Home
News

பாஸ் ரிட்டர்ன்ஸ்.. மீண்டும் டெலிகாமில் டாட்டா.. eSIM கம்பெனியை வளைத்துபோட்ட ஒப்பந்தம்.. பீதியில் ஜியோ!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமனான ஜியோ (Jio) மட்டுமல்லாமல், ஏர்டெல், வோடபோன் போன்ற மற்ற நிறுவனங்களுக்கும் பீதியை ஏற்படுத்தும் வகையில், டாடா கம்யூனிகேஷன்ஸ் (Tata Communications), முன்னணி இ-சிம் (eSIM) கார்டு நிறுவனத்துடன் மிகப்பெரும் ஒப்பந்தத்தை போட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நானோ சிம் கார்டுகளையே (Nano SIM) பயன்படுத்தி வருகின்றனர். 1991ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சிம் கார்டுகள் கடந்த 30 ஆண்டுகளில் ஸ்டாண்டர்ட் சிம் (Standard SIM), மைக்ரோ சிம் (Micro SIM), நானோ (Nano SIM) சிம் என்று படிப்படியாக அளவில் குறைந்து கொண்டே வருகிறது.

SIM கார்டு கதை முடிஞ்சது! eSIM வரப்போகுது! டாடாவின் ஸ்மார்ட் சிம் டீல்

இப்போது, பல்வேறு நாடுகளில் இ-சிம் பயன்பாடு அதிகரித்து விட்டது. சாதாரணமாக கழற்றி மாட்டக்கூடிய வகையில் இருக்கும் சிம் கார்டுகளை போலல்லாமல், ஸ்மார்ட்போனின் மதர்போர்டிலேயே பொருத்தப்பட்டிருக்கும் சிம் கார்டுகளே இ-சிம் என்றழைக்கப்படுகின்றன. இந்த இ-சிம் தயாரிப்பில், பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றன.

அந்த வரிசையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒயாசிஸ் ஸ்மார்ட் சிம் (Oasis Smart Sim) என்னும் நிறுவனமும், இ-சிம் தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறது. உலகம் முழுவதும் 100 மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதுவரையில் 35 லட்சம், இ-சிம் சிஸ்டம்களை தயாரித்து விற்பனை செய்துள்ளது.

இந்த நிறுவனத்தின் 58.1 சதவீத பங்குகளை இந்தியாவின் டாட்டா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 2020ஆம் ஆண்டில் வாங்கியிருந்தது. இதைத்தொடர்ந்து, இ-சிம் தயாரிப்பில் டாடா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், டாடா நிறுவனம் எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வந்தது.

இந்த சூழலில், அந்த நிறுவத்திள் மீதமுள்ள 41.9 சதவீத பங்குகளையும் வாங்க விருப்பம் தெரிவித்தது மட்டுமல்லாமல், அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் ஒயாசிஸ் ஸ்மார்ட் சிம் நிறுவனத்தின், மொத்த பங்குகளும் டாடாவிடம் வரப்போகிறது. இந்தாண்டு இறுதிக்குள் ஒயாசிஸ் ஸ்மார்ட் சிம் நிறுவனத்தை டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நிர்வாகிக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்த உயர்மட்ட பேச்சு வார்த்தை ஜூன் 19ஆம் தேதி நடக்கிறது. இதில் இரண்டு நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொள்கின்றனர். இதுகுறித்து, டாடா கம்யூனிகேஷன்ஸ் தலைமை வியூக அதிகாரி (Chief Strategy Officer) ட்ரை பாம் கூறுகையில், "இ-சிம் கார்டு தயாரிப்பானது, உலகளவில் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டி வருகிறது. அதேநேரத்தில், பயன்பாடுக்கு கொண்டுவருவதில் பின்னடைவுகளையும் பார்க்க முடிகிறது.

இந்த பின்னடைவுகளுக்கு புதுமையான தீர்வுகளை வழங்குவதில், ஒயாசிஸ் ஸ்மார்ட் சிம் நிறுவனம், சிறந்து விளங்குகிறது. இந்த நேரத்தில், அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று தெரிவித்தார். டாட்டாவின், இந்த ஒப்பந்தத்தால், இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் பீதியில் இருக்கின்றன. அதேபோல மக்களும் புதிய தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டிய சூழல் ஏற்படலாம்.

இருப்பினும், டாட்டாவின் எதிர்கால முடிவுகளை பொறுத்தே எதையும் சொல்ல முடியும்.மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tata Communications Buying Remaining Stake in Oasis Smart Sim Firm To Set eSIM Business
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X