Just In
- 4 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 5 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 5 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 6 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
முதல்வர் ஸ்டாலின் மிக நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.. அவரை பாராட்டுகிறேன்.. கே.எஸ்.அழகிரி பேட்டி!
- Sports
6 பந்தால் தோல்வியை தழுவிய இந்தியா.. தனி ஆளாக போராடிய வாசிங்டன் சுந்தர்.. காலை வாரிய டாப் ஆர்டர்
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
Apple-ஐ தட்டி தூக்க தெளிவாக பிளான் போடுகிறதா Tata? 5000 கோடி பேரம் பேசி புது ஸ்கெட்ச்.!
இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு (iPhone manufacturing in India) மற்றும் அசெம்பிள் (iPhone assembled in India) செய்யும் பணிகள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடையத் துவங்கியுள்ளது. ஏற்கனவே, ஆப்பிள் நிறுவனத்திற்கு நெருக்கமான 3 முக்கிய தயாரிப்பாளர்கள் இந்தியாவிற்குள் ஐபோன் தயாரிப்பில் களமிறங்கியுள்ளன என்பது பலரும் அறிந்திருக்கக் கூடிய தகவல் தான். இருப்பினும், சமீபத்திய தகவல் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான டாடா (Tata) நிறுவனம் இப்போது ஐபோன் அசெம்பிள் செய்யும் பெசிலிட்டி (iPhone assemble facility) அமைப்பை முழுமையாக விலைக்கு வாங்க முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஸ்ட்ரான் (Wistron) என்ற ஐபோன் அசெம்ப்ளி வசதியை டாடா நிறுவனம் சுமார் ரூ. 5,000 கோடிக்கு வாங்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

டாடா குழுமம் 5,000 கோடி ரூபாய்க்கு இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள ஐபோன் அசெம்பிள் வசதியை வாங்க தைவானிய உற்பத்தியாளரான (Taiwanese manufacturer) விஸ்ட்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமீபத்திய ராய்ட்டர்ஸ் அறிக்கை வெளிப்படுத்துகிறது. இந்த வசதியை வாங்குவதற்கு டாடா அதிக ஆர்வம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை, இந்த பேச்சுவார்த்தை டாடா குழுமத்திற்குச் சாதகமாக முடியவில்லை என்றாலும் கூட, டாடா நிறுவனம் மற்றொரு பிளானை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டாட்டா மற்றும் விஸ்ட்ரான் இடையிலான ஒப்பந்தம் நினைத்தபடி நல்ல விதமாக முடியவில்லை என்றால், டாடா நிறுவனம் விஸ்ட்ரானுடன் ஒரு கூட்டு முயற்சியைத் தொடங்க திட்டமிடும் என்று டாட்டா நிறுவனத்திற்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. செப்டம்பரில், இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் ஒரு கூட்டு எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு முயற்சியை அமைக்க டாடா விஸ்ட்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்தது.

தயாரிப்புகளை உருவாக்குதல், பின்னர் அவற்றை உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்வது மற்றும் மேம்படுத்தல்களை மேற்கொள்வது போன்ற பல விஷயங்களை விஸ்ட்ரானின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த டாடா விரும்புகிறது. இந்தியாவில் ஐபோன்கள் தற்போது விஸ்ட்ரான் (Wistron), ஃபாக்ஸ்கான் (Foxconn) மற்றும் பெகாட்ரான் (Pegatron) ஆகிய மூன்று நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன.
அவர்களின் அறிக்கையின்படி, விஸ்ட்ரானின் ஐபோன் அசெம்பிளிகளை அவற்றின் தற்போதைய வெளியீட்டை ஐந்து மடங்கு அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக அதன் புதிய ஒப்பந்தம் தெரிவிக்கிறது. தென்னிந்தியாவில் ஐபோன் சேஸிஸ் உதிரிப்பாகங்களைத் தயாரிப்பதில் (iPhone Chasis Manufacturer), ஸ்மார்ட்போன் விநியோகச் சங்கிலியில் டாடா ஏற்கனவே முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதையும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

பெகாட்ரான் சமீபத்தில் இந்தியாவில் புதிய ஐபோன் 14 சீரிஸ்களை (iPhone 14 series) அசெம்பிள் செய்யத் தொடங்கியுள்ளது. ஃபாக்ஸ்கான் செப்டம்பரில் அவற்றைத் தயாரிக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் கடுமையான கோவிட்-19 லாக்டவுன்கள் காரணமாக, குபெர்டினோ நிறுவனமானது சீனாவிலிருந்து அதன் உற்பத்தியை மாற்று முயன்று வருகிறது.
இதனால், 2025 ஆம் ஆண்டுக்குள் ஆப்பிள் இந்தியாவில் உள்ள நான்கு ஐபோன்களில் ஒன்றை உருவாக்க முடியும் என்று JP மோர்கன் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். சீனாவில் இருந்து மாற்றம் செய்ய போகும் ஐபோன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் கால்பதிக்க முக்கிய காரணம் பல பொருளாதார விஷயங்கள் கூறப்பட்ட போதிலும், இந்தியா மிகவும் நெருக்கமான வளர்ந்து வரும் நாடாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470