தமிழகத்தில் இபாஸ் ரத்து- போக்குவரத்து அனுமதி: ஆனா இதுமட்டும் கட்டாயம்!

|

கொரோனா மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்றுதான் கூறவேண்டும்,குறிப்பாக இந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

பெரிய பாதிப்பை ஏற்படுத்தி

சரியாக கடந்த ஜூன் மாதம் முதல் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இப்போது நான்காம் கட்ட தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தளர்வுகள் தொடர்பாக மாநில அரசு இன்று வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைய உள்ள ஊரடங்கு மேலும் சில தளர்வுகளுடன் ப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழியாக தமிழகத்திற்கு

வெளிவந்த தகவலின்படி தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பொதுமக்கள் இ-பாஸ் இன்றி பயணிக்க அனுமதிக்கப்படகிறது. பின்பு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்கள் வழியாக தமிழகத்திற்கு வர இ-பாஸ் நடைமுறை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

Lava Z93 பிளஸ் மூன்று பின்பக்க கேமராவுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!Lava Z93 பிளஸ் மூன்று பின்பக்க கேமராவுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

 ஆதார், பயணச் சீட்டு மற்றும்

அதன்படி ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணபிக்கும் மக்களுக்கு Auto-generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாகப் பெறும் வகையில் இ-பாஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பில் மாவட்டத்துக்குள்ளான

வெளிவந்த அறிவிப்பில் மாவட்டத்துக்குள்ளான பொது மற்றம் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகரப் பேருந்துப் போக்குவரத்து சேவை ஆனது 1.09.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ ரயில் சேவையானது 7.9.2020 முதல் செயல்பட

மேலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது 7.9.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பின்பு வணிக வாளகங்கள்,அனைத்து ஷோரூம்கள் மற்றம் பெரிய கடைகள் 100சதவிகிதப் பணியாளர்களுடன் மத்திய அரசின் குளிர்சாதன வசதி குறித்த வழிகாட்டுதல் நடைமுறைகளைப் பின்பற்றியும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

வெளியில் செல்லும்போது முகக்கவசம்

குறிப்பாக பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, பின்பு மக்கள் வீட்டிலும்பணிபுரியும் இடங்களில் கூட அடிக்கடி சோப்புகளைப் பயன்படுத்தி கைகளைக் கழுவவும் உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்,

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், தமிழகத்திற்கு உள்ளே இனி பயணிக்க யாருக்கும் தடை இல்லை, ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இ-பாஸ் முறை அமலில்ல இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வர வேண்டும் என்றால் எப்போதும் இ பாஸ் விண்ணப்பிக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Tamil Nadu extends lockdown till September 30 with many relaxations: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X