ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை! குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி!
அடல்ட் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோ தளங்கள், இவற்றை வழங்கும் இலவச மற்றும் கட்டண வலைத்தளங்களை அடையாளம் கண்டு உடனே அவற்றை முடக்கம் செய்து, தவறுகளைத் தடுக்குமாறு தமிழகக் காவல்துறை, மாநிலத்தில் உள்ள இன்டர்நெட் சேவை வழங்குநர்களுக்கு ஆணையிட்டு ஒரு கடிதம் எழுதியுள்ளது.

600 பேரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது
குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் படங்களை பார்ப்பது குற்றமாகும். இந்த செயலை செய்த சுமார் 600 பேரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்களில் இது போன்ற ஆபாச வீடியோகளை சேமித்து வைத்தவர்கள், பார்த்தவர்கள் மற்றும் பிறருக்கு ஷேர் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகக் காவல்துறை கூறியுள்ளது.

போலீஸ் டைரக்டர் ஜெனரல் எம். ரவி கூறியதாவது
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற போலீஸ் டைரக்டர் ஜெனரல் எம். ரவி கூறுகையில், பல சேவை வழங்குநர்கள் பல பிரபலமான ஆபாச வலைத்தளங்களுக்கான அணுகலைத் தடுத்திருந்தாலும், இன்னும் சில குறைவான வலைத்தளங்களைச் சிலர் பார்க்க முயன்று வருகின்றனர்.

ஆபாச தளங்கள் முடக்கம்
தற்பொழுது அறியப்பட்டுள்ள சில தளங்களை முடக்கம் செய்யவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோல், தவறு செய்தவர்களின் மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்று கூறினார். இந்திய சட்டத்தின் படி இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67 (B) என்ன சொல்கிறது?
குழந்தைகளின் ஆபாச தகவல்களைப் பார்க்கும் குற்றத்திற்குச் சட்டம் தெளிவாகவுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67 (B) பிரிவின் கீழ் மின்னணு வடிவத்தில் சிறுவர் ஆபாசங்களை வெளியிடுவது, ஷேர் செய்வது, திருட்டுத் தனமாக ப்ரொவ்சிங் செய்வது ஆகிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சட்டம் கூறுகிறது. எலக்ட்ரானிக் வடிவங்களில் இந்த குற்றங்களைச் செய்பவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும்.

பாலியல் குற்றங்களுக்கும், ஆபாச வீடியோவுக்கும் தொடர்பு உள்ளது
நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கும், ஆபாச வீடியோ பார்க்கும் பழக்கத்திற்கும் தெளிவான தொடர்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அண்மையில், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடந்த இரண்டு கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இந்த பழக்கம் இருந்துள்ளது.

குற்றங்கள் அதிகரிக்க முக்கிய காரணம் இந்த ஆபாச வீடியோக்கள்
இவர்கள் வழக்கமாக ஆபாச தளங்களைப் பார்ப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதும், அவர்களின் போன்களில் ஆபாச காட்சிகளைப் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை பாலியல் குற்றங்கள் செய்ய தூண்டியதற்கு ஆபாச வீடியோக்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

600 சந்தேக நபர்களைச் கண்டறிந்துள்ள காவல்துறை
இந்த பழக்கம் சாமானியர்களை தவறு செய்யத் தூண்டுவதால் இதை முற்றிலுமாக முடக்கம் செய்து, நிலையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்று வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் குழந்தைகள் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து விநியோகித்த 600 சந்தேக நபர்களைச் கண்டறிந்துள்ளோம்.

தொடர்ந்து ஆபாச வீடியோ பார்க்கும் பழக்கத்தைக் கொண்ட 80 பேர்
ஏற்கனவே சென்னை நகரம் மற்றும் மத்திய மண்டலத்தில் அடையாளம் கண்ட குற்றவாளிகளின் மேல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.அதேபோல் குழந்தைகளின் ஆபாச விடியோக்களை தொடர்ந்து பார்க்கும் பழக்கத்தைக் கொண்ட 80 பேர் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோக தகவல்கள் முடக்கம்
அதேபோல், இன்டர்போல் மற்றும் பிற மத்திய நிறுவனங்களின் தகவல்களைக் கொண்டு பாலியல் துஷ்பிரயோக தகவல்களைக் கொண்ட வலைத்தளங்களை முடக்கம் செய்து வருகிறோம். சில நேரங்களில் மக்களே நேரடியாக இந்த நபர்களை அடையாளம் காட்டிக்கொடுத்துள்ளனர் என்று ரவி கூறியுள்ளார்.

காவலன் SOS ஆப்
அதுமட்டுமின்றி, தமிழக மாநில போலீஸ் மாஸ்டர் கண்ட்ரோல் ரூம் முன்முயற்சியின் எஸ்ஓஎஸ் பயன்பாடான கவாலன் பயன்பாட்டைப் பற்றிய விழிப்புணர்வையும் தமிழகக் காவல்துறை வழங்கிவருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈவ் டீசிங் போன்ற அவசரக்கால சூழ்நிலைகளில், கடத்தல் அல்லது வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகள் போன்ற ஆபத்தான நேரங்களில் உடனடியாக போலீஸ் உதவியை நாட காவலன் SOS பயன்பாட்டைப் பயன்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications