சென்னை மக்களே என்ஜாய்: 224 இடங்களில் இலவச வைஃபை ஹாட்ஸ்பாட் நிறுவிய அரசு- ACT அதிவேக இணையம் ஃப்ரீ

|

ACT SmartFiber டெக்னாலஜி மூலம் இயங்கும் 224 பொது வைஃபை ஹாட்ஸ்பாட்களை தமிழக அரசு திறந்து வைத்துள்ளது. ACT ஸ்மார்ட் ஃபைபர் டெக்னாலஜி ஆனது அதிவேகத்துடன் கூடிய பாதுகாப்பான இணைய அனுபவத்தை வழங்கும் தன்மை கொண்டது.

தமிழக அரசு ACT ஃபைபர் நெட்

தமிழக அரசு ACT ஃபைபர் நெட்

தமிழக அரசு ACT ஃபைபர் நெட் உடன் இணைந்து சென்னையில் இந்த 224 பொது வைஃபை ஹாட்ஸ்பாட்களை நிறுவியுள்ளது. தமிழக சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், Atria Convergence Technologies (ACT) தலைமை இயக்க அதிகாரி சந்தீப் குப்தா உள்ளிட்ட பலர் முன்னிலையில் இந்த ஃவைபை ஹாட்ஸ்பாட்கள் திறந்து வைக்கப்பட்டது.

224 வைஃபை ஹாட்ஸ்பாட்கள்

224 வைஃபை ஹாட்ஸ்பாட்கள்

224 வைஃபை ஹாட்ஸ்பாட்களில் ஒவ்வொன்றும் ACT ஸ்மார்ட் ஃபைபர் டெக்னாலஜி மூலம் இயங்குகிறது. இந்த தொழில்நுட்பமானது அதிவேக மற்றும் பாதுகாப்பான இணைய அனுபவத்தை உறுதி செய்யும். SmartFiber தொழில்நுட்பத்தை செயல்படுத்தியதன் மூலம் ACT Fibernet ஆனது Ookla அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது. சென்னையில் சீரான கம்பிகள் மூலம் அதிவேக இணையத்தை வழங்கும் நெட்வொர்க்காக ACT Fibernet திகழ்கிறது. சென்னையில் ஸ்ட்ரீமிங்கிற்கான சிறந்த பிராட்பேண்ட் ACT தான் என ஏப்ரல் 2021-ல் InMobi நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

ACT பொது வைஃபை போர்ட்டல்

ACT பொது வைஃபை போர்ட்டல்

ACT பொது வைஃபை போர்ட்டலில் இணைவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கையில், பயனர்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் அதற்கு அனுப்பப்படும் ஓடிபி-யை உள்ளிட வேண்டும். 45 நிமிடங்களுக்கு 20 எம்பிபிஎஸ் வேகத்தில் 1 ஜிபி டேட்டா இணையம் எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக வழங்கப்படும். இந்த 224 பொது வைஃபை ஹாட்ஸ்பாட்கள் ஆனது அம்மா உணவகங்கள், கார்ப்பரேஷன் பூங்காக்கள், தி-நகர் ஸ்மார்ட் சிட்டி, டிரிப்ளிகேன், ராயப்பேட்டை, நேப்பியர் பார்க் மற்றும் ரத்னா கஃபே சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் நிறுவப்பட்டிருக்கிறது.

சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்

சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பொது வைஃபை ஹாட்ஸ்பாட்கள் குறித்து கூறுகையில், "சென்னையில் நிறுவப்பட்டுள்ள பொது வைஃபை ஹாட்ஸ்பாட்கள் நகரை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கான ஒரு படியாகும். இதன்மூலம் ஏராளமானோர் இலவச இணையத்தை அனுபவிக்கவும் பொது இடங்களில் அதை நன்றாக பயன்படுத்தவும் முடியும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ACT Fibernet பல ஆண்டுகளாக நம்பகமான தொழில்துறையாக திகழ்ந்து வருகிறது. இந்த பொது வைஃபை ஹாட்ஸ்பாட் திட்டத்தை அமைக்க ACT Fibernet அளித்த ஆதரவுக்கு நன்றி" என குறிப்பிட்டார்.

குடிமக்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும்

குடிமக்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும்

Atria Convergence Technologies (ACT) சிஇஓ., தமிழக அரசின் இந்த திட்டம் குறித்து பேசுகையில், ஒவ்வொரும் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கு இணையம் நன்மைக்கான சக்தியாக பயன்படுகிறது. இலவச பொது வைஃபை ஆனது மாணவர்கள், தொழில் வல்லுனர்கள், பொது மக்கள் என அனைவருக்கும் உதவியாக இருக்கும். சென்னை மற்றும் அதன் குடிமக்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் தமிழக அரசின் இந்த மதிப்புமிக்க திட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பது பெருமை அளிக்கிறது என குறிப்பிட்டார்.

ACT ஃபைபர் வழங்கும் திட்டங்கள்

ACT ஃபைபர் வழங்கும் திட்டங்கள்

ACT நிறுவனம் பிராட்பேண்ட் இணைய சேவையில் பலகட்டம் முன்னோக்கி வளர்ந்து வருகிறது. தடையில்லா இணைய சேவையை வழங்க கம்பி மூலமான இணைய இணைப்பை ACT நிறுவனம் வழங்குகிறது. ACT ஃபைபர் வழங்கும் திட்டங்களின் விவரங்கள் குறித்து பார்க்கையில், ரூ.549 விலையில் 40 எம்பிபிஎஸ் வேக அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. இது ACT ஸ்டார்டர் திட்டமாகும். அதேபோல் ரூ.820 விலையில் கிடைக்கும் திட்டத்தின் நன்மை குறித்து பார்க்கையில், இந்த திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டா வழங்கப்படுகிறது. இது ACT பேஸிக் பிளான் ஆகும். ACT நிறுவனம் 1000 எம்பிபிஎஸ் வரையிலான வேகத்துடன் கூடிய இணைய திட்டங்களை கொண்டிருக்கிறது.

File Images

Best Mobiles in India

English summary
TamilNadu Government Launched 224 Public Wifi Hotspots in Chennai with ACT Fibernet

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X