Home
News

ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஆட்டோ, டாக்ஸி உட்பட இந்த வேலைக்கும் இ-பாஸ் கட்டாயம்!

தமிழகத்தின் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக இருந்த நிலையில் தற்போது தொற்று பரவல் குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. தமிழக முதலைமச்சர், அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில் மேலும் ஒருவாரம் தளர்வுகளை நீடிக்க அறிவுரைவிடுக்கப்பட்டது. இதன்பேரில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளோடு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று

கொரோனா வைரஸ் நோய் தொற்று

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை குறைக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதிப்பு அளவை பொறுத்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் புதிய ஊரடங்கு மேலும் ஒரு வாரகாலம் நீடிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகளோடு ஊரடங்கு நீட்டிப்பு

தளர்வுகளோடு ஊரடங்கு நீட்டிப்பு

தற்போதைய முழு ஊரடங்கு 7.6.2021முதல் 14.6.2021 காலை 6 மணி வரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இறங்குமுகமாக இருந்த போதிலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஏறுமுகமாக இருந்து வருகிறது.

பரவலை பொறுத்து குறிப்பிட்ட தளர்வுகள்

பரவலை பொறுத்து குறிப்பிட்ட தளர்வுகள்

எனவே அந்த மாவட்டங்களில் குறிப்பிட்ட தளர்வுகளுடன் கட்டுப்பாடுகளும் பிற மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட தளர்வுகளுடன் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் சில தளர்வுகளோடு கட்டுப்பாடு வழங்கப்படுகிறது. இதில் எந்தெந்த சேவைகளுக்கு இ-பாஸ் தேவை என்பது குறித்து பார்க்கலாம்.

இ-பாஸ் தேவைக்கான வழிமுறைகள்

இ-பாஸ் தேவைக்கான வழிமுறைகள்

  • தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (HouseKeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
  • மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதி வழங்கப்படும்.
  • வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலு்ம வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோகளில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

    பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

    கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த பொது மக்களின் நலன் கருதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது எனவும் பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வருவதையும் கூட்டங்கள் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் அரசு முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

File Images

Best Mobiles in India

English summary
Tamilnadu LockDown Extend: Which Service Requires E-Pass in TamilNadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X