வச்சிட்டாங்க ஆப்பு! Jio, Airtel திட்டங்களின் மீது விலை உயர்வு! இனி ரீசார்ஜ் செய்ய எவ்வளவு அதிகம் செலவு ஆகும்?

|

நீங்களொரு ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) வாடிக்கையாளராக இருந்தாலும் சரி, அல்லது பார்தி ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் கஸ்டமராக இருந்தாலும் சரி..

அவ்வளவு ஏன் நீங்கள் ஒரு வோடாபோன் ஐடியா (Vodafone Idea) யூசராக இருந்தாலும் சரி.. வருகிற 2023 ஆம் ஆண்டில் மொபைல் ரீசார்ஜ்களுக்காக (Mobile Recharge) அதிகம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

ஏனென்றால்?

ஏனென்றால்?

பிசினஸ் இன்சைடர் இந்தியாவின் (Business Insider India) வழியாக வெளியான ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, இந்திய டெலிகாம் ஆபரேட்டர்கள் (Indian Telecom Operators) தங்களுடைய ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

அதாவது ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகிய மூன்றுமே - கூடிய விரைவில் - கட்டண உயர்வை (Tariff Hike) அறிவிக்க உள்ளனர். ஆக அடுத்த சில தினங்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது என்றாலும் கூட, நிச்சயமாக 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் உயர்த்தப்படும்!

அவஸ்தை படாதீங்க! வீட்டில் இருந்தபடியே மின் இணைப்பு (EB) எண்ணை ஆதார் உடன் இணைக்க ஒரு ஈஸியான வழி இருக்கு!அவஸ்தை படாதீங்க! வீட்டில் இருந்தபடியே மின் இணைப்பு (EB) எண்ணை ஆதார் உடன் இணைக்க ஒரு ஈஸியான வழி இருக்கு!

எவ்வளவு உயர்த்தப்படும்?

எவ்வளவு உயர்த்தப்படும்?

வெளியான அறிக்கையின்படி, பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரண்டுமே 10% என்கிற கட்டண உயர்வை கூடிய விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது நீங்கள் ரூ,299 மதிப்பிலான ரீசார்ஜை பயன்படுத்துகிறீர்கள் என்றால் 10% என்கிற விலை உயர்விற்கு பின்னர் அந்த திட்டத்தின் விலை ரூ.329 ஆக மாறிவிடும். அதாவது ரூ.30 கூடுதலாக செலவு செய்ய நேரிடும்.

எல்லாம் நல்லா தானே போய்ட்டு இருக்கு! ஏன் இந்த திடீர்  விலை உயர்வு?

எல்லாம் நல்லா தானே போய்ட்டு இருக்கு! ஏன் இந்த திடீர் விலை உயர்வு?

பிசினஸ் இன்சைடர் இந்தியா வழியாக வெளியான அறிக்கையானது, வரவிருக்கும் கட்டண உயர்வுக்கான காரணங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

அதன்படி, வருவாய் (Revenue) மற்றும் விளிம்புகள் (Margins) மீது அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் ARPU (Average Revenue Per User) விகிதத்தில் காணப்படும் மிதமான ஆதாயங்கள் ஆகியவைகளே வரவிருக்கும் கட்டண உயர்வுக்கான முக்கிய காரணங்கள் ஆகும்.

சமீபத்திய தரவுகளின்படி, ரிலையன்ஸ் ஜியோவின் ARPU விகிதம் ஆனது 0.8% அதிகரித்துள்ளது, அதேசமயம் வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் ARPU விகிமானது முறையே 1% மற்றும் 4% மட்டுமே அதிகரித்துள்ளது.

Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!

ஒரு விஷயத்தை செஞ்சா.. இதில் இருந்து தப்பிக்கலாம்!

ஒரு விஷயத்தை செஞ்சா.. இதில் இருந்து தப்பிக்கலாம்!

வரும் நாட்களில் அறிவிக்கப்படவுள்ள ரீசார்ஜ் கட்டண விலை உயர்வில் சிக்கொள்ள விரும்பாத ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா வாடிக்கையாளர்களால்.. ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே செய்ய முடியும்.

அது என்னவென்றால் 6 மாதங்கள் அல்லது 365 நாட்கள் செல்லுபடியாகும் ஏதேனும் ஒரு லாங்-வேலிடிட்டி பிளானை (Long Validity Plan) ரீசார்ஜ் செய்து கொள்ளவும். அந்த திட்டம் உங்களுக்கு போதுமான டேட்டா நன்மைகளை (Data Benefits) வழங்குவதையும் உறுதி செய்துகொள்ளவும்.

இப்படி செய்வதன் மூலம் அடுத்த 6 மாதங்களுக்கு அல்லது 1 ஆண்டிற்கு உங்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது; மேலும் அடுத்தடுத்து வரும் விலை உயர்வுகளை பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

மொத்த இந்தியாவும் 5ஜி-க்கு மாறும் நேரத்தில் 4ஜி பிளானை ரீசார்ஜ் செய்வது.. நல்லதா?

மொத்த இந்தியாவும் 5ஜி-க்கு மாறும் நேரத்தில் 4ஜி பிளானை ரீசார்ஜ் செய்வது.. நல்லதா?

இந்த கேள்விக்கு உங்களுடைய தினசரி இண்டர்நெட் பயன்பாட்டை பொறுத்தே.. உங்களுடைய டேட்டா தேவைகளை பொறுத்தே பதில் சொல்ல முடியும். அதுமட்டுமின்றி, உங்கள் நகரத்தில் 5ஜி சேவைக்கான ஆதரவு கிடைக்கிறதா என்பதும் இங்கே முக்கியம்.

ஒருவேளை உங்கள் நகரத்தில் 5ஜி சேவைகள் அணுக கிடைத்தால், கண்டிப்பாக 2ஜிபி அளவிலான டெய்லி டேட்டா உங்களுக்கு போதுமானதாக இல்லாமல் போகலாம்.

ஒருவேளை உங்கள் நகரத்திற்கு 5ஜி சேவைகள் "இப்போதைக்கு வராது" என்றால்.. அல்லது 5ஜி சேவைகள் வந்தாலும் கூட, நான் 4ஜி சேவைகளைத்தான் பயன்படுத்த போகிறேன் என்கிற எண்ணம் உங்களுக்கு இருந்தால்.. நீங்கள் தாராளமாக ஒரு லாங்-வேலிடிட்டி திட்டத்தை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்; வரவிருக்கும் கட்டண உயர்வில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்!

Best Mobiles in India

English summary
Tariff Hike Alert For Jio Airtel Users Both Companies To Increase Recharge Price By 10 Percent

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X