இ-பதிவு அப்ளை செய்வதில் சந்தேகமா?- யோசிக்காம இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

|

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா., உலகின் 212 நாடுகளில் பரவித் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில, அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இ-பாஸ் நடைமுறை

இ-பாஸ் நடைமுறை

அதேபோல்COVID-19 2020 தடுப்பூசி தொடர்பாக அனைத்து குடிமக்களுக்கும் அதன் விஷயங்களை எளிதாக தெரிவிக்க மத்தியசுகாதார அமைச்சகம் கோவின் (coWIN App) டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கோவின் பயன்பாடு தளம்தடுப்பூசியை சுயமாக பதிவு செய்ய அனுமதிக்கிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சில மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகித்து வருகிறது. அதிலும் சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருப்பூர், தஞ்சாவூர்,காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் இந்த கொரோனா தொற்று சற்று அதிகமாக காணப்படுகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்

தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் தொடர்ந்து தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தீவிரமான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மீண்டும் இ-பாஸ் நடைமுறை கொண்டுவந்து அதில் புதிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

அதிகரிக்கும் இரண்டாம் அலை

அதிகரிக்கும் இரண்டாம் அலை

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதை குறைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. உயிரிழப்போர் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஏணைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் இபாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பயணங்களுக்கு இபாஸ் நடைமுறை

பயணங்களுக்கு இபாஸ் நடைமுறை

கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 10 ஆம் தேதி முதல் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இ-பாஸ் நடைமுறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள்ளும், வெளிமாநிலத்துக்கும், வெளி நாட்டுக்கும் பயணிக்க இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மூன்று வகையான காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. அது மருத்துவம், முதியோர் பராமரிப்பு மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. மேலும் அத்தியாவசிய தொழிற்முறை பயணங்களுக்கு ஆராய்ந்து அனுமதி வழங்கப்படுகிறது.

காலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே பயன்பாடு

காலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே பயன்பாடு

சாதாரண மக்களால் இ-பாஸ் பதிவு முறையை செயல்படுத்த முடியவில்லை எனவும் கணினி புலமை வாய்ந்தவர்களால் மட்டுமே இ-பதிவு செய்ய முடிகிறது என கூறப்படுகிறது. அதேபோல் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சனைகள் இ-பதிவு நடைமுறையில் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. இதையடுத்து இ-பதிவு குறித்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை 1100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமில்லா சேவையை காலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே பயன்படுத்த முடியும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்

தொடர்பு கொள்ள வேண்டிய எண்

இ-பதிவு செய்யும் முறைகள் குறித்து, ஏதேனும் சந்தேகம் இருந்தால், 9498181236 என்ற மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். அதேபோல் மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினால் அவர்கள் 9498130011., 044-23452320 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என கமிஷனர் சங்கர் ஜிவால் குறிப்பிட்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
Tamilnadu Epass: Toll Free Number announced to resolve Doubts Regarding E-pass

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X