TANGEDCO அதிரடி.. EB பில் பணம் செலுத்த புது முறை.. உங்ககிட்ட WhatsApp இருக்கா? கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க..
தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) இன்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மின்சார பயனாளிகளுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலம், இனி பொதுமக்கள் அவர்களுடைய மின் கட்டணத்தை (EB bill charges) வாட்ஸ்அப் (WhatsApp) வழியாக செலுத்தலாம் என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வாட்ஸ்அப் சேவை மூலம் பொதுமக்கள் எப்படி வீட்டிலிருந்தே மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று பார்க்கலாம்.
டான்கேட்க்கோ (TANGEDCO) என்றழைக்கப்படும் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பொதுமக்களின் வசதிக்கேற்ப பல சேவைகளை அறிமுகம் செய்த வண்ணமாக இருக்கிறது. முன்னொரு காலத்தில், பொதுமக்கள் அவர்களுடைய மின்சார கட்டணத்தை செலுத்த, நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையை நிலவி வந்தது. அதை சரி செய்ய Tangedco சில வருடங்களுக்கு முன்பாக ஆன்லைன் (eb bill online payment) சேவையை அறிமுகம் செய்தது.

TANGEDCO அதிரடி.. EB பில் பணம் செலுத்த புது முறை:
ஆன்லைன் சேவையின் (online service) மூலம், பொதுமக்களுக்கு அவரவர் மின்சார கணக்கு எண்ணிற்கு (EB consumer number) சொந்தமாக கஸ்டமர் எண்ணிற்கு ஐடி (ID) வழங்கப்பட்டுள்ளது. அவரவர் பயனர் விபரம் மற்றும் பாஸ்வோர்ட் (Password) தகவலை உள்ளிட்டு, மின்சார கட்டண தகவல்களை அறிந்துகொள்ளும் சேவையை தமிழக மின்சார வாரியம் அறிமுகம் செய்திருந்தது. இதன் மூலம் பொதுமக்களுக்கு நேரம் மிச்சமானது. அதேபோல், மின்சார கட்டணம் செலுத்துவது எளிமையானது.
தற்போது தமிழக மின்சார வாரியம் (Tamil Nadu Electricity Board), பொதுமக்களின் மின்சார கட்டணத்தை செலுத்த இன்னும் எளிமையான சேவையை இப்போது அறிமுகம் செய்துள்ளது. இனி தமிழ்நாட்டு மின்சார பயனர்கள் அவர்களுடைய வாட்ஸ்அப் கணக்கு (WhatsApp account) வழியாக பணம் செலுத்தும் சேவையை Tangedco தான் உருவாக்கியுள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்த மக்கள் அவர்களுடைய போனில் '94987 94987' என்ற எண்ணை சேவ் செய்துகொள்ள வேண்டும்.
இந்த மொபைல் எண்ணை உங்கள் போனில் சேவ் (Save) செய்த பிறகு, வாட்ஸ்அப் ஓபன் செய்யவும், இப்போது உங்கள் காண்டாக்ட் (Contact) பட்டியலில், Tangedco லோகோவுடன் கூடிய பச்சை டிக் மார்க் கொண்ட வாட்ஸ்அப் கணக்கு காண்பிக்கப்படும். பச்சை நிற டிக் (Green tick mark) உள்ள வாட்ஸ்அப் கணக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட உண்மையான கணக்கு என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினால் போதும்.
உங்ககிட்ட WhatsApp இருக்கா? கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க:
பல மின் சேவை விருப்பங்கள் காண்பிக்கப்படும், இதிலிருந்து பே பில் (Pay bill) போன்ற விருப்பங்களை கிளிக் செய்து, உங்கள் மின்சார கட்டணங்களை செலுத்தலாம். அதேபோல், வியூ பில் (View Bill) விருப்பத்தை கிளிக் செய்து, உங்கள் மின்சார கட்டண தகவல்களை இந்த விருப்பத்தில் பார்க்கலாம். கட்டணத்தை செலுத்த பே பில் என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது UPI ஆப்ஸ் விருப்பங்கள் பட்டியலிட்டு காண்பிக்கப்படும். உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அணைத்து விதமான யுபிஐ ஆப்ஸ்கள் காண்பிக்கப்படும். இதில் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற ஆப்ஸ்கள் காண்பிக்கப்படும். அதிலிருந்து ஒன்றை தேர்வு செய்து, உங்கள் பின் நம்பரை (PIN number) உள்ளிட்டு, சரியான மின்சார கட்டணத்தை செலுத்தலாம் என்று TANGEDCO தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications