Home
News

TANGEDCO உதவி எண்.. மழையில் கரண்ட் கட்.. மின்வயர் அறுந்தால்.. துண்டிக்கப்பட்டால்.. உடனே இந்த எண்ணை அழைக்கவும்

அடுத்த 3 மணி நேரத்தில், 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம். மழை நேரத்தில் மின் வயர் கட் ஆனால், உடனே மக்கள் இந்த எண்ணை அழைத்து புகார்அளிக்கவேண்டும் என்று TANGEDCO அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை எல்லா மாவட்டங்களையும் நனைத்து வருகிறது. சில மாவட்டங்களில் ஆங்காங்கே தண்ணீர் வெள்ளப்பெருக்காக மாறியதையும் பார்த்து வருகிறோம். இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TANGEDCO உதவி எண்.. மழையில் கரண்ட் கட்.. மின்வயர் அறுந்தால்..

மழையில் கரண்ட் கட்.. மின்வயர் அறுந்தால்.. துண்டிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழை நேரங்களில் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படுவது இயல்பு. நீண்ட நேரம் மின்சாரம் இல்லை என்றால், உங்கள் பகுதியில் எங்கேயும் மின் இணைப்பு வயர்கள் அறுந்திருக்கிறதா என்பதை செக் செய்ய வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மழை காரணமாக மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு சாலைகளில் விழுந்து கிடக்கும் நிலை உருவாக்கியுள்ளது.

இது மிகவும் ஆபத்தானது என்பதனால், இத்தைகைய சிக்கலை உடனுக்குடன் சரிசெய்ய TANGEDCO ஒரு புதிய ஹெல்ப்லைன் மொபைல் நம்பரை அறிமுகம் செய்துள்ளது. Tangedco அறிமுகம் செய்துள்ள இந்த புதிய மொபைல் எண்ணிற்கு நீங்கள் அழைப்பு விடுத்து, உங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள புகார்களை பற்றி தெரியப்படுத்தலாம். என்று TANGEDCO தெரிவித்துள்ளது.

இந்த உதவி எண்ணின் மூலம் புகார் அளிக்கப்படும் புகார்கள் முடிந்த வரை உடனுக்குடன் சரிசெய்யப்படும் என்று TANGEDCO உறுதியளித்துள்ளது. இனி மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு, அறுந்து இருப்பதை மக்கள் கண்டால், உடனே உதவிக்கு TANGEDCO மொபைல் எண் ஆன ''9498794987'' எண்ணை அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த தகவலை டான்கேட்கோ தனது எக்ஸ் பக்கம் வாயிலாக பதிவிட்டு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TANGEDCO உதவி எண்.. மழையில் கரண்ட் கட்.. மின்வயர் அறுந்தால்..

TANGEDCO உதவி மொபைல் எண் (TANGEDCO helpline mobile number):

டான்கெட்கோ (TANGEDCO) தனது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக வெளியிட்ட பதிவில், என்ன குறிப்பிட்டிருந்தது என்பதை இப்போது பார்க்கலாம். Tangedco எக்ஸ் (X) பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததாவது, "கோடைகால மழை நேரங்களில் பலத்த காற்று மற்றும் பலத்த மழையின் காரணமாக மின் கம்பங்கள் அருகில் யாரும் செல்ல வேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை யாரும் தொடாதீர்கள். உடனே மின்வாரியத்திற்கு 9498794987 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளது.

கோடை மழையில் மின்வயர் அறுந்து விழுந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) இப்போது தெளிவாக தெரிவித்துவிட்டது. பொதுமக்களின் தேவை அறிந்து, ஆபத்தை குறைக்கவும், உடனடி நடவடிக்கை எடுக்கவும், மக்கள் எந்நேரத்தில் வேண்டுமானாலும் இந்த '9498794987' என்ற எண்ணை அழைத்து, புகார் அளிக்கலாம் என்று TANGEDCO அறிவித்துள்ளது.

இந்த தகவல் பற்றி தெரியாத மக்களுக்கும் இந்த தகவலை பகிர்ந்து உதவும் மாறு Tangedco கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பதிவை படித்த பிறகு, நீங்களும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த உதவு எண் பற்றிய விபரங்களை பகிர்ந்து, அவர்களுக்கும் இந்த செய்தியை தெரியப்படுத்தும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TANGEDCO Advice People To Call This Helpline Mobile Number For Electric Wire Cut Down and Power Cuts During Rain In TN
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X