Home
News

மின்வாரியத்தின் பலே ஐடியா.. இனி அந்த பிரச்சனை இருக்காது.. UPI.. TANGEDCO இனி எஸ்எம்எஸ் அனுப்பும்..

தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் மின் கட்டணத்தை (EB bill charges) வாட்ஸ்அப் (WhatsApp) வழியாகச் செலுத்தும் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மின்சார பயனாளிகளுக்கு மீண்டும் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம். இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கட்டணம் செலுத்தி வருகிறோம். இது மற்ற கட்டணங்களைப் போல் எளிதாக நினைவில் இல்லாமல் போகிறது. அதுவும் சிலருக்கு மின் கட்டணம் செலுத்த சுத்தமாக மறந்துவிடுகின்றனர். இதனால் கடைசி நாளில் விதிக்கப்பட்ட நேரத்தை கடந்ததும் வீட்டில் மின் இணைப்பை மின்சார ஊழியர்கள் துண்டிக்கிறார்கள்.

மின்வாரியத்தின் பலே ஐடியா.. இனி அந்த பிரச்சனை இருக்காது..

எனவே திடீரென மின் இணைப்பைத் துண்டித்தால் வீட்டில் இருப்பவர்களுக்கு அசவுகரியம் ஏற்படும். இந்த பிரச்சனை தவிர்க்கத் தான் தற்போது அவகாசத்திற்கு 3 நாட்களுக்கு முன்பே எஸ்எம்எஸ் மூலம் நினைவூட்டுகிறது தமிழ்நாடு மின்சார வாரியம். இது குறித்து மின்சார வாரியம் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் முக்கியத் தகவலை வெளியிட்டது.

அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது நினைவூட்டல் குறுஞ்செய்தியைக் கடைசி 3 நாட்களுக்கு முன்னதாக யூபிஐ #UPI இணைப்புடன் அனுப்புகிறது. குறித்த நேரத்தில் கட்டணம் செலுத்தி தாமதக் கட்டணத்தை தவிர்க்கவும்! #TANGEDCO இப்போது உங்கள் நம்பிக்கைக்குரிய தோழனும் கூட! இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்வாரியத்தின் பலே ஐடியா.. இனி அந்த பிரச்சனை இருக்காது..

இதுதவிர மின்சார வாரிய மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை கூட எளிதாக்கியுள்ளது. முன்பு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால், மின்சார வாரிய அலுவலகத்துக்குச் சென்று தான் மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நிலைமை இருந்தது. அதனைத் தொடர்ந்து இணையதள வசதி வந்ததும் ஒவ்வொரு சர்வீஸ் எண்ணிற்கும் யூசர் நேம், பாஸ்வேர்டு தரப்பட்டது. இதைக் கொண்டு தான் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கட்டணம் செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் மீண்டும் ஒரு நடைமுறை வந்துள்ளது. அதன்படி தற்போது வாட்ஸஅப் மூலம் மின்சார கட்டணம் செலுத்தும் நடைமுறை வந்துள்ளது. அதாவது தமிழக மக்கள் இந்த சேவையைப் பயன்படுத்த போனில் '94987 94987' என்ற எண்ணை சேவ் செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக இந்த மொபைல் எண்ணை உங்கள் போனில் சேவ் (Save)செய்த பிறகு, வாட்ஸ்அப் ஓபன் செய்யவும், இப்போது உங்கள் காண்டாக்ட் (Contact) பட்டியலில், Tangedco லோகோவுடன் கூடிய பச்சை டிக் மார்க் கொண்ட வாட்ஸ்அப் கணக்கு காண்பிக்கப்படும்.

மின்வாரியத்தின் பலே ஐடியா.. இனி அந்த பிரச்சனை இருக்காது..

குறிப்பாக பச்சை நிற டிக் (Green tick mark) உள்ள வாட்ஸ்அப் கணக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட உண்மையான கணக்கு என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினால் போதும், அதில் View Bill (வியூ பில்), Pay bill (பே பில்) என வரும். முதலில் வியூ பில்லை கிளிக் செய்தால் உங்கள் மின் கட்டணம் பிடிஎஃப்பில் எளிமையாக டவுன்லோடு செய்யலாம்.

இந்த கட்டணத்தை ஒரு முறை பார்த்துவிட்டு பிறகு Pay bill என்பதை கிளிக் செய்தால் போதும் போன் பே, கூகுள் பே என பல ஆப்ஷன் வரும் இதில் உங்களுக்கு எந்த ஆப்ஷன் வேண்டுமோ அதை ஓபன் செய்து பணத்தைச் செலுத்திக் கொள்ளலாம். குறிப்பாக இந்த புதிய வசதிகள் தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
tangedco will send sms with UPI link 3 days before electricity bill payment: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X