நேரடியாக 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் புகார் அளிக்க புதிய இணையதளம்..

|

இந்த ஆண்டு நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் (MK Stalin) முதல்வராகப் பதவியேற்றவுடன் பல புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாகப் பெண்களுக்கென்று இலவச பஸ் டிக்கெட், பால் விலை குறைப்பு என்று பல திட்டங்களை முதல்வர் மக்களுக்காக அறிமுகம் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த வரிசையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அறிமுகம் செய்த திட்டம் தான் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்னும் திட்டம்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தை மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் புகார் மனுக்களை ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது பெற்றார். அதன்படி, தான் முதலமைச்சர் ஆனவுடன் அந்த புகார்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று உறுதிப்படத் தெரிவித்திருந்தார். அதற்கென ஒரு தனித்துறையே உருவாக்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை

அதன்படி, தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றவுடன் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. முதல்வர் அறிமுகம் செய்த 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற துறைக்குச் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..

புகார் அளிக்க இந்த இணைய முகவரியை பயன்படுத்துங்கள்

புகார் அளிக்க இந்த இணைய முகவரியை பயன்படுத்துங்கள்

இந்த நிலையில், இந்த சேவையை மக்களிடம் இன்னும் நெருக்கமாக எடுத்து செல்லும் முயற்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய இணையத்தளத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்த இணையச் சேவை வெளியாகப் பொதுமக்கள் தங்களின் புகார்களை முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளமான http://cmcell.tn.gov.in என்ற முகவரி மூலம் புகார் அளிக்கலாம்.

பொது மக்கள் புகார் அளிப்பதற்கு ஆன்லைன் சேவை

பொது மக்கள் புகார் அளிப்பதற்கு ஆன்லைன் சேவை

புகார்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், புகார்கள் குறித்த தகவல்கள், புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புகார்களின் நிலை என்ன என்பது குறித்த அணைத்து விதமான தகவல்களும் இந்த இணையத்தின் மூலம் புகார் அளித்த பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். இனி புகார் அளிப்பதற்கு பொது மக்கள் நேரடியாக இந்த ஆன்லைன் சேவையை எளிமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Tamilnadu CM MK Stalin Announced New Cheif Minister Special Cell Website For Online Grievance Redressal : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X