ஹோட்டல் அறையில் மாட்டிய மல்லிகா..ஹெல்ப் செய்த காவலன் SOS செயலி! என்ன நடந்தது?
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டல் அறையில், மல்லிகா என்ற டெக்கி தனியாகத் தங்கி இருந்திருக்கிறார். ஓட்டல் கழிவறையை உபயோகிக்கும் போது தான் அந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. உதவிக்கு ஹெல்ப், ஹெல்ப் என்று கத்தியும் யாரும் வரவில்லை. ஆனால் காவலன் வந்தான், உண்மையில் என்ன நடந்தது தெரியுமா?

20 நிமிடங்கள் போராடிய மல்லிகா
தனியார் நட்சத்திர ஓட்டல் அறையில் தங்கியிருந்த இந்த பெண், காலை நேரத்தில் ஓட்டலின் கழிவறையை பயன்படுத்தியுள்ளார். கழிவறையிலிருந்து வெளியே வர மல்லிகா முயன்ற போது, கழிவறை கதவின் தாழ்ப்பாள் திறக்க முடியாமல் சிக்கிக்கொண்டது. 20 நிமிடங்கள் வரை கதவின் தாழ்ப்பாளைத் திறக்க முயன்றுள்ளார்.

ஹெல்ப், ஹெல்ப் என்று கூச்சல்
மல்லிகாவின் 20 நிமிட முயற்சி தோல்வி அடைந்ததும், அவருக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது. ஓட்டல் கழிவறையிலிருந்து ஹெல்ப், ஹெல்ப் என்று கூச்சல் போட ஆரம்பித்துள்ளார். இருப்பினும் ஓட்டல் ஊழியர்களின் செவிகளுக்கு அது எட்டவில்லை. அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

காவலன் SOS செயலி
சிறிய அறைக்குள் மாட்டிக்கொண்ட மல்லிகா, தனது ஸ்மார்ட்போனை எடுத்து உதவிக்கு அழைக்க முயன்றுள்ளார். ஆனால், சிக்கலை சந்தித்துள்ளார், கழிவறைக்குள் சிக்னல் சுத்தமாக இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அடுத்த 10 நிமிடம் யோசித்துள்ளார். அப்போது தான் அவர் ஸ்மார்ட்போனில் காவலன் SOS செயலி இருப்பது நியாபகம் வந்துள்ளது.

2 நிமிடத்தில் காவல்துறை வந்தது
தமிழகக் காவல்துறை அண்மையில், SOS எமர்ஜெண்சி முறையில் செயல்படும் காவலன் பயன்பட்டு செயலியைக் கூகிள் பிளேஸ்டோரில் வெளியிட்டது. இந்த செயலியைப் பயன்ப்படுத்தி தான் மல்லிகா காவல்துறைக்குத் தான் கழிவறையில் சிக்கிக்கொண்டதைத் தெரிய வைத்துள்ளார். மல்லிகா தகவல் தெரிவித்த 2 நிமிடத்தில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

மல்லிகாவை மீட்க முயன்ற காவல்துறையினர்
காவல்துறையினர் வந்த பின்பு தான் ஓட்டல் நிர்வாகத்திற்கு, மல்லிகா கழிவறையில் மாட்டிக்கொண்டது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் அவர் தங்கி இருந்த அறைக்குச் சென்று, அவரை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் தாழ்ப்பாள் கடுமையாகச் சிக்கிக்கொண்டதனால், இறுதியில் கதவை உடைத்து மல்லிகாவை வெளியில் கொண்டு வந்துள்ளனர்.

10 லட்சம் பயனர்கள் பயன்படுத்தும் காவலன் உங்களிடம் உள்ளதா?
தமிழ்நாட்டில் காவலன் செயலியைப் சுமார் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்றும், அதில் சுமார் 1.60 லட்சம் பயனாளர்கள் சென்னையில் இருப்பதாகவும் காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. உங்கள் பாதுகாப்பிற்கு இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து ரெட் பட்டனை ஒருமுறை அழுத்தினாள் போதும். உடனே காவல்துறை விரைந்து வரும்.

தமிழகக் காவல்துறைக்கு ஒரு சல்யூட்
நீங்கள் இருக்கும் இடத்தின் ஜிபிஎஸ் விபரம் காவல்துறை கட்டுப்பாடு அறையில் காட்டப்படும். உடனே அருகில் இருக்கும் ரோந்து வாகனத்துடன் காவல்துறையினர் நீங்கள் இருக்கும் இடத்திற்கு விரைந்து வருவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நெட்வொர்க் இல்லாமல் காவலன் செயலி மூலம் மல்லிகா காப்பாற்றப்பட்டதற்கு, தமிழகக் காவல்துறைக்கு ஒரு சல்யூட்.


Click it and Unblock the Notifications