதியையும் வழங்குகிறது. 10கேபி போஸ்ட் 2ஜிபி டேட்டா பயன்பாட்டிற்கு 10 பைசா மட்டும் செலுத்தினால் போதுமானது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot