தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!
திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பெரிய தலை வழியாய் இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளம். அதன்படி தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புதிய திரைப்படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது.

சட்டவிரோதமாக பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ்
தியேட்டங்களில் வரும் புதிய படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதள முகவரிகளை முடக்க வேண்டும் என இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம்
உத்திரவிட்டுள்ளது.

உயர்நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது
அதன்படி அனுமதியின்றி சினிமா மற்றும் டிவி தொடர்களை வெளியீடும் தமிழ் ராக்கர்ஸ் லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கும் தடை விதிக்க உயர்நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது.

உடனே தடை விதிக்க வேண்டும்
குறிப்பாக அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் தயாரிப்பு நிறுவனமான வார்னஸ் பிரதர்ஸ் நிறுவனம், டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அது என்னவென்றால், தாங்கள் தயாரிக்கும் சினிமா மற்றும் டிவி தொடர்களை தமிழ்ராக்கர்ஸ் லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் அனுமியின்றி வெளியிடுவதாகவும்,எனவே அந்த இணையதளங்களுக்கு உடனே தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வெளிவந்துள்ளது.

கேட்மூவிஸ், லைம்டொரன்ட்ஸ்
மேலும் வார்னஸ் பிரதர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தமிழ் ராக்கர்ஸ், இ,இசெட் டிவி, கேட்மூவிஸ், லைம்டொரன்ட்ஸ் போன்ற இணையதளங்கள், தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி
தொடர்களை வெளியிடுவதாகவும் இதனால் பெரும் இழப்பை சந்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இடைக் கால உத்தரவு பிறப்பித்தார்
எனவே இந்த மனுவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார், பின்னர் தமிழ் ராக்கர்ஸ் லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்குமாறு இணையதள நிறுவனங்களுக்கு அவர் இடைக் கால உத்தரவு பிறப்பித்தார்.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம்
பின்பு தயாரிப்பு நிறுவனங்களின் காப்புரிமையை மீறும் இணையதளங்களை இடைநீக்கம் செய்யுமாறு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கும் உத்தவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications