Home
News

EB கட்டணத்தை இனி WhatsApp-ல் செலுத்தலாம்.. TANGEDCO வெளியிட்ட புதிய பேமெண்ட் சேவை.. எப்படி யூஸ் செய்வது?

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் (TANGEDCO) புதிதாக வாட்ஸ்அப் மூலம் உங்கள் மின் கட்டணத்தை செலுத்தும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வாட்ஸ்அப் மூலம் இனி இபி பில்லை (EB bill) கட்டிடமுடியும் மக்களே.

தமிழ்நாடு மின்சார வாரியம் (Tamil Nadu Electricity Board) நேற்று அதன் மின்சார பில்லிங் பேமெண்ட் (electricity billing payment) சேவையின் கீழ் புதிதாக ஒரு சேவையை இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது. TANGEDGo வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி, இனி பொதுமக்கள் அவர்களின் மின்சார பயன்பாட்டு கட்டணங்களை வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாக செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரத்தியேக சேவையை தமிழக மின்சார வாரியம் நேற்று அறிமுகம் செய்துள்ளது.

EB கட்டணத்தை இனி WhatsApp-ல் செலுத்தலாம்.. TANGEDCO புது கட்டண சேவை..

TANGEDCO அறிவிப்பு.. இனி வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம் (TANGEDCO New WhatsApp EB Bill Payment Service):

மின் நுகர்வோர்களுக்கு (electrical consumers) எளிதான ஆன்லைன் பில் கட்டண முறையை (EB online bill payment service) செயல்படுத்தும் நோக்கத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) தற்போது வாட்ஸ்அப் பில் பேமெண்ட் சேவையை (Tangedco WhatsApp Bill Payment Service) அறிமுகம் செய்துள்ளது. TANGEDCO தகவலின் படி, இருமாதத்திற்கு 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு இந்த வாட்ஸ்அப் பில்லிங் சேவை கிடைக்கும்.

ஆம், உங்கள் இரண்டு மாத மின்சார பயன்பாடு 500 யூனிட்களுக்கு மேல் செல்லும் பொழுது, உங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் யுபிஐ கட்டண இணைப்புகளை (UPI Payment Links) TANGEDCO அனுப்பத் தொடங்குகிறது. மே 17, 2024 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட இந்த புதிய அம்சம், தமிழ்நாடு முழுவதும் டிஜிட்டல் பேமெண்ட் வசூலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதை பொதுமக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது, மின் ​​நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்கள் மின் கட்டணங்களை நேரடி சேகரிப்பு மையங்களில் (direct collection centres) செலுத்துகின்றனர். சிலர் கட்டணம் செலுத்தும் பேமண்ட் ஆப்ஸ் (payment apps) மூலமாகவோ அல்லது Tangedco இன் சொந்த மொபைல் ஆப்ஸ் (TANGEDCO Mobile Apps) மூலமாகவோ அல்லது Tangedco-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் (TANGEDCO Official Website) மூலமாகவோ செலுத்துகின்றனர். இதேபோல் இனி வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்.

EB கட்டணத்தை இனி WhatsApp-ல் செலுத்தலாம்.. TANGEDCO புது கட்டண சேவை..

வாட்ஸ்அப் மூலம் இபி பில் கட்டணத்தை எப்படி ஆன்லைனில் பாதுகாப்பாக செலுத்துவது?

இந்த சேவையை பெறுவதற்கு மின் நுகர்வோரின் மொபைல் எண் (mobile number) அவர்களுடைய மின்சார கணக்கு எண்ணுடன் (EB consumer number) ஆன்லைனில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் எண் இன்னும் ஆன்லைன் சேவையுடன் இணைக்கப்படவில்லை என்றால், உடனே Tangedco-வின் இணையதள பக்கத்திற்கு சென்று உங்கள் மொபைல் எண்ணை ரெஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள். ஆன்லைனில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்த நுகர்வோர் 94987 94987 என்ற வாட்ஸ்அப் எண்ணிலிருந்து மெசேஜ் கிடைக்கும்.

உங்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ் உடன் ஒரு லிங்க் வழங்கப்படும். இதை கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமான UPI ஆப்ஸ் மூலம் மின்கட்டணத்தை செலுத்தலாம். முக்கிய குறிப்பு, TANGEDCO என்ற லோகோவுடன் வாட்ஸ்அப் இல் பச்சை டிக் மார்க் (green-tick mark) இருக்கும் சாட்டில் இருந்து கிடைக்கும் இணைப்பை மட்டும் கிளிக் செய்யவும். பச்சை டிக் மார்க் இருக்கும் பக்கம் மட்டுமே அதிகாரப்பூர்வ TANGEDCO-வின் வாட்ஸ்அப் கணக்கு என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் மின்கட்டண பேமெண்ட் லிங்க் பச்சை நிற டிக் கொண்ட அசல் டாங்கெட்கோ கணக்கில் இருந்து தான் வருகிறதா என்பதை ஒவ்வொரு முறையும் பாதுகாப்பிற்காக செக் செய்துகொள்வது சிறந்தது. இந்த புதிய Whatsapp பில்லிங் சேவை முதற்கட்டமாக 500 யூனிட்களுக்கு மேல் மின்சார நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆரம்ப பின்னூட்டங்களை மதிப்பிட்ட பிறகு இந்த வசதி அனைத்து நுகர்வோருக்கும் விரிவுபடுத்தப்படும் என்று TANGEDCO அறிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TANGEDCO Launched New WhatsApp Via UPI EB Bill Payment Service For Consumers Used Above 500 Unit Electricity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X