ஆன்லைனில் மது வாங்க இந்த லிங்க் கிளிக் செய்யுங்கள் செய்தி போலியா? டாஸ்மாக் விளக்கம்!

|

சமூக ஊடகங்களில் ஆன்லைனில் மது விற்பனை துவங்கிவிட்டது, அதற்கான லிங்க் இதுதான் குடிமக்களே என்று ஒரு செய்தி பரவலாகப் பகிரப்பட்டு வைரல் ஆகிவருகிறது. இந்த செய்தி உண்மை தானா? இதற்குப் பின்னணியில் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் உள்ளதா என்று விசாரித்த போது டாஸ்மாக் நிர்வாகம் கொடுத்த உண்மை விளக்கம் இதுதான். உண்மை என்னனு நீங்களும் தெரிஞ்சுக்கோங்க குடிமக்களே.

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்க சிக்கல்

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்க சிக்கல்

தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் மக்கள் மதுபானங்களை வாங்குவதற்குக் கட்டாயம் சமூக இடைவேளையைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு பின்னரே கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளைத் திறந்தவுடன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு எதுவும் பின்பற்றப்படவில்லை, மக்களும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

பாதுகாப்பு நடவடிக்கைகளை அலட்சியப்படுத்திய குடிமகன்கள்

பாதுகாப்பு நடவடிக்கைகளை அலட்சியப்படுத்திய குடிமகன்கள்

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதும் மதுபானம் வாங்குவதற்காக வரிசையில் நின்ற குடிமகன்கள் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக நின்று சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், பாதுகாப்பு நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தி மதுபானங்கள் வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தியது பல போட்டோக்கள் மற்றும் வீடியோகளில் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இதைக் கவனித்த சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதித்தது.

டீ, காபி இல்ல., 90 நிமிடத்துக்கு முன்பாக வரனும்: இனிமே இப்படிதான்- ரயில் பயணத்துக்கான வழிமுறைகள்!டீ, காபி இல்ல., 90 நிமிடத்துக்கு முன்பாக வரனும்: இனிமே இப்படிதான்- ரயில் பயணத்துக்கான வழிமுறைகள்!

பெரிய வசூலைச் சம்பாதித்த டாஸ்மாக்

பெரிய வசூலைச் சம்பாதித்த டாஸ்மாக்

இதனால் மே 7 ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் இரண்டே நாளில் மூடப்பட்டது. ஆனால், இந்த இரண்டு நாளில் மட்டும் டாஸ்மாக் கடைகள் மொத்தமாக ரூ.294.7 கோடி ரூபாய்க்கு மதுபானங்களை விற்பனை செய்துள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளில் ரூ.172.59 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டாவது நாளில் மொத்தமாக சுமார் ரூ.122 கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்து பெரிய வசூலைச் சம்பாதித்துள்ளது.

ஆன்லைனில் மது விற்பனை என்னாச்சு?

ஆன்லைனில் மது விற்பனை என்னாச்சு?

சமூக இடைவெளியின்றி, பாதுகாப்பு நடவடிக்கை எதுவுமின்றி டாஸ்மாக் கடைகள் விற்பனை செய்ததன் காரணமாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஊரடங்கு காலம் முடிவிற்கு வரும் வரையும் மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது என்று அறிவித்தது. ஆன்லைனில் மது விற்பனை குறித்து அரசு ஆலோசிக்கலாம் என்று கூறி, டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதித்தது.

டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க முயற்சி

டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க முயற்சி

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. உச்ச நீதிமன்றம் நம்பிக்கையான தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கையில் டாஸ்மாக் நிர்வாகம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்வது. இதற்கான முயற்சிகளை டாஸ்மாக் தற்பொழுது செய்து வருகிறது.

Work from Home செய்பவர்களுக்கு அடுத்த ட்விஸ்ட் - ஐடி தொழில்துறையில் அடுத்த மாற்றம் இதுதானா?Work from Home செய்பவர்களுக்கு அடுத்த ட்விஸ்ட் - ஐடி தொழில்துறையில் அடுத்த மாற்றம் இதுதானா?

ஆன்லைனில் மது விற்பனையை ஆரம்பமாகிவிட்டது செய்தி உண்மையா? பொய்யா?

ஆன்லைனில் மது விற்பனையை ஆரம்பமாகிவிட்டது செய்தி உண்மையா? பொய்யா?

ஆனால், சமூக ஊடகங்களில் ஆன்லைனில் மது விற்பனையை ஆரம்பமாகிவிட்டது. அதற்கான லிங்க் இது தான், இதன் மூலம் மதுபானங்களை ஆர்டர் செய்யலாம் என்ற செய்தி வைரலாகி வருகிறது. ஆன்லைன் விற்பனை குறித்து டாஸ்மாக் நிறுவனம் இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில் இந்த செய்தி முற்றிலுமாக ஒரு போலியான செய்தி என்று டாஸ்மாக் விளக்கமளித்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள்

வழக்கை விசாரித்த நீதிபதிகள்

இதற்கிடையில், டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அனுமதிகேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் நேற்று தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி மற்றும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய பென்ச் விசாரித்தது.

சாதகமாக தீர்ப்பு வருமா

சாதகமாக தீர்ப்பு வருமா

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி விசாரணையை இன்று தள்ளி வைத்துள்ளனர். குடிமகன்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

Read more about:
English summary
TASMAC Online Booking To Purchase Liquor Website Link Is Not Real : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X