இனி அந்த பிரச்சனை இல்ல., இந்த எல்லா காரணங்களுக்கும் இ-பாஸ் இருக்கு- மாநகராட்சி அறிவிப்பு!

|

இந்த கொரோனா வைரஸ் முதலில் ஜலதோஷம், உடல் வலி, இருமல், தும்மல், காய்ச்சல், நெஞ்சுவலி கடைசியில் மரணம் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இது லேசான காய்ச்சலில்தான் இது துவங்கும் எனக் கூறப்படுகிறது.

இருப்பவர்களுடன்

கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தால் வைரஸ் தொற்று வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது. இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை நேரடியாக சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்கு

குறிப்பாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களிடம் இருந்து மற்ற நபர்களுக்கு நோய் தொற்று எளிதாக பரவுகிறது. இதனால் கொரோனா நோய் தெர்ற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள், செவிலியர்கள் முழு உடல் கவச உடை அணிந்து சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரேஷன் கார்டு அட்டை உங்களிடம் இல்லையா? அப்படினா இதை உடனே செய்யுங்கள்!

தகவலின்படி இபாஸ்

அன்மையில் வெளிவந்த தகவலின்படி இபாஸ் பெறுவதற்கு புதிய வசதிகள் தற்போது சேர்கப்பட்டுள்ளதாக மாநாகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னையில் அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அயனாவரத்தில் கொரோனா குறித்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கொரோனாவில்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் தெரிவித்தது என்னவென்றால், கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகும் சதவிகிதம் 87% ஆக உள்ளது. இதற்கு தினசரி அடிப்படையில் பரிசோதனைகளை அதிகரித்து முக்கிய பங்கு வகித்துள்ளது.

குறைப்பதை நோக்கி அதிக கவனம் இருக்க வேண்டுமென்ற முதல்வரி

மேலும் இறப்பு விகதத்தை குறைப்பதை நோக்கி அதிக கவனம் இருக்க வேண்டுமென்ற முதல்வரின் அறிவுறுத்தலின்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த கொரோனா பரவலை பொருத்தவரை வட மண்டங்களில் சமநிலை அடைந்துள்ளது என்றும், தென் மண்டலங்களிலும் கூட சமநிலை அடையத் துவங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மண்டலங்களிலும் சமநிலை

குறிப்பாக மத்திய மண்டலங்களிலும் சமநிலை அடையச் செய்யவதற்கு வேண்டி அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆரம்பகட்டத்தை விட பின் நாட்களில் குறைவதற்கு மக்களின் ஒத்துழைப்பு தான் காரணம். மேலும் சென்னை மாநகராட்சியின் இந்த களப்பணிகள் அனைத்தும் குறைந்தபட்சம் 3 அல்லது 4மாதங்களுக்கு தொடரும் என்று கூறப்படுகிறது.

 16லட்சம் பேர்

பின்பு இ-பாஸ் பெறுவதற்கு எப்போதும் இருக்கும் மூன்று காரணங்கள் இல்லாமல் பணி வியாபாரம் தொடர்பாக புதிய பகுதியும்ஏற்படுத்தப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்பு வழங்கிய பாஸ்களை விட 35சதவிகிதம் கூடுதலாக வழங்கிவருகிறோம்.

ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ-பாஸ் பெறலாம் என்று தெரிவித்த அவர் புரோக்கர்கள், தனி நபர்களை பொதுமக்கள் நாட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

தற்சமயம் 24 தனிமைபடுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமே சென்னையில் உள்ளது. வீட்டு தனிமைபடுத்தலில் 16லட்சம் பேர் இதுவரை இருந்தார்கள். இவர்களில் 12லட்சம் மக்கள் குணமடைந்துள்ளனர். 4லட்சம் பேர் மட்டுமே வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளார்கள்.

ஆலோசித்துதான்

குறிப்பாக மருத்துவர்கள், பொது போக்குவரத்து அரசின் உயர் மட்ட அளவிலான குழுவினர், கல்வியாளர்கள் ஆகியோரிடம் ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும். அதற்கு வேண்டிய ஆலோசனகைளை அரசு நடத்தி வருகிறது.

 பணிகளில் என்.ஜி.ஓ-

இந்த கொரோனா தடுப்பு பணிகளில் என்.ஜி.ஓ-க்களுடன் இணைந்ததற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது,தற்போதுள்ள இந்த

நடைமுறை அடுத்த மாதம் வரை கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tamilnadu Corporation Commissioner Says Newly Added Extra Reasons For e-Pass: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X