TANGEDGo அட்வைஸ்.. மின்வாரியமே சொல்லிட்டாங்க.. இப்படி செஞ்சா EB பில் 36% குறையும்.. அதிக பில் கட்டாதீங்க..
இந்த கோடை காலத்தில், எல்லோர் வீட்டிலும் ஃபேன், மற்றும் இதர மின்விசிறி சாதனங்கள் வழக்கத்தை விட, ஓய்வின்றி முழுநேரம் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதனால், மின் கட்டணம் அதிகளவு உயர்கிறது. உங்கள் மின்கட்டணத்தை 36% குறைக்க ஒரு சிறந்த வழி இருக்கிறதென்று TANGEDGo கூறியுள்ளது.
என்னது மின்சார கட்டணத்தை 36% சதவீதம் குறைக்க முடியுமா? உண்மையாவா? என்று சிலர் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினாலும், இது சாத்தியம் என்கிறது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் (TANGEDGo). ஆம் மக்களே, தற்போது தமிழக மின்வாரியமே வெளியிட்டுள்ள இந்த ஒரு அட்வைஸை நீங்கள் சரியாக பின்பற்றி வந்தால், கட்டாயம் உங்களுடைய மின்சார கட்டணம் 36% குறையும் என்கிறது TANGEDGo.

TANGEDGo அட்வைஸ்.. மின்சார கட்டணத்தை 36% குறைக்க இது தான் ஒரே வழி (TANGEDGo advice to reduce 36% of your EB bill):
கோடை காலம் துவங்கி, அடுத்து கத்திரி வெயில் காலமும் துவங்கி, மக்களை வெயில் தந்தூரி அடுப்பில் வைத்து வாட்டியெடுப்பது போல வதைத்துக் கொண்டிருக்கிறது. வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்க இப்போது எல்லோருடைய வீட்டிலும் வழக்கத்திற்கு மாறாக மின்விசிறி மற்றும் மற்ற எலெக்ட்ரிக் சாதனங்களை முழுநேரம் மக்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வெய்யிலின் வெப்பத்தில் இருந்து தப்பிக்க சீலிங் ஃபேன் (Ceiling Fan), டேபிள் ஃபேன் (Table Fan), கூலிங் ஃபேன் (Cooling Fan), டவர் ஃபேன் (Tower Fan), ஏர் கூலர் (Air Cooler), ஏசி (AC) போன்ற சாதனங்கள் இப்போது ஓய்வின்றி முழுநேரம் இயங்க வேண்டியதுள்ளது. இதனால் மின்சார கட்டணம் ஒவ்வொரு குடும்பத்திலும் அதிகரித்துள்ளது.
இதிலும் குறிப்பாக, ஏசி பயன்படுத்துவோரின் மின்கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளது. உண்மையை சொல்ல போனால், பல வீடுகளில் இப்போது சீலிங் ஃபேன் போல ஏசி தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் வழக்கத்தை விட அதிகளவு மின்சாரம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் மக்கள் பயன்படுத்த வேண்டிய மின்சார அளவை, மக்கள் கடந்த வாரமே எட்டிவிட்டனர் என்று தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

ஏசி முழு நாள் ஓடினாலும் மின்சார கட்டணத்தை 36% குறைக்க முடியுமா? முடியுமென்கிறது TANGEDGo:
இன்னும் மக்கள் மின்சாரத்தை அதிகளவு பயன்படுத்திவருகிறார்கள். இந்த வருடத்திற்கு தேவையான மின்சாரம் என்று கணக்கிடப்பட அளவை தாண்டி மக்களின் மின்சார பயன்பாடு நேர்முகம் காட்டி சென்றுகொண்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த போக்கை கட்டுப்படுத்தவும், மக்கள் பயன்படுத்தும் மின்சார கட்டணத்தை குறைக்கவும் தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் (TANGEDGo) ஒரு அறிவுரையை வழங்கியுள்ளது.
ஏசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால் பயன்படுத்தப்படும் மின்சார அளவும் அதிகரித்துவிட்டது. பல மக்கள், அவர்களுடைய ஏசியை 18°C இல் வைத்து இயக்குகிறார்கள். இது மின்சாரத்தை பல மடங்கு எடுத்துக்கொள்கிறது. இதனால் மின்சார கட்டணமும் பல ஆயிரங்கள் வரை உயர்கிறது என்று TANGEDGo கூறியுள்ளது. உங்கள் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டுமென்றால், ஏசியை 24°C - 26°C வெப்பத்தில் இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஏசியை 24°C - 26°C வெப்பத்தில் இயக்கும் பொழுது உங்கள் மின்சார பயன்பாடு 36% குறைகிறது என்று TANGEDGo தெரிவித்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக தமிழக மின்வாரியத்திடம் இருந்து வந்த அறிவுரை என்பதனால் மக்கள் இதை பின்பற்றி அவரவர் மின்சார கட்டணத்தை குறைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விபரம் தெரியாதவர்களுக்கும் இந்த தகவலை பகிர்ந்து பயன்பெற செய்யுங்கள் மக்களே.


Click it and Unblock the Notifications








